கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 1, 2010

இன்று முதல் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு : மாதம் 300 யூனிட்க்கு மேல் ஒரு ரூபாய் அதிகம்


வீடுகளில் இரண்டு மாதங்களில், 600 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்துவோருக்கான மின் கட்டணம், யூனிட்டிற்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. 600 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கான மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மின் கட்டண உயர்வு குறித்து, சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்த, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் கபிலன், உறுப்பினர் வேணுகோபால் கூறியதாவது: இரு மாதங்களில், 600 யூனிட்டிற்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோர், குடிசைவாசிகள், விசைத்தறி மின் நுகர்வோர், கைத்தறி மின் நுகர்வோர், பொது வழிபாட்டு இடங்கள், வேளாண் மின் நுகர்வோருக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை. வீடுகளில் இரு மாதங்களில், 600 யூனிட்டிற்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு, யூனிட்டிற்கு ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இரு மாதங்களில், 600 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர், ஐந்து லட்சத்து 15 ஆயிரத்து 299 பேர் மட்டுமே. மொத்த மின்சார நுகர்வோரில், இது வெறும் 3 சதவீதம்.

இரு மாதங்களில், 600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோர், ஒரு கோடியே 53 லட்சம் பேர். தொழில் மின் நுகர்வோருக்கு உயர் அழுத்தம் யூனிட்டிற்கு, 50 பைசாவும், தாழ்வழுத்தம் யூனிட்டிற்கு, 30 பைசாவும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இரு மாதங்களில், 1,500 யூனிட்டிற்கு மேல் பயன்படுத்தும் குடிசைத் தொழில், குறுந்தொழில் நுகர்வோருக்கு யூனிட்டிற்கு, 40 பைசா உயர்த்தப்படுகிறது. வணிக மின் நுகர்வோருக்கு, உயர் அழுத்தம் யூனிட்டிற்கு, 80 பைசாவும், தாழ்வழுத்தம் யூனிட்டிற்கு, 70 பைசாவும் உயர்த்தப்படுகிறது. சினிமா தியேட்டர்களுக்கு உயர் அழுத்தம், ஒரு ரூபாயும், தாழ்வழுத்தம், ஒரு ரூபாய் 10 பைசாவும் உயர்த்தப்படுகிறது.

இரு மாதங்களில், 100 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் சிறு கடை வியாபாரிகளுக்கு யூனிட்டிற்கு, ஒரு ரூபாய் குறைக்கப்படுகிறது. தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உயர் அழுத்தம் யூனிட்டிற்கு, ஒரு ரூபாயும், தாழ்வழுத்தம் யூனிட்டிற்கு, ஒரு ரூபாய் 10 பைசாவும் உயர்த்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களுக்கு உயர் அழுத்தம் யூனிட்டிற்கு, 50 பைசாவும், தாழ்வழுத்தம் யூனிட்டிற்கு, 40 பைசாவும் உயர்த்தப்படுகிறது. இந்த ஆண்டு அரசின் மொத்த மானியத்தொகை, 1,652 கோடி ரூபாய். மின் கட்டண மாற்றத்தால், ஆண்டிற்கு, 1,651 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

இன்று(ஆகஸ்ட் 1ம் தேதி) முதல் நடைமுறைக்கு வரும் புதிய மின் கட்டணம், 2011ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை அமலில் இருக்கும். அடுத்த ஆண்டு, "மின்வாரியம் கட்டணத்தை உயர்த்த வேண்டும்' என மனு செய்தால், ஆணையம் ஆலோசனை நடத்தி, கருத்துக் கேட்டு முடிவெடுக்கும். மின் கட்டணத்தை ஏழு ஆண்டுகள் உயர்த்தாததால், 8,000 கோடி ரூபாய் பற்றாக்குறை உள்ளது. இதை ஒரே ஆண்டில் சரி செய்ய நினைத்தால், மின் கட்டணத்தை அதிகளவு உயர்த்த வேண்டிவரும். அவ்வாறு செய்தால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுவர். பற்றாக்குறையை படிப்படியாகத் தான் சரி செய்ய முடியும். மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் ஆண்டுதோறும் மனு செய்யலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக மின்வாரியம், ஏழு ஆண்டுகளுக்கு பின், ஜனவரி 18ம் தேதி கட்டணத்தை மாற்றியமைக்க மனு தாக்கல் செய்தது. இதற்கு முன், மின் கட்டண ஆணை, 2003ம் 

No comments: