கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 20, 2009

ஏர்வாடி காலண்டரை பின்பற்றி பிரசுரம் வெளியிட்ட காரைக்கால் ஜாக் அமைப்பினருக்கு தெளிவான விளக்கம்.


அல்லாஹ்வின் திருப்பெயரால்....
அரஃபா நோன்பு
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : துல்ஹஜ் ஒன்பதாவது நாள் (அரஃபா) அன்று நோன்பு நோற்பதை, அதற்கு முந்தைய ஓராண்டிற்கும் அதற்குப் பிந்தைய ஓராண்டிற்கும் பாவப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் எதிர்பார்க்கிறேன்
.
அறிவிப்பவர் : அபூ கதாதா (ரலி) நூல் : முஸ்லிம் (2151)
துல்ஹஜ் பிறை ஒன்பது அன்று நோற்கும் நோன்பிற்கு அரஃபா நோன்பு என்று பெயர். துல்ஹஜ் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதினால் அன்றைய தினத்திற்கு அரஃபா நாள் என்று பெயர் வந்தது. ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 8 ல் அரஃபாவில் கூடினால் அதற்கு அரஃபா நாள் என்று சொல்லப்படாது. மார்க்கத்தை கேலிக்கூத்தாக ஆக்கிய சிலர் பிறை ஒன்பதில் அரஃபாவா? அல்லது அரஃபாவில் கூடினால் பிறை ஒன்பதா? என்று அவர்களின் அறியாமையை தெளிவுபடுத்துவதற்காக கேட்கும் கேள்விக்கு பதில் கூற முடியாமல் இதை கேலியாகச் சித்தரிக்கின்றனர்.
ஏர்வாடி காலண்டரை பின்பற்றும் கூட்டம் ஹாஜிகள் அரஃபாவில் கூடுவதற்கு முன்பாகவே அரஃபா நோன்பு வைத்தார்கள். அவர்கள் கூறிய காரணம் ஹாஜிகள் அரஃபாவில் துல்ஹஜ் பிறை ஒன்பதில்தான் ஒன்று கூட வேண்டும். ஆனால் அவர்கள் ஒரு நாள் தாமதமாக ஒன்று கூடினால் அது அவர்கள் செய்த தவறுதான். நாங்கள் துல்ஹஜ் பிறை 9 ல்தான் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். உலகத்தை ஒன்று சேர்க்கப் போகிறோம் என்று கிளம்பிய இவர்கள் இன்றைக்கு தங்களுக்குள்ளேயே பல பிரிவாகி ஒருவரை ஒருவர் காஃபிர்கள் என்று சாடிக்கொள்வது தனிவிஷயம்.
ஹாஜிகள் அரஃபாவில் கூடும் போதுதான் அரஃபா நோன்பு வைக்க வேண்டும் என்பவர்கள் ஹாஜிகள் அரஃபாவிற்கு வருவதற்கு முன்பாகவே நோன்பு நோற்று அவர்கள் அரஃபாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பாகவே நோன்பை விட்டுவிடுவார்கள். ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 9 ஃபஜ்ருக்குப் பிறகுதான் அரஃபாவை நோக்கி புறப்படுவாரகள். சூரின் மறைந்த பிறகுதான் அரஃபாவிலிருந்து வெளியேறுவார்கள். அதாவது இவர்கள் நோன்பு திறந்து பல மணிநேரங்கள் கழிந்த பிறகுதான் அவர்கள் வெளியேறுவார்கள். ஹாஜிகள் அரஃபாவில் இருக்கும் போதே இவர்கள் நோன்பை திறக்கும் காரணத்தினால் அவர்களின் கருத்துப் படி அவர்கள் நோற்ற நோன்பு அரஃபா நோன்பு கிடையாது.
அமெரிக்காவைப் பொறுத்த வரை ஹாஜிகள் அரஃபாவில் கூடும் நேரத்தில் மக்ரிபை அடைந்திருப்பார்கள். ஹாஜிகள் அரஃபாவை விட்டு வெளியேறும் போது அமெரிக்காவில் சுபுஹு நேரத்தை அடைவார்கள். அரஃபாவில் கூடியிருக்கும் நேரத்தில் நோன்பிருக்க வேண்டும் என்று பொருள் செய்தால் அமெரிக்காவில் இரவு நேரத்தில் தான் நோன்பு நோற்க வேண்டும்.
அல்லாஹ் கூறுவது போல் சுபுஹ் நேரத்திலிருந்து மக்ரிப் வரை நோன்பிருக்க வேண்டுமா? அல்லது இவர்கள் கூறுவது போல் மக்ரிபிலிருந்து சுபுஹ் வரை நோன்பிருக்க வேண்டுமா?
ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போது தான் நோன்பு பிடிக்க வேண்டும் என்று தவறான பொருள் கொண்டதால் தான் இந்த விபரீதம் ஏற்படுகிறது. நபியவர்கள் ஹாஜிகள் அரஃபாவில் தங்கும் போதுதான் நாம் அரஃபா நோன்பு நோற்க வேண்டும் என எங்கும் கூறவில்லை.
மாறாக எந்த நோன்பாக இருந்தாலும் அவரவர் பகுதிகளில் பார்க்கும் பிறைக்கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்க வேண்டும். இதோ நபியவர்களின் கட்டளையைப் பாருங்கள்;
'பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1906
பிறை பார்த்துதான் ஹஜ்ஜைக்கூட தீர்மானிக்க வேண்டும் என்றே இறைவனும் கட்டளைியிட்டள்ளான்
பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். ''அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 2 : 189)
தத்தமது பகுதிகளில் பார்த்த பிறைக் கணக்கின் அடிப்படையில்தான் ஹஜ்ஜுப் பெருநாளை மக்கள் தீர்மானிக்க வேண்டும் என்பதே நபிவழி
''நீங்கள் நோன்பு என முடிவு செய்யும் நாள் தான் நோன்பு ஆகும். நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ
இதைக்கூட ஏர்வாடி காலண்டரை பின்பற்றும் கூட்டத்தினர் நபியுடைய சொல் அல்ல என்று அபாண்டமாக புழுகி மக்களை ஏமாற்ற முனைந்துள்ளனர்.
எனவே நமது பகுதியில் பிறை பார்த்ததின் அடிப்படையில் நவம்பர் 27 அன்று அரஃபா நோன்பு நோற்கவேண்டும். நபிவழியின் அடிப்படையில் நோன்பு நோற்று நபியவர்கள் கூறிய நன்மையை அடைவோமாக.


No comments: