அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடந்த 05.12.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று டி.என்.டி.ஜெ தென் மாவட்ட நிர்வாகிகள் செயல் வீரர்கள் கூட்டம் மதுரையில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு போராட்டக் குழுத் தலைவரும் மாநில மேலாண்மை குழு உற்ப்பினருமான சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் தலைமை தாங்கினார்கள்
இதில் மாநிலத் தலைவர் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் ஜனவரி 4 பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஏன் ? என்ற தலைப்பிலும், மாநிலச் செயலாளர் சகோ. ஹாஜா நுஹ் அவர்கள் பாபாரி மஸ்ஜிதின் வரலாற்றுப் பின்னணி என்ற தலைப்பிலும், உரை நிகழ்த்தினார்கள். இதில் தென் மாவட்ட அனைத்து நிர்வாகிகளளும் கலந்து கொண்டார்கள்
நிகழ்ச்சியின் இறுதியில் சகோ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்கள்.
No comments:
Post a Comment