அமீரக வாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதர்களின் கூட்டமைப்பு சார்பாக 14-11-14 அன்று மாலை துபாய் JT மர்க்கஸில் வைத்து மாதந்திர
ஆலோசனைக் கூட்டம் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சகோ.பைசல் அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து கிளைகளில் நடைபெற்ற மற்றும் நடைபெற இருக்கின்ற நிகழ்சிகள் பற்றி விளக்கினார்கள். கலந்து கொண்ட சகோதர்களின் சந்தேகங்களுக்கு பொறுப்பாளர்கள் விளக்கமளித்தனர்.
தீர்மானங்கள்!
1. வருகின்ற 14-12-14 அன்று நடைபெற உள்ள சிறுநீரகம் மற்றும் ஆண்மையியல் மருத்துவ கருத்துரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சகோதர்களுக்கு சகோ.பிஜே அவர்கள் "குடும்பவியல்" தலைப்பில் உரை நிகழ்த்திய 14-ம் உரையின் குறுந்தகடு(CD)வினியோகிக்குமாறு கேட்டு கொள்கிறது.
2. மாதந்தோறும் சிறிய அளவில் அந்தந்த கிளைக்கு அருகில் உள்ள திடலில் ஒரு மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடத்துமாறும் கிளை நிர்வாகங்களை கேட்டு கொள்கிறது.
3. நமது ஜமாத்தை விட்டு வெளியேற்றப்பட்ட மஸ்ஜித் முபாரக் சார்ந்த சகோதர்கள் வழிகேடன பாதையில், அதாவது சூனியத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் இருப்பதாக தற்போதைய அவர்களின் செயல்பாடுகள் தெரியவருகிறது. எனவே அவர்களுக்கு விளக்கும் வகையில் சூனியம் பற்றிய பிரச்சாரங்களை டவுண் கிளையை சார்பாக அதிகப்படுத்துமாறு கேட்டு கொள்கிறது.

No comments:
Post a Comment