கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 2, 2010

திருமணத்தின் போது பெற்ற ரூ140,000/- திருப்பி ஒப்படைக்கப்பட்டது

கலந்தர் மஸ்தான் தெருவைச் சார்ந்த பாவோடி அப்துல் காதர் அவர்களுடைய சகோதரர்  செய்யது மசூது அவருக்கும் இக்பால் வடக்குத் தெரு நயினார் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்  சேகுதுமான் என்பவருடயை மகளுக்கும் 1998ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பாவோடி செய்யது மசூது ஆகிய  மணமகன் திருமணத்தின் போது பெண்ணுடைய தகப்பனாரிடமிருந்து 140,000/- ரூபாயை பெற்றிருந்தார்.
01.08.2010 இன்று மாலை சரியாக 4.45 மணியளவில் பெண்ணுடைய பொறுப்பாளர் நயினார் ஸாஹிப் அவர்களிடம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்  முன்னிலையில் ரூ140,000/- திருப்பி ஒப்படைக்கப்பட்டது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழு சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா , மேலாண்மைக் குழு சகோ. கே.எம்.அப்துந் நாஸர், நகர செயலாளர் முஹம்மது காசிம், துணைத் தலைவர் சேகனா, பாவோடி செய்யது மசூது சகோதரர் அப்துல் காதர், ஹாஜா மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1 comment:

Anonymous said...

வரதட்சனைக்கு எதிராக ஒவ்வொரு சகோதரனும் அடியெடுத்து வைத்தால் வரதட்சணை பேயை இறைவனருளால் சமுதாயத்தை விட்டே துரத்தியடித்திடலாம்.இதற்கு முன் வரதட்சணை வாங்கியவர்களும்,இனி திருமணம் செய்ய இருப்பவர்களும் இந்நிகழ்வை முன்னிட்டு அல்லாஹ்விற்காக வரதட்ச்சனைக்கெதிராக சங்கல்பம் எடுத்துக் கொள்வோம்.