கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 4, 2010

தக்லீத் ஓர் ஆய்வு.(தொடர் 02)

RASMIN M.I.Sc

தக்லீத் என்றால் என்ன?

ஒரு அறிஞரின் கருத்தை அவர் சொன்னால் தவராகவே இருக்காது அது சரியாகத் தான் இருக்கும் என்று நினைத்து கண்மூடிப் பின்பற்றுவதை தக்லீத் என்று பரிபாசையில் நாம் அறிகிறோம்.
அதாவது ஆரம்பகால தவ்ஹீத் பிரச்சார நேரத்தில் மத்ஹபை பின்பற்றக் கூடிய ஆலிம்கள் நம்மை பார்த்து எழுப்பிய கேள்விகளில் மிக முக்கியமானது நீங்கள் ஏன் இமாம்களை பின்பற்றுவதில்லை என்பதாகும்.
அதே போல் இன்று தவ்கஹீத் வாதிகள் என்று தம்மை சொல்லிக் கொள்ளும் ஆலிம்களும் நம்மைப் பார்த்துக் கேட்கும் கேள்வி நீங்கள் ஏன் ஸஹாபாக்களை பின்பற்றுவதில்லை என்பதுதான்.
இந்த இரண்டு கேள்விக்கும் ஒரே பதிலைத் தான் இறைவன் நமக்குக் கற்றுத் தந்துள்ளான்.          
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள்.எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ(அதைவிட்டும்)தவிர்ந்து கொள்ளுங்கள் (59:5)
ஆக மொத்தத்தில் இரண்டு தரப்பாரும் தக்லீத் என்ற வட்டத்திற்குள் தான் இருக்கிறார்கள் நம்மையும் அங்குதான் இழுக்கப் பார்க்கிறார்கள்.
முதலில் மத்ஹபு வாதிகளின் தக்லீதின் பின்னனியை நோக்குவோம்.
மத்ஹபுகளில் பிரச்சினை உள்ளது, சிந்தனைக்கு எட்டாத கதைகள் உள்ளது, ஆபாசங்கள் நிறைந்துள்ளது என்றெல்லாம் அதில் உள்ள உண்மைகளை ஏகத்துவ வாதிகள் எடுத்துக் காட்டும் போது அவர்களின் நிலை இமாம்கள் சொன்னால் அது சரியாக இருக்கும் இமாம்கள் பொய் சொல்ல மாட்டார்கள் தவறாக எழுத மாட்டார்கள் என்பதாகத்தான் இருக்கிறது.
ஷியாக்கள் என்பவர்கள் எப்படி அலி(ரலி) அவர்களை அளவுகக்கதிகமாக நேசித்ததன் மூலம் நபியவர்களுக்கும் மேலாக அவர்களை கொண்டு போய் நிருத்தினார்களோ நபிக்காக உயிரைக் கூட கொடுக்க தயங்காத நபித் தோழர்களை எப்படி வாய் கூசாமல் தூற்றினார்களோ அது போல் மத்ஹபைப் பின்பற்றுபவர்களும் அவர்கள் எந்த மத்ஹபை சார்ந்திருக்கிறார்களோ அந்த மத்ஹபுக்கெதிராக எவர் பேசினாலும் அவரை கடும் வார்த்தைகளால் வசை பாடி தாங்கள் குறிப்பிட்ட இமாமை கண்மூடிப் பின்பற்றுபவர்கள் என்பதை பரை சாற்றுகிறார்கள்.
உதாரணத்திற்கு ஹனபி மத்ஹபின் மீது ஆழ்ந்த பக்தி கொண்டு ஹனபி இமாமை தக்லீத் செய்தவர்கள் ஷாபி இமாம் மீது சொன்ன இழி சொற்களை பாருங்கள்.
(மத்ஹபைப் பின்பற்றுபவர்களின்)மத்ரஸாக்களில் பாடப் புத்தகமான வைக்கப்பட்டுள்ள துர்ருல் முக்தார் என்ற புத்தகத்திலும் அதன் விரிவுரை நூலான ரத்துல் முக்தாரிலும் முன்னுரையில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு செய்தியைப் பாருங்கள்.
وعنه عليه الصلاة والسلام (إن آدم افتخر بي وأنا أفتخر برجل من أمتي اسمه نعمان وكنيته أبو حنيفة، هو سراج امتيالدر المختار 1 56
ஆதம் (அலை) அவர்கள் என் மூலம் பெருமை அடைந்தார்கள். நான் என் உம்மத்தில் வருகின்ற நுஃமான் எனும் இயற்பெயர் கொண்ட அபூஹனீபாவைக் கொண்டு பெருமையடைவேன். அவர் என் சமுதாயத்துக்கு விளக்காவார் என்று நபி (ஸல்) கூறியதாக அந்த துர்ருல் முக்தாரில் கூறப்பட்டுள்ளது.
மேற்கண்ட செய்தியில் நபியவர்கள் அபூஹனீபாவின் மூலம் பெருமையடைவதாக அவர்களை கூறியதாக ஒரு பொய்யை அல்லாஹ்வின் பயமின்றின்றி நபியவர்கள் மீது பகிரங்கமான இட்டுக் கட்டியுள்ளார்கள் இந்த மத்ஹபு வாதிகள்.
அது போல் அதே புத்தகத்தில் இன்னோர் இடத்தில் இப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
           
وعنه عليه الصلاة والسلام إن ساير الانبياء يفتخرون بي، وأنا أفتخر بأبي حنيفة، من أحبه فقد أحبني، ومن أبغضه فقد أبغضني
            எல்லா நபிமார்களும் என் மூலம் பெருமை அடைந்தனர். நான் அபூஹனீபா மூலம் பெருமை பெறுகிறேன். அவரை யார் விரும்புகிறாரோ அவர் என்னை விரும்புகிறார். அவரை யார் வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுக்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஹனபி இமாம் அவர்களை தக்லீத் செய்ததினால் ஏற்பட்ட விளைவைப் பாருங்கள்.அபூஹனீபாவை யாராவது வெருத்தால் அவர் நபியவர்களை வெருக்கிறார் என்றும் அபு ஹனீபாவை யார் நேசிக்கிறாரோ அவரை நபியவர்கள் நேசிக்கிறார்கள் என்றும் பொய்யாக நபியின் மீதே இட்டுக் கட்டியுள்ளனர் இந்த அபு ஹனீபாவின் தக்லீத் கூட்டத்தினர்.
ஒருவர் மீது வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கை அன்பு பாசம் இவர்களை இப்படி வழிகேட்டில் கொண்டு போய் சேர்த்துள்ளது.
அபூ ஹனீபா மீது கொண்ட தக்லீத் அல்லாஹ்வின் பேயராலேயே இவர்களை பொய் சொல்லத் தூண்டியுள்ளது.
அதே துர்ருல் முக்தார் என்ற கிதாபில் உள்ள இந்தச் செய்தியைப் பாருங்கள்.

ولها قصة مشهورة وفي حجته الاخيرة استأذن حجبة الكعبة بالدخول ليلا، فقام بين العمودين على رجله اليمنى ووضع اليسرى على ظهرها حتى ختم القرآن، فلما سلم بكى وناجى ربه وقال: إلهي ما عبدك هذا العبد الضعيف حق عبادتك، لكن عرفك حق معرفتك فهب نقصان خدمته لكمال معرفته، فهتف هاتف من جانب البيت: يا أبا حنيفة قد عرفتنا حق المعرفة وخدمتنا فأحسنت الخدمة، قد غفرنا لك ولمن اتبعك ممن كان على مذهبك الى يوم القيامة.
الدر المختار  1 ஃ55
அபூ ஹனீபா அவர்கள் கஃபாவின் காவலாளியிடம் கஃபாவின் உள்ளே செல்ல ஒரு இரவில் அனுமதி கேட்டார்கள். இரண்டு தூண்களுக்கிடையில் வலது காலில் நின்றார்கள். இடது காலை வலது கால் மீது வைத்துக் கொண்டார்கள். இந்த நிலையில் குர்ஆனை ஓதி முடித்தார்கள். ஸலாம் கூறியதும் அழுதார்கள். தமது இறைவனிடம் இரகசியமாக உரையாடினார்கள். என் இறைவா இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. எனினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளேன். எனவே இந்த அடியானின் முழு ஞானம் காரணமாக இவரது வணக்கத்தில் உள்ள குறைபாடுகளை மன்னித்து விடு என்று துஆ செய்தார்கள். அப்போது கஃபாவின் ஒரு பகுதியில் இருந்து அவர்களை நோக்கி அபூஹனீபாவே நம்மை விளங்க வேண்டிய விதத்தில் விளங்கிக் கொண்டீர். உம்மையும் உம்மைப் பின்பற்றியவர்களையும் கியாம நாள் வரை மன்னித்து விட்டேன் என்று அசரீரியில் அல்லாஹ் கூறினானாம்.
நபி (ஸல்) அவர்களுக்குப் பின் தங்களின் இமாமுக்கும் வஹீ வந்திருக்கிறது; அதுவும் அவரைப் பின்பற்றியவர்களை கியாம நாள் வரை மன்னிக்கும் உத்திரவாதத்துடன் வஹீ வந்திருக்கிறது என்று சிறு பருவத்திலேயே நம்ப வைத்து விட்டார்கள்.
இப்படி நம்பியவர்கள் எப்படி உண்மையை ஏற்று இந்த வழிகேட்டிலிருந்து விடுபட்டு வருவது ? ஹனபியை நபியளவுக்கு இல்லை நபியை விட மேலாக உயர்துவதற்கு இவர்களுக்கு தைரியம் வரக் காரணம் என்ன தக்லீத் என்ற இந்த தனி மனித வழிபாடுதான்.
அதுபோல் இந்த ஹனபியாக்கள் தமது இமாமை எதிர்ப்பவர்களை ஷைத்தான்கள் என்று கூறும் அளவுக்கு எல்லை மீறியுள்ளதையும் நாம் அறிய முடிகிறது.
இமாம் ஷாபி அவர்கள் இமாம் ஹனபியின் கருத்துக்கு மாற்றமாக பல கருத்துக்களை கூறியதாலும் ஹனபியின் கருத்தை மறுத்து ஷாபியின் கருத்தை சிலர் ஏற்றுக் கொண்டதாலும் தங்களுக்கு ஷாபியின் மீது ஏற்பட்ட அபார வெருப்பு அவரை ஷைத்தான் என்று சித்தரிக்கும் அளவுக்கு முற்றிப் போனது.
என் உம்மத்தில் முஹம்மத் இப்னு இத்ரீஸ்  (அதாவது ஷாபி இமாம்) என்று ஒருவர் தோன்றுவார். இப்லீஸை விட என் சமுதாயத்திற்கு அவர் கேடு செய்வார். மேலும் என் சமுதாயத்தில் அபூஹனீபா என்று ஒருவர் தோன்றுவார். அவர் என்சமுதாயத்தின் விளக்கு ஆவார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்களாம்.
ஒரு தனி மனிதர் மீது ஏற்பட்ட பக்தி இன்னொரு இமாமை இப்லீஸை விட கெட்டவர் என்று கூறும் அளவுக்குச் சிலரை ஆக்கி விட்டது. அதுவும் நபி (ஸல்) அவர்கள் தான் இப்படிச் சொன்னார்கள் என்ற முத்திரையுடன்..
இதை அறிவிப்பவர்களில் மஃமூன் இப்னு அஹ்மத் என்ற பெரும் பொய்யனும்இ அஹ்மத் இப்னு அப்துல்லாஹ் அல் ஜூவைபாரி என்ற பொய்யனும் இடம் பெறுகின்றனர். இவ்விரு பொய்யர்களில் யாரோ ஒருவர் தான் இதை இட்டுக் கட்டியிருக்கின்றனர் என்று ஹதீஸ்கலை மேதை இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தமது மவ்லூஆத் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
மஃமூன் என்ற பொய்யனிடம் ஷாபி இமாமையும் அவரைச் சார்ந்தவர்களையும் பற்றி நீர் என்ன கருதுகிறீர்? என்று கேட்கப்பட்ட போது மேற்கூறிய பொய்யான ஹதீஸைஅவன் கூறினான். மஃமூன் என்ற பொய்யனே இதை இட்டுக் கட்டி இருக்க முடியும் என்று இமாம் ஹாகிம் அவர்கள் தனது அல்மத்ஹல் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள். மேலும் சிறிதளவாவது அறிவு உள்ள ஒவ்வொருவனுக்கும் நபி ஸல் அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய் இது என்று தெளிவாகத் தெரியும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
ஸூயூத்தி அவர்கள் அல்லஆலில் மஸ்னூஆ என்ற நூலில் முதல் பாகத்தில் 457 ஆம் பக்கத்தில் இதைப் பொய்யென நிரூபித்துள்ளார்கள். மேலும் பல அறிஞர்களும் இதைப் பொய்யென நிரூபித்துள்ளனர். இவ்வளவு தெளிவாகப் பொய் என்று அறிஞர்கள் முடிவு செய்த பின்பும் ஹனபி அறிஞர்கள் பலர் இதை சரி காணவே முயற்சிக்கிறார்கள்.
ரத்துல் முக்தார் ஆசிரியர் இது சரியான ஹதீஸ் என்று சாதிக்கிறார். மேற்கூறிய அறிஞர்கள் எல்லாம் அபூஹனீபா அவர்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால் இதைப் பொய் என்று கூறுவதாகத் தெரிவிக்கிறார். ஐனீ போன்ற அறிஞர்களும் இதிலிருந்து தப்பவில்லை. ஹதீஸ் கலை மேதைகள் அறிவிப்பாளர்களின் தராதரத்தை எடை போட்டு தக்கக் காரணங்களுடன் அடையாளம் காட்டியுள்ளதை ஒரு ஆதாரமுமின்றி இந்த ஹனபீ அறிஞர்கள் மறுக்கிறார்கள்.
இந்தக் குருட்டுப் பக்தி ஏற்பட்டு விட்டதால் தான் தங்கள் இமாம் சொன்னதில் தவறே ஏற்படாது என்று நம்புகின்றனர். தவறே ஏற்பட்டாலும் கியாம நாள் வரைக்கும் அல்லாஹ் அதை மன்னித்து விடுவான் என்றும் நம்புகின்றனர். மற்றொரு இமாமை இப்லீஸை விட மோசமானவர் என்று நம்புவதால் தான் அந்த இமாமுடைய எந்தக் கருத்தையும் நாம் ஏற்கக் கூடாது என்ற அளவுக்கு தங்களை மாற்றி கொண்டு விட்டார்கள்.
ஆக தனி மனிதன் மேல் கொண்ட இந்த குருட்டு பக்திதான் இவர்களை இப்படி நபி மீதே பொய் சொல்ல வைத்துள்ளது.
யார் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும் (முஸ்லிம்)

ஆய்வு தொடரும்………………..

No comments: