கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 7, 2010

கடையநல்லூர் டிஎன்டிஜே நகர நிர்வாகிகள் துனை முதல்வருடன் சந்திப்பு

டையநல்லூர் நகராட்சியில் உயர்த்தப்பட்ட வீட்டு வரியை குறைக்கவேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் துணை முதல்வரை சந்தித்து நேரடியாக வயுறுத்தல்.
நெல்லை மாவட்டத்தில் இரண்டு நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.ஸைபுல்லாஹ் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் சகோ.டிஎம்.ஜபருல்லாஹ், சகோ.குறிச்சிசுலைமான் மற்றும் கடையநல்லூர் நகர நிர்வாகிகள் சகோ.முஹம்மது காசிம், சகோ.முஹம்மது கோரி, சகோ.சேகனா ஆகியோர் நேரில் சந்தித்த போது தென்காசி சட்டமன்ற உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன் அவர்களும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சா.பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் அன்புடன் வரவேற்று துணை முதல்வரை சந்திக்கச் செய்தனர். அப்போது நிர்வாகிகள் ஆசிரியர் தேர்வில் முஸ்லீம்கள் புறக்கணிக்கப்படுவது சம்பந்தமாக வெளி வந்த உணர்வு பத்திரைக்கையையும்  மாநாடு சம்பந்தமாக வெளிவந்த கல்கி இதழையும் கொடுத்து விட்டு பல்வேறு முக்கிய கோரிக்கைகள் மனுக்களை கொடுத்தனர்.

உயர்த்தப்பட்ட வரியை திரும்பப் பெறவேண்டும்
            கடையநல்லூர் நகராட்சியில் வரலாறு காணாத அளவிற்கு 533 வீடுகளுக்கு மட்டும் 10 மடங்கு வீட்டு வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் பல்வேறு போராட்டங்களை நடத்தியது. சட்டமன்ற உறுப்பினர் இது தொடர்பாக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தும் இது வரை உயர்த்தப்பட்ட வீட்டு வரி குறைக்கப்படவில்லை. அதன் பின்பு விரிவான தல ஆய்வு செய்ய வேண்டி கூடுதல் இயக்குநர் நகராட்சி நிர்வாக ஆணையரகம் அவர்கள் தலைமையில் கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது. இக்கமிட்டி விரிவான தல ஆய்வு செய்யாமல் அறிக்கை மட்டும தாக்கல் செய்தது. அதன் பிறகு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துர் ரஹ்மான், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சா.பீட்டர் அல்போன்ஸ், நகராட்சி உயரதிகாரிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் சென்னை அலுவலகத்தில் நகராட்சி நிர்வாக இயக்குநர் முன்னிலையில் உயர்த்தப்பட்ட வீட்டு வரியை குறைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  இது வரை எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகினர். தமிழக துணை முதல்வரை சந்தித்து வரி உயர்வை ரத்து செய்து சீரான வரி விதிப்பிற்கு ஆவன செய்யும் படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துணை முதல்வரை கேட்டுக் கொண்டுள்ளது.
கடையநல்லூர் அரசு மேல் நிலைப் பள்ளியை கலைக் கல்லூரியாக மாற்றவேண்டும்
            கடையநல்லூர் பல சமூகத்தவர்கள் நிறைந்து வாழும் பாரம்பரியம் மிக்க ஊராகும். இங்கு பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர்கள் உயர் கல்விக்காக நூற்றுக்கு நூறு சதம் வெளியூர்களுக்கே செல்ல வேண்டியுள்ளது. குறைந்த பட்சம் ஒரு கலைக் கல்லூரி கூட இவ்வூரில் இல்லாதது வேதனை அளிக்கிறது. முஸ்­ம் சமூகத்தைச் சேர்ந்த பெண் குழந்தைகள் படிப்பதற்கு ஆர்வமாக இருந்தாலும் வெளியூர்களுக்குச் சென்று படிக்க இயலாமல் பரிதவிக்கின்றனர். எனவே அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியை அரசு கலைக் கல்லூரியாக தரம் உயர்த்த வேண்டுகிறோம்.
சுடுகாடுகளை மின்மயமாக்கக் வேண்டும்
            கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மலம்பாட்டை ரோட்டிற்கு மேற்கேயும் மற்றும் மலம்பாட்டை ரோடு அரசு மருத்துவமனைக்கு மேற்கேயும் அமைந்துள்ள நகராட்சிக்குச் சொந்தமான இந்து சமுதாயத்தின் சுடுகாடுகள் இரண்டு உள்ளன. இங்கு காலம் காலமாக இந்து சமுதாயத்தின் பிரேதங்கள் எரிக்கப்பட்டு வருகின்றன. சில ஆண்டுகளாக இப்பகுதியில் பல சமூகத்தவர்கள் குடியேறி வசித்து வருகிறார்கள். இச்சுடுகாடுகளில் இந்துக்களின் வழக்கப்படி பிரேதங்கள் எரிக்கப்படுவதால் சொல்­க் கொள்ள முடியாத அளவிற்கு புகை மண்டலம் ஏற்பட்டு சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்டுவதுடன் இனம் புரியாத நோய்களுக்கும் இங்குள்ளவர்கள் ஆளாக்கப்படுகிறார்கள். எனவே, இச்சுடுகாடுகளை மின்மயமாக்கி மாசுக் கட்டுப்பாட்டுடன் அதைப் பராமரிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு 32, 33வது வார்டு பொதுமக்கள் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.
வாரச் சந்தையை உழவர் சந்தையாக மாற்றவேண்டும்
கடையநல்லூர் நகராட்சிக்குச் சொந்தமான வாரச் சந்தை மெயின் ரோட்டில் நகராட்சி அலுவலகத்திற்கு அருகே அமைந்துள்ளது. தற்போது இந்தச் சந்தை புதுப்பிக்கப்பட்ட நிலையில் பல மாதங்கள் செயல்படாமல் உள்ளது . இது ஊருக்கு மையப் பகுதியில் அமைந்துள்ளதால் விவசாயிகளின் விளைபொருட்களை நேரடியாக விவசாயிகளே விற்பனை செய்யும் விதமாக இதை உழவர் சந்தையாக மாற்ற வேண்டும். இதன் மூலம் பொதுமக்களும் விவசாயிகளும் பயனடைவார்கள்.

 போன்ற கோரிக்கை மனுக்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் துணை முதல்வர் அவர்களிடம் வழங்கினர்.





No comments: