கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 3, 2011

பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி

அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர்  கிளை சார்பாக மஸ்ஜித் முபாரக் நர்ஸரி வளாகத்தில் 02.01.2011 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் மக்ரிப் தொழுகை வரை பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட துணைத் தலைவர் சகோ.டி.எம். ஜபருல்லாஹ் அவர்களும் நகர நிர்வாகிகளும் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு நகர தலைவர் சகோ.முஹம்மது கோரி அவர்கள் தலைமை தாங்கினார்.

முதலி­ல் மதரஸாத்துந் நஜாஹ்  மாணவி சகோதரி.அஃப்னான் அவர்கள் ”சின்னத்திரையில் சீரழியும் சமுதாயம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். பின்னர் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் வந்திருந்த பெண்களுக்காக சிற்றுரையாற்றினார்கள்.
இறுதியாக நடைபெற்ற இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நிகழ்ச்சியில்  பெண்கள் கேட்ட மார்க்க சம்பந்தமான சந்தேகங்களுக்கு மேலாண்மைக் குழு உறுப்பினர் சகொ. எஸ்.எஸ்.யூ.ஸைபுல்லாஹ் ஹாஜா குர்ஆன் ஹதீஸ் ஒளியில் சிறப்பாக  பதிலளித்தார்கள்.இந்நிகழ்ச்சிக்கு பெரும் திரளான பெண்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.














No comments: