கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 30, 2012

போராட்டங்களில் வன்முறை வேண்டாம் !

    அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்)அவர்களை தவறாக சித்தரித்து அமெரிக்க கயவனால் வெளிட்ட படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கிளர்ந்து எழுந்தார்கள், அந்த அடிப்படையில் தமிழக முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தினார்கள், இதனால் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு வார காலம்   மூடும் அளவுக்கு தள்ளியது.

    தமிழகத்தில் தனி ஒரு ஜமாத்தாக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக தமிழகத்தின் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மக்கள் ஓன்று திரண்டு போராடினார்கள். இதில் 15.09.12 அன்று தமிழகத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் TNTJ அறிவித்து, அதன்படி தெளிவான
வழிகாட்டும் தலைமையின் கீழ் கட்டுகோப்பான தொண்டர்கள் மேற்பார்வையில் லட்சக்கனக்கான மக்கள் அமைதியான முறையில் போராடி தங்களுடைய எதிர்ப்பை அமெரிக்க அதிகாரத்திற்கு BBC,CNN...,போன்ற ஊடகங்கள் மூலமாகவும்  வெள்ளை மாளிகைக்கு தெரிவித்தது.

    ஆனால் தமிழகத்தில் உள்ள இருபதற்கும் மேற்பட்ட   பலகொள்கை கொண்ட முஸ்லிம் அமைப்புகளால் போராட்டம் நடத்தப்பட்டது. இதில்  முறையான வழிகாட்டும் தலைமை இல்லாமல் பல அமைப்பு தலைவர்கள் தொண்டர்களை முன்னால் விட்டு பின்னால் நின்று வேடிக்கை பார்த்ததால், தொண்டர்களின் உணர்ச்சிகளை கட்டுபடுத்த முடியாமல் இறுதியில் எதற்கும் சம்பந்தம் இல்லாத அப்பாவி பொதுமக்களின் சொத்துக்களுக்கும், காவல் அதிகாரிகளுக்கும்  பாதிப்பை ஏற்படுத்தியது  மட்டும் அல்லாமல் பொது சொத்துகள் சேதபடுத்தபட்டு போராட்டத்தில் கலந்து கொண்ட தொண்டர்கள் போலிஸ் தடி அடியால் இரத்த காயத்துடன் போராட்டம் முடிந்தது, இனி இதுபோன்ற கொள்கை இல்லாத தலைவர்கள் தலைமையில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று முடிவுடன் வீடு செல்லாமல் மருத்துமனைக்கு சென்றார்கள், இன்னும் சிலர்  போலிஸ் காவலிலும், கோர்ட் படிகளும் எறிவருகிறார்கள் என்றால் வேதனையான விசயமாக உள்ளது. இதே நிலை தமிழகத்தின் நெல்லையிலும்  நடந்தேறியது,

    நாடு சுதந்திரம் அடையும் முன்பு வரை போராடும் போர்க்குணம் கொண்ட இந்திய முஸ்லிம்கள்  ஐம்பது ஆண்டிற்கு பிறகு தற்போது தான் வீதியில் வந்து உரிமையை கேட்கும் நிலைக்கு முஸ்லிம்களை உருவாக்கி உள்ளது தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமாத்.ஆனால் தற்போது TNTJ அல்லாத மற்ற முஸ்லிம் அமைப்புகளால் நடத்தபட்ட  போராட்ட நிலையை பார்க்கும் போது இவர்கள் மீண்டும் மக்களை பழைய நிலைக்கு தள்ளிவிடுவார்களோ என்ற ஐயப்பாடு தோன்றுகிறது.

    எனவே  இதுபோன்ற போராட்டங்களில் சட்டத்திற்கு உட்பட்டு ரயில், பஸ் மறியல் என்று கூறி  பொதுமக்கள் மற்றும் பொது சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வன்முறைக்கு அறவே வழிஇல்லாமல் மார்க்கத்திற்கு உட்பட்டு அக்கிரமம் மற்றும் அநியாயத்திற்கு   எதிராக TNTJ நடத்துவது போன்ற  வீரியமான போராட்டங்கள் நடத்துமாறு  தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாத்தின் மேலாண்மை குழு தலைவர் சம்சுல்லுகா ரஹ்மானி முஸ்லிம்களை பத்திரிகை வாயிலாக கேட்டு கொண்டுள்ளார். 





No comments: