RASMIN M.I.Sc
இலங்கையில் தவ்ஹீத் பிரச்சாரம் என்ற பெயரில் வஹ்ஹாபிஸ தீவிரவாதம் நடை பெருவதாக 19.09.2010 அன்று லக்பிம நிவ்ஸ் என்ற ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது.
இலங்கையில் இதுவரை முஸ்லீம்கள் என்று சொல்லக் கூடிய எந்த ஒரு அமைப்பினரும் தீவிரவாதத்தில் ஈடுபட்டதும் இல்லை.அதனை ஆதரித்ததும் இல்லை.
அப்படியிருக்க இது போன்ற செய்திகளை லக்பிம நிவ்ஸ் வெளியிடுவது பெரும் அபத்தமாகும் என்பதை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் உடனடியாக தனது கண்டனத்தின் மூலம் பதிவு செய்தது.
கலத்தில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்.
கடந்த 09ம் மாதம் 19ம் தேதி Wahhabist terriorist traning in srilanka ? THE ISSUES என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை லக்பிம நிவ்ஸ் ஆங்கில நாளேடு வெளியிட்டதும் அதற்கு உடனடியாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மறுப்பு வெளியிட்டதும் நாம் அனைவரும் அறிந்ததே.
அவசரமாக கூடிய SLTJயின் நிர்வாகக் குழு.
இந்தச் செய்தி வெளியிடப் பட்டவுடன் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் நிர்வாகக் குழு அவசரமாக கூடியது அந்த கூட்டத்தில் அடுத்த நாள் இது தொடர்பான ஒரு அவசர ஆலோசனை கூட்டத்தை நடத்துவதென முடிவெடுக்கப் பட்டது.
புத்தி ஜீவிகளுடனான சந்திப்பு.
இந்தச் செய்தி வெளியிடப்பட்டு இரண்டாவது நாள் கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகத்தில் வைத்து ஒரு கூட்டம் நடத்தப் பட்டது.
கூட்டத்தில் சட்டத்தரணி ஹனீபா லேடி ரிஜ்வே சிறுவர் மருத்துவமனையின் டாக்டர் சுபைர் பிரபல பத்திரிக்கையாளர் என்.எம்.அமீன் இலங்கை மேல் மாகாண சபை உருப்பினர் மொஹமட் அர்சாத் நிஸாம்தீன் மற்றும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தலைவர் செயலாளர் உற்பட அனைத்து உருப்பினர்களும் கலந்து கொண்டனர்.
முதலாவதாக லக்பிம பத்திரிக்கை தொடர்பாக பத்திரிக்கை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் ஒரு புகார் கொடுப்பது என்றும் அதன்படி அந்தப் பத்திரிக்கை நாம் கொடுக்கும் முறைப்பாட்டை தனது பத்திரிக்கையில் வெளியிட வேண்டும் என்றும் அப்படி வெளியிடாத பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கையில் ஜமாத் இறங்குவதென்றும் முடிவெடுக்கப் பட்டது.
இறுதியாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் லக்பிம பத்திரிக்கைக்கு கொடுத்த அறிவித்தலை அந்தப் பத்திரிக்கை இன்று 03.10.2010 தனது பத்திரிக்கையில் பிரசுரித்துள்ளது.
No comments:
Post a Comment