கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Apr 5, 2010

இஸ்லாத்தை தழுவிய குடும்பத்தினர்

            கடையநல்லூர் அருகிலுள்ள மேலக்கடையநல்லூரைச் சார்ந்த ஒரு குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இயற்கை மார்க்கமாகிய இஸ்லாத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோதரர் அப்துந் நாசிர் அவர்கள்
 இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை விளக்கி ஏகத்துவ உறுதி மொழி கலிமாவைச் சொல்லிக் கொடுத்தார்கள். அவர்கள் மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாகக் கூறினர். வாழ்க்கையில் தங்களுக்கு ஏற்றபட்ட பல்வேறு மனோரீதியான பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தில் தான் தீர்விருப்பதாக நம்பியே தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறோம் என அக்குடும்பத்தினர் கூறினர். இக்குடும்பத்தினரின் பூர்வீகம் செங்கோட்டையாகும். இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கான வழிகாட்டுதல்களை செங்கோட்டை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் வழங்கினர். இக்குடும்பத்தினர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நடத்தப்படும் தாவா வகுப்பில் சேர்வதற்காக நெல்லை மாவட்டம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இஸ்லாத்தை ஏற்ற சகோதர, சகோதரிகளின் பெயர்களின் விவரம்.



1. சலீம் (கருப்பசாமி)

2. ஆயிஷா (பால சரஸ்வதி)

3. பிலால் (முத்து சாமி)

4. சுமையா (சத்யா)

5. அபூ பக்கர் (குமார்)

இச்சகோதர சகோதரிகளுக்கு கடையநல்லூர் கிளை சார்பாக மார்க்க விளக்க நூல்கள் வழங்கப்பட்டது.


No comments: