கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 6, 2014

பாலஸ்தினத்தில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டம்!

   கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக 06-08-14 அன்று மாலை 4.30 மணியளவில் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில்

இஸ்ரேலைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட செயலாளர் முகம்மது பைசல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில மேலாண்மை குழு உறுப்பினர் அப்துன் நாசர் மற்றும் மாவட்ட துணைதலைவர் அச்சன்புதூர் சுலைமான் துணை செயலாளர்கள் அகமது, ஜாகீர் உசைன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

  இதில் பெரும் திரளாக முஸ்லீம் ஆண்களும்
, பெண்களும், குழந்தைகளும் தமிழ் மற்றும் ஆங்கிலத்திலான கண்டன பதாகைகளுடன் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள் அப்பாஸ், அமீன், சிராஜ், ஹாஜா, நிரஞ்சர் ஒலி, முஜாஹீத், சேகனா, செய்தி தொடர்பாளர் குறிச்சி சுலைமான் தொண்டரணி மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

   இறுதியில் மேலாண்மைக் குழு உறுப்பினர் எம்.ஏ. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் இஸ்ரேலின் இன அழிப்பைக் கண்டித்தும் இஸ்ரேலுடன் எல்லா உறவுகளையும் மத்திய அரசு துண்டிக்க வழியுறுத்தி கண்டன உரை ஆற்றினார்.
  இக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

துண்டித்துவிடு
, துண்டித்துவிடு, தூதரக உறவைத் துண்டித்துவிடு,
தலையிட வேண்டும் தலையிட வேண்டும் ஐநா  மன்றம் தலையிட வேண்டும்,
தலையிட வேண்டும் உலக நாடுகள் தலையிட வேண்டும், 
ஓயவில்லை, ஓயவில்லை குண்டுச் சத்தம் ஓயவில்லை,குழந்தைகளும் தப்பவில்லை, பாலஸ்தீன முஸ்லீம்களின் பரிதாபக் குரல் ஓயவில்லை என கோஷங்கள்யிட்டனர்.
   இதில் தென்காசி வட்டாட்சியர் சொர்ணராஜ் தலைமையில், புளியங்குடி சரக துணை கண்காணிப்பாளர் வானுமாமலை மேற்பார்வையில், கடையநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் காளீஸ்வரி ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து இருந்தனர்.

இறுதியில் டவுண் கிளை தலைவர் சகோ அய்யூப் கான் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.


























      . 

No comments: