அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் 12.01.2011 (புதன்கிழமை) மாலை மக்ரிப் தொழுகைக்குப் பின் ரஹ்மானியாபுரம் 2வது தெருவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் நகர கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட துணைத் தலைவர் சகோ.டி.எம். ஜபருல்லாஹ் அவர்கள் தலைமை தாங்கினார்கள். நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் சகோ.முஹம்மது கோரி அவர்கள் தொழுவோம் வாருங்கள் என்ற தலைப்பிலும் சகோ. முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் குர்ஆனைப் படிப்போம் என்ற தலைப்பிலும் சகோ. யூசுப் பைஜி அவர்கள் ஜனவரி 27 ஏன்? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்து பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment