கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 9, 2009

பிராத்திப்போம் - 2






அல்லாஹ்வின் திருப்பெயரால்....

பாவமானதைக் கேட்கக் கூடாது 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

''நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை'' என்று (மனிதன்) கூறுகின்றான். உறவைத் துண்டிக்கும் விஷயத்திலும், பாவமானவற்றிலும் பிரார்த்தனை செய்தால் அது அந்த அடியாருக்குப் பதிலளிக்கப்படாது.


அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 2735.

அவசரப்படக்கூடாது 

பிரார்த்தனை செய்யும் போது அவசரப்படக் கூடாது. பலமுறை திரும்பத் திரும்பக் கேட்க வேண்டும். ஓரிரு முறை மட்டும் கேட்டு விட்டு, நான் பிரார்த்தித்தேன், எனக்குக் கிடைக்கவில்லை என்று கூறி பிரார்த்திப்பதையே விட்டு விடக் கூடாது. இத்தகைய எண்ணத்துடன் பிரார்த்தனை செய்தால் அது ஏற்கப்படாது.



''நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6340


நிராசை அடையக் கூடாது 

சிலர் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பார்கள். அவர்கள் கேட்கும் அந்தக் காரியம் நிறைவேறவில்லை என்றால் அல்லாஹ்வின் அருளில் நிராசை அடைந்து விடுவார்கள். அல்லாஹ்வின் அருள் விசாலமானது. எனவே அவனது அருளில் நிராசையடையக் கூடாது.    

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53) 

அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள்! (ஏக இறைவனை) மறுக்கும் கூட்டத்தைத் தவிர வேறு எவரும் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 12:87) 

தொடர்ந்து அறிவோம் இன்ஷா அல்லாஹ்....

அழைப்பு பணியில் என்றும் அன்புடன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ)
கடையநல்லூர்



No comments: