கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 26, 2010

ரியாத் மண்டல கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் ஆலொசனைக் கூட்டம்

ரியாத் வாழ் கடையநல்லூர்  தவ்ஹீத் ஜமாஅத் ன் மாதாந்திரக் கூட்டம் 25.06.10 வெள்ளிக் கிழமை மக்ரீப் தொழுகைக்குப் பிறகு சகோ.A.S. மூகைதீன் 
அவர்கள் தலைமையில் தவ்ஹீத் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் மௌலவி சகோ.கபீர் அவர்கள் இறையச்சத்தைப் பற்றியும் , நாம் மாநாட்டிற்கு செய்யும் செலவுகள் மறுமையில் நன்மையைப் பெற்றுத்தரும் என்றும் சிறப்பாக உரை நிகழ்த்தினார்கள். இதில் அதிகமான சகோதரர்கள் கலந்து கொண்டனர். 


இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்.

1.இன்ஷா அல்லாஹ் நமது மாநாடு சிறப்பாக அமைய தூஆ செய்யுமாறும் . இமயம் T.V. யில் 10 நாட்கள் கொடுக்கப்பட்ட விளம்பரத்திற்கு ஓப்புதல் பெறப்பட்டு மீண்டும் நாம் அனைவரும் தூஆ செய்ய வேண்டும் என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
2.ஜூலை 4 2010 மாநாட்டிற்காக வசூலிக்கப் பட்ட பணத்தை 20 தலைமைக்கும் 80 % நமது ஊருக்கும் கொடுக்க வேண்டும் என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
3.இந்த வருடம் SSLC மற்றும் +2 தேர்வில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பெறும் நண்மையில் பங்கு பெறும் பொருட்டு அதற்காக 5000 வழங்குவது என தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
4.ரியாத் ல் தாஃவா பணிகளை மேம்படுத்தும் விதமாக தனித்தனி நபர்களை சந்தித்து சத்தியத்தை எடுத்துச் சொல்வது என முடிவு செய்யப்பட்டு அதற்காக ஒரு குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. 
இறுதியாக மாநாட்டிற்காக வசூலிக்கப்பட்ட வரவுகள் வாசிக்கப்பட்டு தூஆ வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. 














No comments: