கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 21, 2014

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி!

     கடையநல்லூர்லில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி சார்பில் 10ம்வகுப்பு மற்றும் 12 ம்வகுப்பு மாணவ, மாணவிக்களுக்கான ``பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுப்பது எப்படி`` என்ற கல்வி வழிகாட்டி 


நிகழ்ச்சி 21.12.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று AKN மஹாலில் வைத்து காலை 9.30 மணிமுதல் இரவு 8 மணிவரை நடைபெற்றது. இதில் துவக்க உரையாக சகோ தாஹா அவர்கள் மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் சகோ நயீம் அவர்களும் துவக்க உரை நிகழ்த்தினார் .
இதில் கடையநல்லூரில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளை சார்ந்த அதிகமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு
ஆங்கிலம்: சகோ. P.பீட்டர் பாஸ்கரன் MSc.,M.Ed,M.Phil.,Ph.D., (புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை)
கணிதம்: சகோ.S.பெனடிக்ட் M.Sc.,B.Ed (புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை)
அறிவியல்: சகோ. ஹமீது M.Sc.,M.A.,B.Ed (MN அப்துர் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி,பாளையங்கோட்டை)
சமூக அறிவியல்: சகோ.M.S.A.அப்துல் காதர் M.A., B.Ed.,(MN அப்துர் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி,பாளையங்கோட்டை)
12ம் வகுப்பு மாணவர்களுக்கு
கணிதம்: சகோ. இக்னேசியஸ் பாபு M.Sc.,M.Ed.,M.Phil (புனித சேவியர் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை)
இயற்பியல்: சகோ. மங்கள் துரை M.Sc.,M.Ed., (அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,கடையநல்லூர்)
வேதியியல்: சகோ.H.முஹம்மது முத்து மீரான் M.Sc.,M.Ed.,M.Phil (MN அப்துர் ரஹ்மான் மேல்நிலைப் பள்ளி, பாளை)
உயிரியல்: Dr.L.S.முஹைதீன் பிள்ளை B.V.Sc (ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப் பள்ளி கடையநல்லூர்)
கணக்குப் பதிவியல்: சகோ.முஹம்மது யூசுஃப் M.Com., (தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளி,கடையநல்லூர்)
வணிகவியல்: சகோ.ஜாஃபர் M.Com., (தாருஸ்ஸலாம் மேல்நிலைப் பள்ளி,கடையநல்லூர்
ஆகிய ஆசிரியர்கள் மாணவர்கள் எவ்வாறு பதற்றம் இல்லாமல் தேர்வுவை கையாளுவது? எவ்வாறு அதிக மதிப்பெண் எடுப்பது? போன்ற பயனுள்ள தலைப்புகளில் அவர்களுக்கான பாடப் பிரிவு குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகள் அணைவருக்கும் வினா? விடை? தேர்வு வழிகாட்டி புத்தகம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள் தங்களக்கு இந்நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாகவும், சிறப்பாகவும் இருந்ததாக குறிப்பிட்டு இனி வரக்கூடிய காலங்களிலும் இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளை நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்து இருந்தனர். மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் புகைபடம் உதவி : சகோ.குறிச்சி சுலைமான்)











No comments: