கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 30, 2012

TNTJ பேட்டை கிளையின் சார்பாக பெண்கள் பயான்

 29.09.2012 அன்று கடையநல்லூர் பேட்டை சந்தை தெற்குத் தெருவில்TNTJ பேட்டை கிளையின் சார்பாக பெண்கள் பயான் சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கியது. இதில் சகோதரி சபினா ஆலிமா அவர்கள் "ஷிர்க்" என்ற தலைப்பில் சுமார் 40 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார்கள். அதன் பிறகு பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மிகவும் பயன் உள்ள கேள்விகள் பல கேட்கப்பட்டு அதற்க்கு சகோதரி சபினா ஆலிமா அவர்களால் மிகச்சிறந்த முறையில் பதில் அளிக்கப்பட்டது. எல்லா புகழும் இறைவனுக்கே.


    இதில் அதிகமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர், கூட்ட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த வீட்டில் கூட்ட நெருக்கடியால் பெண்கள் வீட்டுக்கு வெளியே நின்று நிகழ்ச்சியே கேட்கும் நிலை ஏற்பட்டது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் இதை விட பெரிய இடத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்வது என்று பேட்டை கிளை  நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளனர்.போராட்டங்களில் வன்முறை வேண்டாம் !

    அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்)அவர்களை தவறாக சித்தரித்து அமெரிக்க கயவனால் வெளிட்ட படத்திற்கு எதிராக உலகம் முழுவதும் முஸ்லிம்கள் கிளர்ந்து எழுந்தார்கள், அந்த அடிப்படையில் தமிழக முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்ப்பை வெளிபடுத்தினார்கள், இதனால் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் ஒரு வார காலம்   மூடும் அளவுக்கு தள்ளியது.

    தமிழகத்தில் தனி ஒரு ஜமாத்தாக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக தமிழகத்தின் முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் மக்கள் ஓன்று திரண்டு போராடினார்கள். இதில் 15.09.12 அன்று தமிழகத்தில் சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் முற்றுகையிடும் போராட்டம் TNTJ அறிவித்து, அதன்படி தெளிவான

Sep 29, 2012

தாமிரபரணி கூட்டு குடிநீர் சம்பந்தமாக மாவட்ட மற்றும் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை மனு

இன்று கடையநல்லூர் வந்த மாவட்ட கலெக்டர்  மற்றும் கடையநல்லூர் தொகுதி உறுப்பினறாகிய  மாநில அமைச்சரிடம் மக்கா நகர் கிளை சார்பாக தாமிரபரணி கூட்டு குடிநீர் கடையநல்லூரின் எல்லா பகுதிக்கும் சீராக வழங்க கூறி கோரிக்கை மனு வழங்கப்பட்டது , இதில்  நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


Sep 25, 2012

TNTJ ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்

25-09-12 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு  தமிழ் நாடு தவ்ஹூத் ஜமா அத் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை சார்பாக ரஹ்மானியாபுரம் 4வது தெருவில் வைத்து மாபெரும் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.

இதில் .....,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாமண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

 23-09-2012 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தாமண்டல கடையநல்லூர் வாழ் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் ஆலோசனை செய்தார்கள் .

ஆலோசனையின் படி கீழ் கண்டவாறு தீர்மனிக்கபட்டது.

1, இதில் டவுண்கிளையின் தவ்ஹீத் பள்ளிக்கு இடம் வாங்குவதற்காக ஜித்தாவாழ் கடையநல்லூர் சகோதர்களை சந்திப்பது,

2, அனைத்து தமிழ் சகோதரர்கள் அனைவரையும் சந்தித்து நிதி திரட்டுவது,

3, இதற்கான சந்திக்க  முடிவு செய்து பகுதிவாரியாக பிரித்து கொடுக்கப்பட்டது. துஆவுடன் நிறைவுற்றது.


ஹஜ்ஜுபெருநாள் கூட்டுக்குர்பானி ஆலோசனை கூட்டம்


 24.09.2012 அன்று மஃரிப் தெழுகைக்கு பிறகு  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் கிளைகள் சார்பாக  ஹஜ்ஜுபெருநாள் கூட்டுக்குர்பானி பற்றிய ஆலோசனை கூட்டம்  கடையநல்லூர் பேட்டை கிளையில் வைத்து நாடைபெற்றது.

இக்கூட்டம் பேட்டை கிளை தலைவர் சகோ. அப்பாஸ் அவர்கள் தலைமையில் அலோசனை கூட்டம் ஹஜ் பெருநாள் மற்றும் கூட்டுக்குர்பானி விபரமாக நடைபெற்றது  கிளை நிர்வாகிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் கீழ் கண்ட விபரங்கள் ஆலோசிக்கப்பட்டு எல்லா கிளைகளிலும் கீழ் வருமாறு செயல்படுவது என்று தீர்மானிக்கபட்டது.

அதன் படி .....,

பேட்டை கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம்


 23.09.2012 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் பேட்டை காதர் மைதீன் பள்ளி தெருவில் நடைபெற்றது, இதில் சகோ.சதாம் உசைன் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

 இக் கூட்டத்தில்  காதர் மைதீன் பள்ளி தெருவை சார்ந்த ஆண்களும், பெண்கள் வீடுகளில் இருந்தும் கேட்டு பயன் பெற்றார்கள். கடையநல்லூர் அனைத்து கிளை சார்பாக ஏரளாமான கொள்கை சகோதரர்கள் வருகை தந்து இருந்தார்கள்,நிகழ்ச்சி ஏற்பாட்டை பேட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.
ஆலோசனை கூட்டம்!

ரியாத் வாழ் கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ ) சகோதர்களின் ஆலோசனை கூட்டம்.Sep 24, 2012

திரிகூடாபுரத்தில் (சொக்கம்பட்டி)TNTJ ஆலோசனை கூட்டம் மற்றும் கொள்கை பிரச்சாரம்

அல்லாஹ்வின் கிருபையால் கடையநல்லூரில் த த ஜமாத்தின் தாவா பணிகள் வீரியத்துடன் செயல்பட்டு வருகின்றது, அந்த வகையில் தாவா பணிகள் நமது ஊரில் மட்டும் அல்லாமல் நமதூரை சுற்றியுள்ள மக்களிடமும் கொண்டு செல்லபடுகிறது,

அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு மக்கா நகர் கிளையின் சார்பாக திரிகூடாபுரத்தில்(சொக்கம்பட்டி) பெண்கள் பயான் ஏற்பாடு செய்யபட்டு அந்த பகுதியை சார்ந்த பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதை இந்த தளத்தில் செய்தியாக வெளிட்டு இருந்தோம். அதன் தொடர்ச்சியாக ....,

ரியாத் வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்கள் வசூல் செய்த பித்ரா தொகை


 ரியாத் வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்கள் வசூல் செய்த பித்ரா தொகை  4475  ரியால் TNTJ ரியாத் தலைமையிடம் 17/08/12 அன்று வழங்கப்பட்டது, இந்த தொகை  மாநில தலைமை மூலமாக கிளைகளுக்கு வழங்கப்பட்டது.

Sep 23, 2012

TNTJ பேட்டை கிளையின் வாராந்திர ஆலோசனை கூட்டம்

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21.09.2012 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு TNTJ பேட்டை கிளையில் வாரந்திர கூட்டம் தலைவர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் பேட்டையே சார்ந்த ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் இதில் கீழ் கண்ட விசயங்கள் விவாதிக்கப்பட்டது.

01. மழை தொழுகை மற்றும் அமெரிக்காவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்ட நிறை குறைகள் அதற்கான செலவினங்கள்,

02. பள்ளிக்கு இடம் வாங்கும் விசயமாக,

Sep 20, 2012

டவுண் கிளை மார்கஸ்க்கு இடம் வாங்கவதற்கு நிதி உதவி

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லுர் டவுண் கிளைக்காக சொந்த மர்கஸ் அமைய தற்போது  பல பகுதிகளில் ததஜ சகோதரர்கள் வசூலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக சென்னையில் வாழும் நமதூர் த த ஜ சகோதர்கள் திரட்டிய முதல் கட்ட நிதியை ரூபாய் 1,00,300(ஒரு இலட்சத்தி முன்னூறு ) டவுண் கிளை செயலாளர் ஹாஜாவிடம் வழங்கினார்கள்.

மக்கா நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்


கடந்த 14-9-12 அன்று மக்கா நகர் கிளையின் சார்பாக மனோஜ் என்கிற சகோதரருக்கு இஸ்லாம் சம்பந்தமான சகோதரர் PJ எழுதிய புத்தங்கள், இஸ்லாம் பற்றிய TNTJ மார்க்க அறிஞ்சர்கள் ஆற்றிய உரையின் DVDகள், தமிழில் மொழிபெயர்த்த குர்ஆன் மற்றும் மார்க்க புத்தகங்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்ள அவருக்கு வழங்கபட்டதை  நமது தளத்தில் வெளிட்டு இருந்தும்.

அல்லாஹ்வின் கிருபையால் அந்த சகோதரர் மனோஜ் என்கிற தன்னுடயை பெயரை அப்துல் ரஹ்மானாக மாற்றி 16-09-12 அன்று மக்கா நகர் கிளை நிர்வாகிகள் மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலையில் இஸ்லாத்தை வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்டார். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

நபி (ஸல்)கூறினார்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் வாயிலாக ஒரேயொரு மனிதருக்கு நேர்வழியாக்கப்படுவது(அரபுகளின் உயர்ந்த செல்வமான) சிகப்பு ஒட்டகங்களை விட சிறந்ததாகும் என்றார்கள். (அறிவிப்பாளர் :ஸகல் இப்னு ஸாத் (ரலி),புகாரி :2942)
Sep 16, 2012

TNTJ மக்கா நகர் கிளையில் மாற்றுமத சகோதரருக்கு தாவா

14-09-12 அன்று  மக்கா நகர் TNTJ தவ்ஹூத் பள்ளி சர்பாக மாற்று மத சகோதரர் மனோஜ்க்கு  குர் ஆன், புத்தகங்கள் மற்றும் மார்க்க DVD-கள் மக்கா நகர் கிளை செயலளார் ஜாகிர் மற்றும் நிர்வாகிகள் வழங்கினார்கள்.

அமெரிக்காவிற்கு எதிராக TNTJ நடத்திய போராட்டம் பற்றிய பத்திரிக்கை செய்திகள்
Sep 15, 2012

TNTJ சார்பாக கடையநல்லூரில் நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிராக ஆர்பாட்டம்

TNTJ சார்பாக கடையநல்லூரில் நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிராக ஆர்பாட்டத்தில் அமெரிக்காவுக்கு எதிராக மக்கள் வெள்ளம்ஆர்ப்பரித்த கடையநல்லூர்.


உலகம் போற்றும் உத்தமரின்
கண்ணியத்தைக் காப்பதற்கு
உயிரை விடவும் தயாரடா!
எங்கள் உயிரை விடவும் தயாரடா! என்று சூழுரைத்த முஸ்லிம்கள்.

TNTJ சார்பாக இன்று கடையநல்லூரில் நடைபெற்ற அமெரிக்காவுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் இன்று த த ஜ சார்பாக அமெரிக்காவுக்கு எதிராக மிகபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது , இன்று மாலை கடையநல்லூரில் TNTJ சார்பாக  நடைபெற்ற ஆர்பாட்ட நிகழ்வுகள்  சில

கூடுதல் போட்டாகளுடன் விரைவில்அமீரக வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம்

14-9-12 அன்று தேரா தவ்ஹீத் ஜமாஅத் மர்கசில் வைத்து அமீரக வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் சகோ இப்ராகிம் டவுண் கிளை பள்ளிக்கு இடம் வாங்குவதின் அவசியம் பற்றி விரிவாக விளக்கம் அளித்தார்.அதன் பின்பு சகோ சிராஜ் அவர்கள் நோன்பு கால வரவு, செலவு விவரத்தை சமர்பித்தார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில்  கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது .

1. வரும் வெள்ளிகிழமை முதல் குழுவாக சென்று கடையநல்லூர் சகோதர்கள் தங்கி உள்ள இடம் தேடி சென்று சந்தித்து நிதி திரட்டுவது.

2. நிதி திரட்டுவதற்கு பகுதி பொறுப்பாளர்களையும் நியமிக்கபட்டது அதன் படி

தேரா                                               : பசிர் மொவுலவி

சத்வா,சோனாபூர்,அல்கூஸ் : சகோ முகமத் நசிர்

ஹோர்  அல் அன்ஸ்                 : சகோ முஹமத் அலி

ஷார்ஜா                                          : சகோ அசன் இப்ராகிம்

அபுதாபி                                          : சகோ சலாம் , சகோ அப்துல் ரஹ்மான்

அஜ்மான்                                        : சகோ சாதிக்

3. மேலும் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் நண்பர்களை  சந்தித்து நிதி திரட்டுவது என்றும் முடிவு செய்யபட்டது .

நிகழ்ச்சி துவாஉடன் இனிதே நிறைவு பெற்றது.


கடையநல்லூர் TNTJ பேட்டை கிளையின் ஆலோசனை கூட்டம்


14-9-12 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு கடையநல்லூர் TNTJ பேட்டை கிளையில் அவசர அலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.01. இன்ஷா அல்லாஹ் இன்று நடைபெற இருக்கின்ற அமெரிக்காவிற்கு எதிரான கண்டான ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பங்கேற்பது மற்றவர்களையும் பங்கேற்ப தூண்டுவது.

02. ஆர்பாட்டத்துக்காக பேட்டையில் உள்ள அனைத்து தெருக்களிலும் மெஹா போன் மூலம் அறிவிப்பு செய்வது மீண்டும் ஒரு முறை ஆட்டோவில் அறிவிப்பு செய்வது.

03. இன்ஷா அல்லாஹ் நாளை நடைபெற இருக்கின்ற தெருமுனைப் பிரச்சாரத்துக்கு விரிவான ஏற்பாடு செய்வது.

04. ஜீம்மா ஆரம்பிக்க வேண்டிய கால கெடு நெருங்குவதால் விரைவில் பள்ளிக்கான இடம் வாங்குவது.

இதில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள், இறுதியில் தூவாவுடன் கூட்டம் இனிதே நிறைவுட்டது.

Sep 13, 2012

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் சார்பாக....

முஸ்லிம்களின் உயிரிலும் மேலான நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களை கீழ்த்தரமாக சித்தரித்து திரைப்படம் எடுத்த அமெரிக்க பாதிரியையும், அவனுக்கு துணை நிற்கும் அமெரிக்க அரசையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


அமீரக வாழ் கடையநல்லூர் TNTJ சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம்


Sep 11, 2012

TNTJ ரஹ்மானியாபுரம்(மஸ்ஜித் மரியம் ) கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம்

11-9-12 அன்று மாலை  ரஹ்மானியாபுரம் 2வது தெருவில்  TNTJ ரஹ்மானியாபுரம் (மஸ்ஜித் மரியம் ) கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது, இதில் சகோ அப்துல் சலாம் அவர்கள் இஸ்லாத்தில் இளைஞர்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பில் உரையாற்றினார். இதனை பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றார்கள், கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள்.
Sep 9, 2012

TNTJ பேட்டை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்

9-9-12 அன்று மாலை TNTJ பேட்டை கிளை சார்பாக பேட்டை  நத்ஹர் தர்கா  முன்பு தெருமுனை பிரசாரம் நடைபெற்றது. இதில் சகோ முஹம்மத் அலி அவர்கள்        " சொர்க்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதனை பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றார்கள். பேட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தார்கள்.டவுண் கிளை TNTJ மார்கஸில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

9-9-12 அன்று மாலை 4.30 முதல் 6.15 வரை டவுண் கிளை மார்கஸில்  வைத்து பெண்களுக்கான "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நடத்தப்பட்டது. இதில் மேலாண்மை குழு உறுப்பினர் சகோ அப்துல் நாசிர் அவர்கள் பெண்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதிகமான பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.


Sep 7, 2012

TNTJ மக்கா நகர் கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம்

TNTJ மக்கா நகர் கிளையின் சார்பாக 7-9-12 அன்று ரஹ்மாணியாபுரம் 10 வது தெருவில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோ இஸ்மாயில் அவர்கள் "அழைப்புபணியின் அவசியம்" என்ற தலைப்பிலும் சகோ அப்துல் சலாம் "ஷிர்க்,பித்அத்"என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். இதனை அந்த தெருவை சார்ந்த பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை மக்கா நகர் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தார்கள்.Sep 6, 2012

மக்கா நகர் கிளையின் சார்பாக திரிகூடாபுரத்தில் பெண்கள் பயான்

5-9-12 அன்று த த ஜமாஅத் மக்கா நகர் கிளையின் சார்பாக திரிகூடாபுரத்தில் பெண்கள் பயான் ஏற்பாடு செய்யப்பட்டது.இதில் சகோதரி சபினா ஆலிமா "ரமலான் தரும் படிப்பினை "என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்பகுதியை சார்ந்த பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள். இதற்கான ஏற்பாட்டை மக்கா நகர் கிளை நிர்வாகிகள்  செய்திருந்தார்கள்.


Sep 5, 2012

TNTJ மக்கா நகர் கிளையின் சார்பாக தெருமுனை பிரச்சாரம்

கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளையின் சார்பாக தெருமுனை பிரசாரம் மேற்கு மலம்பாட்டை தெருவில் வைத்து நடைபெற்றது. இதில் சகோ முஹம்மத் அலி அவர்கள " அன்பான அழைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார். 

அந்த தெருவை சார்ந்த முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத சகோதர்களும் கேட்டு பயன்பெற்றார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டை TNTJ  மக்கா நகர் கிளை நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
TNTJ டவுண் கிளை நிர்வாக ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜாமத் டவுண் கிளை சார்பாக நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  டவுண் கிளை பள்ளிக்கு நிலம் வாங்குவது தொடர்பாக பொருளாதாரம் திரட்டுவது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில்  டவுண் கிளை  நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


TNTJ பேட்டை கிளை சார்பாக தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளை சார்பாக (4-9-12)அன்று பேட்டை நத்ஹர்  பாவா தர்கா தெருவில் வைத்து  பெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் சகோ தாஹா அவர்கள " இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள " என்ற தலைப்பில் உரையாற்றினார். பொதுமக்கள் ஆர்வத்துடன் கேட்டு பயன்பெற்றனர். பேட்டை கிளை நிர்வாகிகள் சிறப்பான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.Sep 4, 2012

ரியாத்தில் த த ஜமாஅத் கடையநல்லூர் வாழ் சகோதர்களின் நிர்வாக கூட்டம்

கடந்த (31-8-12 )வெள்ளிகிழமை அன்று ரியாத்தில்  த த ஜமாஅத் கடையநல்லூர் வாழ் சகோதர்களின்  நிர்வாக கூட்டம் நடைபெற்றது. இதில்  நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.