கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 2, 2009

பாம்பு கடித்து சிறுமி மரணம்


        கடையநல்லூர் அரசு மருத்துவ மனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால் சிறுமி மரணம். தவ்ஹீத் ஜமாஅத் கலெக்டரிடம் புகார்.

கடையநல்லூர் விஸ்வா விளை இக்பால் தெற்குத் தெருவைச் சார்ந்த கும்மாளி இஸ்மத் என்பவரின் மகள் நஜ்லா. (7). இந்தச் சிறுமி டியூசன் சென்று விட்டு மாலையில் வீடுதிரும்பும் வழியில் பாம்பு கடித்தது. இதனையடுத்து அவரது உறவினர்கள் குழந்தை நஜ்லாவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மூன்று மணி நேரத்திற்கு பிறகு கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் பாம்பு கடிக்கு மருந்து இல்லை என்று கூறி மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி பளை ஐகிரவுண்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். பெற்றோர் மற்றும் உறவினர்கள் நஜ்லாவை பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பரிசோதித்த பாளை அரசு மருத்துவர்கள் வழியிலேயே நஜ்லா இறந்து விட்டதாகக் கூறினர்.
இந்நிலையில் கடந்து 29,09,09 அன்று நெல்லை மாவட்ட கலெக்டர் திரு. ஜெயராமன் அவர்கள் கடையநல்லூர் அரசு மருத்துமனையை ஆய்வு செய்ய வந்திருப்பதை கேள்விப்பட்ட தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் கலெக்டெரிடம் பாம்பு கடிக்கு கடையநல்லூர் மருத்துவமனையில் மருந்து இல்லாததால் சிறுமி மரணித்த சம்பவத்தை எடுத்துக் கூறினர்.
இது குறித்து கலெக்டர் மருத்துமனை இணை இயக்குநர் உஷா அவர்களிடம் கேட்டறிந்தார். பாம்பு கடி சம்பவத்தில் சிறுமி பலியானது குறித்து டி.எம்.எஸ். அலுவலகம் தகவல் கேட்டிருப்பதாக இணை இயக்குனர் கலெக்டரிடம் தெரிவித்தார். மருந்து இருந்தும் முறையான நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்பது போன்ற கேள்விகளை கலெக்டர் சுகாதாரத் துறையிடம் கேட்டார். இது குறித்து உரிய விசாரணை நடத்திட இணை இயக்குநரை கலெக்டர் கேட்டுக் கொண்டார். 
எது எப்படியிருந்தாலும் அரசு மருத்துவர்கள் பெரும்பாலான மருத்துவமனைகளிலும் மிகவும் அலட்சியப் போக்கோடுதான் உள்ளனர். அல்லல்பட்டு வருபவர்களின் துயத் துடைக்க அவர்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஏனோ தானோ என்ற முறையில்தான் செயல்படுகின்றனர். அதிகமான நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இருப்பதே கிடையாது. இது குறித்து முறையான விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இனி வரும் காலங்களிலாவது இது போன்ற அலட்சியப் போக்கினால் ஏற்படும் மரண இழப்புகளை ஓரளவிற்குக் குறைக்கலாம். இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் முறையான நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


நாசிர்









பத்திரிக்கைச் செய்திகள்




No comments: