கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 26, 2011

ஜித்தா மண்டல TNTJ- கடையநல்லூர் ஆலோசனைக் கூட்டம்

அல்லாஹ்வின் திருப்பெயரால்......

கடந்த 24-06-2011 வெள்ளி அன்று இரவு ஜித்தா வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களுடன் ஆலோசனை கூட்டம் ஜித்தா மண்டல அனைத்து நிர்வாகிகள் முன்னிலையில் நடந்தது அதில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.
1 - இன்ஷாஅல்லாஹ் வரும் 30-06-2011 வியாழன் அன்று இரவு (சௌதி நேரம்)8 மணிக்கு கடையநல்லூர் சகோதரர்கள் பொதுகுழு கூட்டதை கூட்டி மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பது.
2- அதில் மாநிலத்திலிருந்து சகோ. அப்துற் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி, அல்லது ஷம்சுல் லுஹா அல்லது அப்துன் நாசர் இவர்களில் ஒருவரை ஆன்லைன் மூலம் கடையநல்லூர் நிலவரத்தையும் தலைமயில் நிலையையும் சொல்வதுடன், சகோதரர்களின் இதுபற்றிய கேள்விகளுக்கும் பதில் அளிக்க செய்வது என்றும்.
3 - இருப்பில் உள்ள சந்தா தொகையினை பற்றி அந்த கூட்டத்தில் முடிவெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...!

Jun 25, 2011

டவுண் கிளையில் தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 23. 06. 2011 வியாழன் மஃரிப் தொழுகைக்குப் பிறகு புதுத்தெரு மேலவட்டாரம் சகோதரர் அச்சுக்கட்டி அஹ்மது அலி அவர்களின் வீட்டிற்கு முன்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ஏகத்துவக் கொள்கையைப் பற்றி உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் இந்த தெருமுனைப் பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். பெண்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே கேட்டுப் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்

ரஹ்மானியாபுரம் கிளையில் குர்ஆன் விளக்கவுரை

அல்லாஹ்வின் கிருபையால் ரஹ்மானியாபுரம் கிளையில் 24/06/11 அன்று நடைபெற்ற திருக்குர்ஆன் விளக்கவுரை வகுப்பில் சகோ.அப்துந் நாஸிர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.அதிகமான சகோதரர்கள் கலந்து பயன்பெற்றனர்.

Jun 24, 2011

ஏழை மாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

கடையநல்லூர் தமிழ்நாடு தல்ஹீத் ஜமாஅத் டவுண் கிளை சார்பாக பள்ளி மாணவ மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி 22.06.2011 இரவு 7 மணி அளவில் அட்டக்குளம் சின்னத் தெருவில் தவ்ஹீத் ஜமாத் மர்கஸில் வைத்து நகர தலைவர் அய்யுப் கான் தலைமையில் நடைபெற்றது..
     நகர செயலாளர் காஜா மைதீன்,பொருளாளர் அகமது அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு நல திட்ட மாவட்ட செயலாளர் குறிச்சி சுலைமான் அவர்கள் கல்வியின் அவசியத்தை பற்றிய உரை நிகழ்த்திமாணவ மாணவியருக்கு நோட்டு புத்தகங்களை வழங்கினார்
    இந்நிகழ்ச்சியில் உலகா, தாருஸ்ஸலாம் , ஹிதாயத்துல் இஸ்லாம் ,மசூதுதைக்கா மேல்நிலைப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சுமார் ரூபாய் 15,000 மதிப்புள்ள நோட்டு புத்தகங்களை அந்தந்த பள்ளியின் தலைமையாசிரியர்களால் தேர்வு செய்யப்பட்ட ஏழை மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டது..புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே..!

Jun 23, 2011

ஏகத்துவம் ஓர் வரலாற்றுப் பார்வை!


லக வரலாற்றில் தோன்றிய மதங்கள் கொள்கைகள் எல்லாம் ஒரு காலத்தோடு முடிந்து போய் அந்தக் கொள்கைகள் இருந்த இடமே இல்லாமல் போன வரலாறுகள் நிறையவே உண்டு. அந்தக் கொள்கைகளின் நம்பகமின்னையே இதற்கான பிரதான காரணமாகும்.

ஆனால் இஸ்லாம் இந்த உலகில் என்று தோன்றியதோ அன்றிலிருந்து இன்று வரை எந்த ஒரு தோழ்வியும் இன்றி வெற்றிக் கொடி நாட்டிய வரலாறு அனைவரும் அறிந்ததே!

இஸ்லாம் இப்பயெல்லாம் வெற்றிக் கொடி நாட்டியதற்கான காரணம் வரலாறு நெடிகிலும் மிகத் தெளிவாகவே இருக்கிறது.

நபிமார்களின் இறையச்சம், நேர்மை, நம்பகத்தன்மை, வார்த்தைத் தூய்மை இவைகளே இந்த இஸ்லாமிய மார்க்கம் இன்றும் நிலைப்பதற்கான முக்கிய காரணங்களாகும்.

அதிலும் இஸ்லாமிய மார்க்கம் சொல்லும் கொள்கை மற்ற அனைத்து மதங்களும், சித்தாங்களும் கொள்கைகளும் சொல்லும் அடிப்படைத் தத்துவத்துடன் நேர் மாறாக மோதும் கொள்கையாக இருக்கிறது.

Jun 20, 2011

SSU சைபுல்லாஹ் காஜா அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அனைத்துக் கிளைகளின் பொதுக் குழுக் கூட்டம் கடந்த 19.06. 2011 ஞாயிறு அன்று சரியாக காலை 10 மணிக்கு ஆரம்பமானது. இந்தப் பொதுக் குழுவில் கடையநல்லூர் டவுண், ரஹ்மானியா புரம், மக்கா நகர், பேட்டையைச் சார்ந்த தவ்ஹீத் சகோதரர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக் குழுவிற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் தலைமை தாங்கினார்கள். தணிக்கைக் குழு உறுப்பினர் அப்துர் ரஹ்மான் பிர்தவ்சி அவர்களும், மாவட்ட நிர்வாகிகள், மற்றும் அனைத்துக் கிளைத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
முதலாவதாக சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள் ஏகத்துவக் கொள்கைக்காக நபிமார்களும், ஸஹாபாக்களும் பட்டதியாகங்களை எடுத்துரைத்து அது போன்று தவ்ஹீத் வாதிகளும் ஏகத்துவத்திற்காக தியாகம் செய்ய ஒரு போதும் தயங்கக்கூடாது என்பதை சுருக்கமாக தனது உரையில் எடுத்துரைத்தார்கள்.
அதன் பிறகு மேலாண்மைக் குழுத் தலைவர் மௌலவி ஷம்சுல்லுஹா அவர்கள் கொள்கையில் உறுதி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அவர் தனது உரையில் ஸஹாபாக்கள் சத்திய மார்க்கத்திற்கு எதிராக தம்முடைய இரத்த உறவுகளே நின்ற போதும் அவர்கள் குருதி உறவிற்கு சிறிதும் முக்கியத்துவம் வழங்கவில்லை. கொள்கை உறவிற்குத் தான் அவர்கள் முக்கியத்துவம் வழங்கினார்கள். ஆனால் இன்றோ சிலர் சொந்த பந்தங்கள் என்று வரும் போது தம்முடைய கொள்கையில் ஆட்டம் கண்டு விடுகின்றனர் என்பது பற்றி விரிவாக எடுத்துரைத்து பெண்வீட்டு விருந்து எவ்வளவு பெரிய அனாச்சாரம் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.

Jun 19, 2011

எழுச்சியுடன் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகளின் சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் 19/06/2011 அன்று கடையநல்லூர் மறவர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் மாநில மேலாண்மை குழு தலைவர் சம்ஷுல் லுஹா அவர்கள் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் யூசுப் அலி, மாவட்ட செயலாளர் செய்யது அலி, அரசு நலத்திட்ட செயலாளர் குறிச்சி குளம் சுலைமான், துபை மண்டல தலைவர் முகம்மது நாசர், மாவட்ட துணைச்செயலாளர் அச்சன்புதூர் சுலைமான் மற்றும் நகர நிர்வாகிககள் முன்னிலை வகித்தனர்.


தொடக்க உரையாக மாநில அழைப்பாளர் அப்துந் நாசிர் அவர்கள் உரையாற்றினார். அதைத்தொடர்ந்து மாநில தணிக்கை குழு உறுப்பினர் அப்துல் ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கைகள், செயல்பாடுகள், மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்று விளக்கமாக பேசினார்.

Jun 12, 2011

கடையநல்லூர் அனைத்துக் கிளை தர்பியா-12.06.2011

கடையநல்லூர் TNTJ அனைத்து கிளைகளின் சார்பில் தர்பியா நிகழ்ச்சி 12.06.2011 அன்று கடையநல்லூரில் நடைபெற்றது.இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைப்பாளர்கள் சகோ.அப்துந் நாஸிர்,முஹம்மது நாஸிர்,ரஸ்மின்(இலங்கை) ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சியுரை வழங்கினர்.


ஜித்தா மண்டல கடையநல்லூர் TNTJ பொதுக்குழு

அல்லாஹ்வின் பேரருளால் ஜூன் 10 ஆம் தேதி ஜித்தா மண்டல TNTJ கடையநல்லூர் பொதுக்குழு மண்டல தலைவர் சகோ.நவ்ஷாத்(மேலக்காவேரி) அவர்களின் முன்னிலையில், சகோ.ஷாஜஹான் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து கிளை ஒருங்கிணைப்பாளர் சகோ.அல் அமீன் கடையநல்லூரில் இயங்கிக் கொண்டிருக்கும் கிளைகள் ஏன் உருவாக்கப்பட்டது, அந்த கிளைகளின் செயல்பாடுகள் , அவைகளின் செலவீனங்கள் , ஜித்தா உறுப்பினர்கள் கொடுக்கும் கடையநல்லூர் பள்ளிக்கான சந்தாக்களை பழைய நிர்வாகம் எவ்வாறு ஆறு பள்ளிகளுக்கும் பங்கிட்டு கொடுத்தார்கள், இனி நமது செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று விளக்கினார்கள். கடையநல்லூரில் வருகிற 19 ஆம் தேதி நடக்க இருக்கும் அனைத்து கிளை பொதுக்குழு கூட்டம் நடந்த பிறகு மீண்டும் மண்டல தலைமையின் அழைப்பின் கீழ் எல்லா உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்து கடையநல்லூர் TNTJ பொதுக்குழு கூட்டப்படும், என்று அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலுடன் முடிவு எடுக்கப்பட்டது. இதில் மண்டல பொதுச்செயலாளர், துணைச்செயலாளர், கிளை தலைவர் அப்துல்காதர், செயலாளர் கவுஸ் முஹம்மது, பொருளாளர் கலீல் புகாரி மற்றும் 25 க்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. துஆவுடன் அமர்வு நிறைவுற்றது. அல்ஹம்து லில்லாஹ்.


Jun 11, 2011

மஸ்ஜித் மர்யம்-ஜும்மா உரை (10.06.11)

கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் மஸ்ஜிதுல் மர்யத்தில் நடைபெற்ற ஜும்மா தொழுகையில் துபை மண்டல TNTJ தலைவர் சகோ.முஹம்மது நாஸர் MISC ஜும்மா உரை நிகழ்த்தினார்.


Jun 8, 2011

கடையநல்லூர் TNTJ கூட்டுப் பொதுக்குழு


ஏக இறைவனின் திருப்பெயரால்...

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 19.06.2011 ஞாயிறு காலை 10 மணிக்கு கடையநல்லூர் TNTJ  அனைத்துக் கிளைகளின் கூட்டுப் பொதுக்குழு மறவர் சமுதாய நலக்கூடத்தில் (BSNL அலுவலகம் எதிரில்) TNTJ மேலாண்மைக் குழு தலைவர் M.ஷம்சுல் லுஹா தலைமையில் மாநில தணிக்கைக் குழு  உறுப்பினர் K.S.அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி,மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது.
இப்பொதுக்குழுவில் அனைத்துக்கிளை கடையநல்லூர் TNTJ உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 
கடையநல்லூர் அனைத்துக் கிளைகள்

வேண்டாம் கந்தூரி உரூஸ் - சுவரொட்டிகள்

கந்தூரி,உரூஸ் கொண்டாட்டங்களை கண்டிக்கும் விதமாக கடையநல்லூர் TNTJ டவுண் கிளை சார்பில் நகர் முழுவதும் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.

அமீரக கடையநல்லூர் TNTJ ஆலோசனைக் கூட்டம்

இறையருளால் கடந்த 03/06/2011 அன்று அமீரகவாழ் கடையநல்லூர் TNTJ சகோதரர்கள் கலந்து கொண்ட மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் துபை TNTJ மர்கஸில் வைத்து அமீரக பொறுப்பாளர்.சகோ.இபுறாகிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. ஏகத்துவ கொள்கையின் அவசியமும்,நன்மைகளும் என்ற தலைப்பில் அவர் தலைமை உரையாற்றினார். துபை மண்டல TNTJ பொருளாளர் பரங்கிப்பேட்டை சகோ.இஸ்மாயில் அவர்கள் முன்னிலை வகித்தார்.அதனை தொடர்ந்து சகோ.மசூது கடையநல்லூரில் நடைபெற்று வரும் பணிகளைப் பற்றியும்,அப்பணிகள் தொடர்ந்து நடைபெற பொருளாதார ஒத்துழைப்பு அளிக்க வேண்டியதின் அவசியத்தினையும் குர்ஆன்,ஹதீஸ் அடிப்படையில் எடுத்துரைத்தார்.கடந்த காலப்பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் கடையநல்லூர் சகோதரர்கள் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்

Jun 7, 2011

சட்டமன்ற முற்றுகை போராட்டம் தேதி மாற்றம்


மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்குத் தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், 09/06/2011 வியாழக்கிழமை அன்று தமிழக சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்தது. அதற்காக மக்களை பெருந்திரளாக திரட்டும் பணியையும் முடுக்கியும் விட்டது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரங்களைக் கண்டு சுறுசுறுப்படைந்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை அழைத்து ”உணர்வு அலுவலகம் உங்களுடையது தான், 9 ஆம் தேதிக்குள் உங்கள் கையில் அந்த அலுவகம் ஒப்படைக்கப்படும்” என்று திட்டவட்டமாக உறுதியளித்தனர்.

Jun 5, 2011

சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்


சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த மமக ரவுடிகளை கண்டித்தும், அதற்கு துணைபோகும் காவல்துறையை கண்டித்தும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்
இன்ஷா அல்லாஹ்..
நாள் : 09.06.2011 வியாழக்கிழமை – காலை 10மணிக்கு…
உரிமையை நிலைநாட்ட
அலைஅலையாய் வா!
ஆர்ப்பரித்து வா!
அழைக்கிறது..

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தொடர்புக்கு :
9952056111
9952056555
9940319555
அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன். இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுட னும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். 

(அல்குர்ஆன் 61:8,9)