கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 30, 2010

கியாமத் நாளின் அடையாளங்கள்!!!!!!!!!!!

மகளின் தயவில் தாய்

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின்
அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 4777, 50

Sep 26, 2010

மஸ்ஜித் முபாரக் ல் சுகாதாரமான குடிநீர்


அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ல் அதிகமான மார்க்க மற்றும் சமுதாயப் பணிகள் நடைபெற்று வருகிறது அதன் அடிப்படையில் தொழுகைக்கு வருகிற மக்களும் இன்னும் மெயின் பஜாரில் செல்பவர்களும் தாங்களது தாகத்தை தனிக்கும் வன்னம் டபுள் ஃபில்டருடன் கூடிய சுத்தமான குடிநீர் தொட்டி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அதற்கு உதவிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். !

Sep 24, 2010

முக்கிய அறிவிப்பு

ஏக இறைவனின் திருப்பெயரால் ..

அன்பார்ந்த மார்க்கச் சகோதர சகோதரிகளே ! உங்கள் மீது அந்த அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !
இந்த அறிவிப்பு உங்களை பூரண நலத்துடனும், தூய இஸ்லாமிய சிந்தனையுடனும் சந்திக்கட்டுமாக !
ஒரு சில தின்ங்களுக்கு முன்பு நமது இந்த சைட்டில் PFI மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசியல் இயக்கமான SDPI ஆகிய இயக்கங்கள் பற்றி செய்தி வெளியிடப்பட்டது தாங்கள் அறிந்ததே. !

பெண் வீட்டு விருந்து ஒரு வரதட்சணையே!

          பணமாக பாத்திரமாக நகையாக நிலமாக வாங்குவது மட்டும் தான் வரதட்சணை என்று மக்கள் விளங்கி வைத்துள்ளார்கள்.ஆனால் உணவாக வாங்குவது அதாவது பெண் வீட்டில் போய் விருந்து சாப்பிடுவது அல்லது பெண் வீட்டில் விருந்து சமைத்து அண்டா குண்டாக்களில் வரவழைத்து மாப்பிள்ளை வீட்டில் உணவு பரிமாறுவது அல்லது மண்டபத்தில் நடக்கும் விருந்தில் பெண் வீட்டார் பகிர்ந்து கொள்வது இது போன்ற செயல்களும் வரதட்சணை தான் என்பது உணரப்படுவதில்லை.அது ஒரு சமூகக் கொடுமையாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் தவ்ஹீதுவாதிகளும் தடம் புரண்டு விடுகின்றனர். பெண் வீட்டு விருந்துக்குப் பக்காவாக வக்காலத்து வாங்குகின்றனர்.உண்மையில் பெண் வீட்டு விருந்து ஒரு கொடிய வரதட்சணையும் மாபெரும் சமூகக் கொடுமையும் ஆகும்.வரதட்சணைக்குரிய அனைத்து விளைவுகளும் இதற்கும் பொருந்தும்.

Sep 21, 2010

SDPI யி இன்னொரு முகம்

ஜனநாயக சிர்க் என்றும் அரசியல் சிர்க் என்றும் சொன்ன  PFI சகோதரர்கள் அரசியல் என்ற போர்வையில் SDPI என்ற கட்சியை உருவாக்கி சமுதாய பாதுகாவலர்கள் என்று காட்டிக்கொண்டு இன்று சமூக நல்லிணக்கம் என்ற பெயரில் வாழ்த்து தெரிவிக்கின்றோம். கொள்கையை விட்டு தடம் புரண்டு இணைவைத்தலை மறைவாக ஆதரிக்கின்றர்கள் இறைவன் அவர்களுக்கு நேர்வழி காட்டட்டும். இனிமேலும் மக்களை இணைவைத்தலின் பக்கம் அழைக்காமல் ஆரம்பத்தில் சொன்ன கொள்கையில் உறுதியாக இருப்பார்களா?

Sep 19, 2010

அச்சன்புதூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர பொதுக்குழு

நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நகர பொதுக்குழு மாவட்ட துணைத் தலைவர் டி.எம்.ஜபருல்லாஹ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

கடையநல்லூரில் TNTJ யின் தாவா பணிகள்

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால்  கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் சார்பாக பல்வேறு விதமாக தவ்ஹீத் அழைப்புப்பணி நடைபெற்று வருகிறது.

Sep 18, 2010

இப்படியும் மணிதர்களா?

பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியவின் ஆர்பாட்டத்தில் பாக்கர் ஆக்ரோஷ உரை

14 ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களுக்காக பாப்புலர் பிரண்ட்ஸ் நடத்திய கூட்டத்தில் பாக்கர் ஆவேஷ உரை நிகழ்தினராம்.........! ! ! ! !

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல போதுக் குழுக்கூட்டம்


அல்லாஹ்வின் பேரருளால் நோன்புப்பெருநாள் அன்று இரவு ஜித்தாவாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் பொதுக்குழு நடைபெற்றது.

Sep 12, 2010

கடையநல்லூர் பெருநாள் தொழுகை பத்திரிக்கை செய்தி

கடையநல்லூர் ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  சார்பில் 4 இடங்களில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. அது சம்பந்தமாக பத்திர்க்கையில் வந்த செய்திகள்  உங்கள் பார்வைக்கு.................

தினமலர் 

 தினமனி
 தினசூரியன்
 தினத் தந்தி

 தினகரன்
 தமிழ்முரசு

Sep 10, 2010

காயிதேமில்லத் திடலில் பெருநாள் திடல் தொழுகை

ஷவ்வால் பிறை காணப்பட்டதைத் தொடர்ந்து  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் நான்கு இடங்களில் திடல் தொழுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் காலை 6 மணி முதலே கடையநல்லூரைச் சார்ந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு , புத்தாடைகள் அணிந்து தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். இவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டர்கள் பேரீத்தம்பழம் மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர்.

Sep 9, 2010

பெருநாள் தொழுகை ஆட்டோ அறிவிப்பு

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் நபிவழிப் படி திடலில் பெருநாள் தொழுகை கடையநல்லூரில் நான்கு இடங்களில் இன்ஷா அல்லாஹ் நாளை ( 10.09.2010) நடைபெறவிருக்கிறது. அதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆட்டோ மூலம் ஊரில் அனைத்து இடங்களிலும் அறிவிப்பு செய்யப்பட்டது.

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக மஸ்ஜித் முபாரக ல் ஃபித்ரா விநியோகம்

அல்லாஹின் பெருதவியால் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக  நோன்பு பெருநாள் அன்று ஏழை மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும் நோக்கில் நபிகள் நாயகம் (ஸல்) காட்டித் தந்த முறைப்படி கூட்டாக ஃபித்ரா  விநியொகம் நடைபெற்று வருகிறது.

நோன்புப் பெருநாள் தொழுகை திடல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மனு

08.09.2010 (புதன்) மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் இந்த மனுவை கொடுப்பதற்காக டிஎன்டிஜே மற்றும் மஸ்ஜிதுல் முபாரக் நிர்வாகிகள் தலைமையில் காயிதே மில்லத் திடல் மக்கள் பெருந்திரளாகக் கூடினர்.

மஸ்ஜித் முபாரக் ல் நோன்பு கஞ்சி தாயாரிக்கும் பணி

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ல் ரமலான் மாதம் முழுவதும் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்ட்து. அதில் அதிகமான மக்கள் கலந்து பயனடைந்தனர். அதற்காக உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மஸ்ஜித் முபாரக் நிர்வாக கமிட்டி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.அவர்களுக் அல்லாஹ் ஈருலகிலும் நன்மையை வழங்குவானாக !

கடையநல்லூர் டிஎன்டிஜே ஆபீஸ் ல் ஃபித்ரா குறித்து ஆலோசனைக் கூட்டம்

07/09/2010 அன்று கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அலுவலத்தில் ஃபித்ரா விநியோகம் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மஸ்ஜித் முபாரக் பராமரிப்பு வேலை

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் பராமரிப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தாங்களின் மேலான பொருளாதார உதவிகளை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


Sep 8, 2010

அமீரக கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் இஃப்தார் நிகழ்ச்சி


ல்லாஹ்வின்  மகத்தான கிருபையால் கடந்த வெள்ளியன்று (03.09.2010 ) மூன்றவது ஆண்டாக துபாய் ஹோர் அல் அன்ஸ் கராச்சி தர்பார் உணவகத்தில் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமீரக கிளை சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி, அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சகோ.முஹம்மது அலி தலைமையில் நடைபெற்றது.

Sep 5, 2010

கடையநல்லூர் ல் பெருநாள் தொழுகை இடம் மற்றும் நேரம்.

ல்லாஹ்வின் மகத்தான கிருபையால் இன்ஷா அல்லாஹ் வருகின்ற பெருநாள் தினத்தன்று கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கடையநல்லூரில் நான்கு இடத்தில் பெருநாள் தொழுகை நடக்கவிருக்கிறது , அதன் விபரம் வருமாறு........
இடம்
உரை
நேரம்.
காயிதேமில்லத் திடல்
சகோ.எஸ்.எஸ்.யு.ஷைபுல்லாஹ் ஹாஜா
6:45
பேட்டை ரைஸ்மில் திடல்
சகோ.யூசுப் பைஜி
7:00
மர்யம் பள்ளித் திடல்
சகோ.அப்துல் பாஷித்
7:00
மக்கா நகர் தவ்ஹீத் பள்ளித்திடல்
சகோ.ரஹ்மத்துல்லாஹ்
7:00

Sep 4, 2010

பெருநாள் தொழுகை

திடலில் தொழுகை 

பெருநாள் தொழுகையை மஸ்ஜித் (பள்ளி வாசல்) அல்லாத வேறு திடல்களில் தான் தொழ வேண்டும்.

பள்ளி வாசல்களில் தொழுவது அல்லாஹ்வின் ரசூல் காட்டி தராத பித்'அத்தான செயலாகும்

Sep 2, 2010

யார் இந்த விடியல் வாதிகள்...????

தவ்ஹீதை ஷிர்க்காக மாற்றிய குருட்டு விடியல் அமைப்பினர்.
இருளை நோக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டும் குருட்டு விடியல் அமைப்பினர் தங்களது இயக்கத்தை ஆரம்பிக்கும் போது ஜனநாயகம் ஷிர்க் என்ற கொள்கையைத்தான் தங்களை நம்பிய இளைஞர்களுக்கு திரும்பத் திரும்பக் கூறி நம்ப வைத்தனர்.