நபிவழித் தொழுகை முறை (விளக்கப்படங்களுடன்)
வெளியீடு : மதரஸதுந் நஜாஹ், முபாரக் பள்ளிவாசல், மெயின் பஜார், கடையநல்லூர்
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (அல்குர்ஆன் 4:103)
தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நில்லுங்கள்! (அல்குர்ஆன் 2 : 238)
(முஹம்மதே!) வேதத்திருந்து உமக்கு அறிவிக்கப்படுவதைக் கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். (அல்குர்ஆன் 29:45)
இணைவைப்பு மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்மான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : முஸ்லிம்
நமக்கும், அவர்களுக்கும் (இறை மறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். அதை விட்டவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி) நூல்: நஸயீ
என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : மாக் பின் ஹுவைரிஸ் (ரலி) நூல் : புகாரீ
இந்த நபி மொழியைக் கவனத்தில் கொண்டு அடிப்படையில் நாம் எவ்வாறு தொழ வேண்டும் என்பதை நபிகளார் காட்டித் தந்த அடிப்படையில் அறிந்து கொள்வோம்.
முழு விபரத்தை PDF FORMAT - ல் டவுன்லோட் செய்து படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
வெளியீடு : மதரஸதுந் நஜாஹ், முபாரக் பள்ளிவாசல், மெயின் பஜார், கடையநல்லூர்
முழு விபரத்தை PDF FORMAT - ல் டவுன்லோட் செய்து படிக்க இங்கு கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment