கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 12, 2010

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் நகர கிளையின் பொதுக்குழு


ல்லாஹ்வின் கிருபையால், 10. 08. 2010 (திங்கள்) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்கடையநல்லூர் நகர கிளையின் பொதுக்குழு மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட நிர்வாகிகள் டிஎம். ஜபருல்லாஹ்குறிச்சி சுலைமான்அச்சன்புதூர் சுலைமான்சங்கை பீர் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியின் ஆரம்பமாக சகோதரர் யூசுப் பைஜி அவர்கள் நபிமார்கள் வாழ்வு தரும் படிப்பினை என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்கள்.
இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட விஷயங்கள் பேசப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

  1.  இதில் ஜூலை 4 மாநாடு வரையுள்ள வரவு, கணக்கு தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் வாங்கப்பட்டது.
  2. அமீரகத்தில் நடத்தப்பட்ட தீர்வைத் தேடி நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பொதுக்குழுவில் வாசிக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது.
  3. அதன் அடிப்படையில் பெண்கள் மத்தியில் சிறப்பு பயான்கள் முபாரக். மற்றும் தக்வாவில் மாதந்தோறும் நடத்தவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. முதல் கட்டமாக 11ம் தேதி (புதன்) முபாரக் (நர்ஸரி) வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.
  4.  கடையநல்லூரில் அழைப்புப் பணியை இன்னும் மும்முரமாகச் செய்யவேண்டும் என்றும் ரமலானுக்கு பிறகு பொதுக்கூட்டம் நடத்தவேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
  5.  டிஎன்டிஜே நகரத்திற்கான சந்தாவை அதிகப்படுத்தவேண்டியும் புதிய சந்தாதாரர்களை சேர்ப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
  6. தக்வா பள்ளியில் சிடி மற்றும் புத்தக நூலகம் துவங்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு இதற்காகும் செலவினங்களை சகோதரர்களிடம் கேட்டுப் பெறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நகர நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். நகர தலைவர் முஹம்மது கோரி அவர்கள் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.










No comments: