கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 17, 2009

KDNL - TNTJ துனை முதல்வர் சந்திப்பு


ஆசிரியர் தேர்வில் முஸ்லீம்கள் புறகணிப்பு- தென்காசி வருகை தந்த துணைமுதல்வரிடம் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் புகார்.




      நெல்லை மாவட்டத்திற்கு கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட துணை முதல்வர் ஸ்டாலின் அவர்களிடம் தென்காசி குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஜபருல்லாஹ் கடையநல்லூர் நகர நிர்வாகிகள் முகம்மது கோரி, முகம்மது காசிம் ஆகியோர் துணைமுதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆசிரியர் தேர்வில் முஸ்லிம்கள் புறகணிக்கபடுவதை புள்ளி விவரத்துடன் எடுத்து உரைத்தனர்.
புள்ளி விவரம்
       23.05.2009 அன்று ஆசிரியர் தேர்வு வாரியம் சர்வசிக்ஷh அபியான் (S.S.A) க்கு ஆசிரியர் பயிற்றுநர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 139 தமிழ் பாட ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வுப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் முறையாக சிறுபான்மை இனத்தவர்களாகிய கிறித்தவர்கள் தங்கள் இட ஒதுக்கீட்டை திரும்ப கொடுத்த பிறகு புழுஆளுழே. 206, நாள் 06.11.2008ன் படி இஸ்லாமியர்களுக்கு வழங்கக்கூடிய இட ஒதுக்கீட்டின் படி வழங்கப்படவில்லை. 139 தமிழ் ஆசிரியர் பயிற்றுநர் இடங்களுக்கு, முறையாக புழுஆளு ழே. 206 நாள் 06.11.2008 ன்படி 15,40,78,99,130 ஆகிய இனச்சுழற்சி முறைப்படி இஸ்லாமியர்களுக்கு 5 இடங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் 11, 35, 72 ஆகிய முறையில் மூன்று இடங்கள் கொடுத்து முஸ்லிம்களை ஏமாற்ற பட்டுள்ளார்கள்;. இது குறித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் ஆசிரியர் தேர்வு வாரியம் தலைவர், உறுப்பினர் செயலர், மாண்புமிகு கல்வி அமைச்சர், கல்வித்துறை செயலர் குத்தாலிங்கம் போன்றோர்களிடம் தந்தி மூலம் தெரிவிக்கப்பட்டது.

      மேலும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேலான்மை குழு உறுப்பினர் ஸைபுல்லாஹ் தலைமையில் சில மாதங்களுக்கு முன்பு கடையநல்லூர் வந்த கல்விதுறை செயளர் திரு. குத்தாலிங்கம் அவர்களை நேரடியாக சந்தித்து ஆசிரியர் தேர்வில் முஸ்லிம்கள் புறக்கணிப்பதை எடுத்துரைத்தார். இதற்கான எந்த பதிலையும் தமிழக அரசு தெரிவிக்காத காரணத்தினால் தென்காசி ரயில்வே மேம்பாலம் அடிக்கல் நாடடு விழாவுக்கு வருகை தந்த துணைமுதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரடியாக சந்தித்து அரசு உத்தரவுக்கு மாற்றமாக ஆசிரியர் தேர்வுத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் செய்யும் குழர்படிகளை களைந்து முறையான இட ஒதுக்கீட்டை வழங்குமாறு புகாரில் தெரிவிக்கப்பட்டது.

      முன்னதாக கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் முஸ்லீம்கள் ஆசிரியர் தேர்வில் எப்படி எல்லாம் புறகணிக்கபட்டனர் என்ற புகாரை பெற்றுகொண்டது மட்டுமல்லாம் விரிவாக துணைமுதல்வரி;டம் எடுத்துரைத்தார். முதல்வரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்ததோடு இல்லாமல் துணைமுதல்வரிடம் நமது ஜமாத் மக்கள் சக்திபெற்ற சமுதாயத்திற்கு உழைக்கும்; பேரியக்கம்; என்பதை பற்றியும் எடுத்து கூறியது குறிப்பிடதக்கது. மனுவை பெற்று கொண்ட துணை முதல்வர் முறையான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

குறிச்சிசுலைமான்




No comments: