கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 3, 2010

ரியாத் மண்டல கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்களின் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் , கடந்த 30.07.2010 அன்று வெள்ளிக் கிழமை மக்ரீப் தொழுகைக்குப் பிறகு A.S.முஹைதீன அவர்களின் தலைமையில் தவ்ஹீத் செயலகத்தில் நடைபெற்றது.
இதில் மௌலவி கபீர் அவர் அல்லாஹ்வின் வல்லமையைப் பற்றியும் , சகோதரர் N.M.அப்துல் காதிர் அவர்கள் நல்லமல்கள் செய்வதில் ஆர்வம் காட்ட வேண்டும்.என்றும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் அழகாக விளக்கினார்கள்.அதோடு நமதூரில் நிகழ்ந்த மானக்கேடான சில சம்பவங்களுக்கு மக்களுக்கு மத்தியில் இறையச்சத்தை ஏற்படுத்துவதன் ஒரு முழுமையான தீர்வாக அமையும்.என்பதாகவும் உரை நிகழ்த்தினார்கள்.

தீர்மானங்கள் : 

1. ஜூலை 4 பேரணி மற்றும் மாநட்டை சிறப்பாக நடத்தி தந்த வல்ல ரஹ்மனுக்கே ! புகழ்னைத்தும் இதற்காக உடல் உழைப்பு மற்றும் பொருளாதர உதவிகள் செய்த நல்ல உள்ள்ங்களுக்கு இக் கூட்டத்தின் சார்பாக மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
2. நமதூரில் நடந்த சீர்கேடுகள் இனிமேல் நடைபெறாமலிருக்க களம் இறங்கி போராடும் துனிச்சலும், தகுதியும் நமது ஜமாஅத்திற்கு் மட்டும்தான் இருக்கிறது, என்பதால் தீர்வு கான முயல வேண்டும் என இக்கூட்டத்தின் சார்பாக தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
3.இந்த வருடம் நோன்பு கஞ்சிக்கு (நபர் ஒன்றுக்கு ) 140 ரியால் என்றும் , ஃபித்ரா ( நபர் ஒன்றுக்கு) 10 ரியால் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
4. துபையில் நடைபெற்ற தீர்வைத் தேடி என்ற நிகழ்ச்சியின் தீர்மானங்கள் மற்றும் பள்ளிவாசல் இமாம்களுக்கு எழுதிய லட்டர் அனைத்தும் பிரதிகாள் எடுக்கப் பட்டு எல்லோருக்கும் வினியோகித்து , அதற்காக ஒத்துழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக ஃபித்ரா வசூல் படிவங்கள் கோடுக்கப்பட்டு , மாநாடு வரவுகள் வாசிக்கப்பட்டு , தூஆ வுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.











No comments: