செவ்வாய், 24 நவம்பர் 2009
நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட லிபரன் அறிக்கை, பாபர் மசூதி இடிப்பில் தொடர்புடையோருக்கு தண்டனை அளிக்கப் பரிந்துரைப்பதற்குப் பதில், அரசியல் சுயலாப நோக்கத்திற்காக மதங்களைப் பயன்படுத்துவோர் தண்டனை பெற வசதியாக புதிய சட்டம் இயற்ற பரிந்துரைக்கும் அறிக்கையாகவே உள்ளது.டிசம்பர் 6, 1992 ஆம் ஆண்டு நடைபெற்ற பாபர் மசூதி இடிப்பதற்குக் காரணமாக இருந்த முக்கியமான 68 பேரை அது சுட்டிக்காட்டுகிறது என சட்ட அமைசர் வீரப்ப மௌலி, அறிக்கை சமர்ப்பிப்பதர்க்கு முன்பு தொலைக் காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது உத்திரப் பிரதேச மாநில முதல்வராக இருந்த கல்யாண் சிங், அறிக்கையின் கடுமையான விமர்சினத்திற்கு ஆளாகியுள்ளார். பாபர் மசூதி தகர்க்கப்பட்ட போது இவர் பார்த்துக் கொண்டு இருந்ததாகவும், மசூதி இடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல் துறையினர் மீது எவ்வித நடவடிக்கையும் இவர் எடுக்கவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மேலும், அப்பொழுது பாஜகவின் சார்பில் அரசு பதவிகளில் இருந்த உமாபாரதி, கோவிந்தாசார்யா மற்றும் ஷங்கர் சிங் வகேலா அகியோரும் முக்கியக் குற்றவாளியாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளனர்.பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களான அடல் பிகாரி வாஜ்பாய் மற்றும் லால் கிஷன் அத்வானி ஆகியோர் "போலி மிதவாதிகள்" எனவும், பாபர் மசூதி இடிக்கப்பட வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் செயல்பட்டுள்ளனர் என்றும் லிபரன் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment