கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 23, 2011

ஏகத்துவம் ஓர் வரலாற்றுப் பார்வை!


லக வரலாற்றில் தோன்றிய மதங்கள் கொள்கைகள் எல்லாம் ஒரு காலத்தோடு முடிந்து போய் அந்தக் கொள்கைகள் இருந்த இடமே இல்லாமல் போன வரலாறுகள் நிறையவே உண்டு. அந்தக் கொள்கைகளின் நம்பகமின்னையே இதற்கான பிரதான காரணமாகும்.

ஆனால் இஸ்லாம் இந்த உலகில் என்று தோன்றியதோ அன்றிலிருந்து இன்று வரை எந்த ஒரு தோழ்வியும் இன்றி வெற்றிக் கொடி நாட்டிய வரலாறு அனைவரும் அறிந்ததே!

இஸ்லாம் இப்பயெல்லாம் வெற்றிக் கொடி நாட்டியதற்கான காரணம் வரலாறு நெடிகிலும் மிகத் தெளிவாகவே இருக்கிறது.

நபிமார்களின் இறையச்சம், நேர்மை, நம்பகத்தன்மை, வார்த்தைத் தூய்மை இவைகளே இந்த இஸ்லாமிய மார்க்கம் இன்றும் நிலைப்பதற்கான முக்கிய காரணங்களாகும்.

அதிலும் இஸ்லாமிய மார்க்கம் சொல்லும் கொள்கை மற்ற அனைத்து மதங்களும், சித்தாங்களும் கொள்கைகளும் சொல்லும் அடிப்படைத் தத்துவத்துடன் நேர் மாறாக மோதும் கொள்கையாக இருக்கிறது.
அதுதான் அல்லாஹ்வைத் தவிர மற்ற எவரையும் வணங்கக் கூடாது என்பதும் நபி (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதர் என்பதுமாகும்.

ஏகத்துவத்தை தனது உயிர் மூச்சாகக் கொண்ட இந்த இஸ்லாமிய மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதற்காக இறுதியாக அனுப்பப்பட்ட நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வரலாற்றில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
 
அதுதான் ஏகத்துவத்திற்கு எதிரி நாட்டில் வெற்றிக் கொடி நாட்டிய முக்கிய நிகழ்வாகும்.

புகாரியில் இடம் பெற்ற ஏகத்துவத்தின் வரலாற்று நிகழ்வை அப்படியே இங்கு தருகிறோம். இந்தச் சம்பவத்தைப் பார்ப்பவர்கள் அனைவரும் ஏகத்துவத்தின் வரலாற்று வெற்றியை மிகத் தெளிவாக தமது மனதில் பதித்துக் கொள்ள முடியும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது (மக்கா குறைஷித் தலைவர்களில் ஒருவரான) அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் என்னிடம்  தெரிவித்தார்கள்:

என்னிடமும் குறைஷி இறை மறுப்பாளர்களிடமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுதைபியா) ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில்  குறைஷியரின் வணிகக் குழு ஒன்று ஷாம் (சிரியா) நாட்டில் வணிகம் செய்துகொண்டிருந்தது.

குறைஷி வணிகக் குழுவினருடன் இருந்த என்னை அழைத்துவரும்படி (ரோம பைஸாந்தியப் பேரரசர்) ஹெராக்ளியஸ் ஆளனுப்பினார். நாங்கள் அவரிடம் வந்துசேர்ந்தோம். அவரும் அவருடைய ஆட்களும் "ஈலியா'வில் (பைத்துல் முகத்தஸில்) இருந்தார்கள். ரோமபுரி அரசுப் பிரதிநிதிகள் தம்மைச் சூழ்ந்திருந்த அ(ரச)வைக்கு வரும்படி எங்களை ஹெராக்ளியஸ் அழைத்தார். (நாங்கள் அங்கு போய்ச் சேர்ந்த) பிறகு (தமக்கு அருகில் வந்து அமருமாறு) எங்களை அழைத்த துடன் தம்முடைய மொழிபெயர்ப்பாளரையும் அழைத்தார்.

(பிறகு எங்களைப் பார்த்து,) "தம்மை இறைத்தூதர் என்று சொல்லிக் கொண்டிருக்கும் இந்த (முஹம்மத் எனும்) மனிதருக்கு உங்களில் நெருங்கிய உறவினர் யார்?'' என்று கேட்டார். நான் "நானே இவர்களில் (அவருக்கு) நெருங்கிய உறவினன்'' என்று பதிலளித்தேன்.

ஹெராக்ளியஸ் (தம் அதிகாரிகளிடம்) "அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; (அவருடன் வந்திருக்கும்) அவருடைய நண்பர்களையும் எனக்கருகில் கொண்டுவந்து அவரது முதுகுக்குப் பின்னால் நிறுத்துங்கள்'என்று கூறினார்.

பிறகு தம் மொழிபெயர்ப்பாளரிடம் "நான் (முஹம்மதைப் பற்றி) இவரிடம் கேட்பேன். இவர் பொய் (ஏதும்) சொன்னால் உடனே "அவர் பொய் சொல்கிறார்என்று கூறிவிட வேண்டும் '' என அவருடைய நண்பர்களிடம் (மொழிபெயர்த்துச்) சொல் என்று சொன்னார்.

நான் பொய் சொன்னால் என் நண்பர்கள் அதைத் தெரிவித்துவிடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் எனக்கு அப்போது இல்லாதிருந்தால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் நபியவர்களைப் பற்றி பொய்(யானத் தகவல்களைச்) சொல்லியிருப்பேன்.

பிறகு ஹெராக்ளியஸ் என்னிடம் நபி (ஸல்) அவர்களைப் பற்றி கேட்ட முதல் கேள்விஉங்களிடையே அந்த மனிதரின் குலம் எப்படிப் பட்டது?'' என்பதேயாகும்.

அதற்கு "அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சேர்ந்தவர்'' என்று கூறினேன்.

(பிறகு) அவர், "உங்களில் எவரேனும் இதற்கு முன் இப்படி(த் தம்மை "நபிஎன) எப்போதாவது வாதித்ததுண்டா?'' என்று கேட்டார்.

நான் "இல்லைஎன்று பதிலளித்தேன்.

அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாராஎன்று கேட்டார்.

நான் "இல்லைஎன்றேன்.

அவரை மக்களில் மேட்டுக்குடியினர் பின்பற்றுகின்றனராஅல்லது அவர்களில் பலவீனர்கள் (ஒடுக்கப்பட்டவர்கள்) பின்பற்றுகின்றனராஎன்று கேட்டார்.

அதற்கு நான், "இல்லைபலவீனர்கள்தாம் (அவரைப் பின்பற்றுகின்றனர்)''என்று சொன்னேன்.

அவரைப் பின்பற்றுவோர் அதிகரித்துக்கொண்டே செல்கின்றார்களாஅல்லது குறைந்துகொண்டே போகின்றார்களாஎன்று கேட்டார்.

நான்இல்லைஅவர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்'' என்று கூறினேன்.

அவரது மார்க்கத்தில் இணைந்த பிறகு தம் புதிய மார்க்கத்தின்மீது அதிருப்தியடைந்து எவரேனும் அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?என்று கேட்டார்.

நான் "இல்லைஎன்று சொன்னேன்.

அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன் அவர் (மக்களிடம்) பொய் சொன்னார் என்று (எப்போதேனும்) நீங்கள் அவரைச் சந்தேகித்திருக்கின்றீர்களாஎன்று கேட்டார். 

நான் "இல்லைஎன்றேன்

அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாராஎன்று கேட்டார்.

நான் "இல்லை (தற்போது நடைமுறையிலுள்ள ஹுதைபியா சமாதான உடன்படிக்கையின்) இந்தக் காலகட்டத்தில் நாங்கள் இருக்கின்னறோம். இதில் அவர் எப்படி நடந்துகொள்வார் என்று எங்களுக்கத் தெரியாது'' என்று சொன்னேன்.

இதைத் தவிர (நபியவர்களை குறைசொல்வதற்கு) வேறு எந்த வார்த்தையையும் புகுத்த எனக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

அவர் அந்த மனிதருடன் நீங்கள் போர் புரிந்ததுண்டாஎன்று கேட்டார்.

நான் "ஆம்என்று சொன்னேன்.

அவர்அவருடன் நீங்கள் நடத்திய போர்க(ளின் முடிவு)கள் எப்படி அமைந்தனஎன்று கேட்டார்.

எங்களுக்கிடையேயான போர் (கிணற்று) வாளிகள்தாம்; (அவை சுழல் முறையில் மாறி மாறி வருகின்றன. ஒருமுறை) அவர் எங்களை வெல்வார். (மறுமுறை) நாங்கள் அவரை வெல்வோம் என்றேன்.

அவர் உங்களுக்கு என்ன (செய்யும்படி) கட்டளையிடுகின்றார்?'' என்று கேட்டார்.

நான் "அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்அவனுக்கு எதனையும் எவரையும் இணையாக்காதீர்கள்உங்கள் மூதாதையர் சொல்லி வருகின்ற (அறியாமைக்கால) கூற்றுகளையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார்.  தொழுகையை நிறைவேற்றும்படியும், "ஸகாத்'கொடுக்கும்படியும்உண்மை பேசும்படியும்சுயக்கட்டுப்பாட்டுடன் வாழும்படியும்உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடகின்றார் என்று சொன்னேன்.

பிறகு ஹெராக்ளியஸ் தம் மொழிபெயர்ப்பாளரிடம் (பின்வருமாறு) கூறினார்:

(அபூசுஃப்யானிடம்) கூறிவிடு :

நான் உம்மிடம் அவருடைய குலத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு நீர்அவர் (முஹம்மத்) எங்கள் மத்தியில் சிறந்த குலத்தை உடையவர்என்று பதிலளித்தீர். இவ்வாறே இறைத்தூதர்கள் ஒரு சமுதாயத்தின் நற்குடியில்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

நான் உம்மிடம் "(இவருக்கு முன்னர்) உங்களில் எவரேனும் இந்த வாதத்தை முன் வைத்ததுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லை'என்று பதிலளித்தீர். இவருக்கு முன்னர் எவரேனும் இந்த வாதத்தை முன்வைத்திருந்(ததாக நீர் கூறியி ருந்)தால், "தமக்கு முன்னர் (சிலரால்) முன்வைக்கப் பட்ட ஒரு வாதத்தைப் பின்பற்றிச் செல்கின்ற ஒரு (சராசரி) மனிதர்தாம் இவர் என்ற நான் சொல்லியிருப்பேன்.

நான் உம்மிடம் "அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்திருக்கின்றாராஎன்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லைஎன்று பதிலளித்தீர். அவருடைய முன்னோர்களில் அரசர் எவரேனும் இருந்(ததாக நீர் கூறியிருந்)தால் தம் முன்னோரின் ஆட்சியதிகாரத்தை(த் தாமும்) அடையவிரும்பும் ஒரு (சராசரி) மனிதர் தாம் இவர் என்று நான் கூறியிருப்பேன்.

 நான் உம்மிடம் "அவர் இவ்வாறு (தம்மை இறைத்தூதர் என) வாதிப்பதற்கு முன்பு (அவர் மக்களிடம்) பொய் பேசினார் என்று எப்போதேனும் நீங்கள் சந்தேகித்ததுண்டாஎன்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லைஎன்று பதிலளித்தீர். இதிலிருந்து மக்களிடம் பொய் பேச(த் துணிய)ôத அவர் அல்லாஹ்வின் மீது பொய் சொல்லமாட்டார் என்று நான் புரிந்துகொண்டேன்.

நான் உம்மிடம் "மக்களில் மேட்டுக் குடியினர் அவரைப் பின்பற்றுகின்றனராஅல்லது பலவீனர்களா (ஒடுக்கப்பட்டவர்களா) என்று கேட்டேன். அதற்கு நீர் "ஒடுக்கப்பட்ட மக்களே அவரைப் பின்பற்றுகின்றனர்'என்ற பதிலளித்தீர். (பெரும்பாலும்) அவர்கள்தாம் இறைத்தூதர்களைப் பின்பற்றுவோர் ஆவர்.

நான் உம்மிடம் "அவ(ரைப் பின்பற்றுபவ)ர்கள் (நாளுக்கு நாள்) அதிகரித்துவருகின்றனராஅல்லது குறைந்துவருகின்றனரா?' என்ற கேட்டேன். அதற்கு நீர் "அவர்கள் அதிகரித்தேவருகின்றனர்என்று பதிலளித்தீர். இறை நம்பிக்கை விவகாரம் அவ்வாறுதான்(வளர்ந்துகொண்டே) இருக்கும்.

நான் உம்மிடம் "அவரது மார்க்த்தில் இணைந்தபின் எவரேனும் தமது (புதிய) மார்க்கத்தின் மீது அதிருப்தி கொண்டு அதிலிருந்து வெளியேறிச் செல்வதுண்டா?' என்று கேட்டேன். அதற்கு நீர் "இல்லைஎன்று பதிலளித்தீர். இறைநம்பிக்கை இத்தகையதேஅதன் மலர்ச்சி இதயங்களில் கலந்துவிடும்போது (அதைக் குறித்து எவருமே அதிருப்தியடையமாட்டார்)

நான் உம்மிடம் "அந்த மனிதர் வாக்கு மீறுகின்றாரா?' என்று கேட்டேன்.அதற்கு நீர் "இல்லைஎன்று பதிலளித்தீர். இறைத்தூதர்கள் இத்தகையோரேஅவர்கள் வாக்கு மீறமாட்டார்கள்.

நான் உம்மிடம் "அவர் உங்களுக்கு என்ன கட்டளையிடுகின்றார்?' என்று கேட்டேன். அதற்கு நீர் "அல்லாஹ்வையே வணங்க வேண்டும்அவனுக்கு எதையும் எவரையும் இணை கற்பிக்கக் கூடாது என்று அவர் கட்டளையிடுவதாகவும்சிலைகளை வணங்க வேண்டாமென்று உங்களுக்குத் தடைவிதிப்பதாகவும்தொழுகைஉண்மைசுயக் கட்டுப்பாடு ஆகிய வற்றை(க் கடைப்பிடிக்கும்படி) அவர் கட்டளையிடு வதாகவும் நீர் பதிலளித்தீர்.

நீர் சொல்வது உண்மையாயிருப்பின் அவர் என்னுடைய இந்தப் பாதங்கள் உள்ள இடத்திற்கு ஆட்சியாளராவார். இறைத்தூதரான அவர் வரவிருப்பதாக நான் அறிந்திருந்தேன். ஆனால்அவர் (குறைஷியரான) உங்களிலிருந்து வருவார் என்று நான் நினைத்திருக்கவில்லை. நான் அவரைச் சென்றடைவேன் என அறிந்தால் அவரைச் சந்திக்க பெரு முயற்சி எடுப்பேன். அவர் அருகில் நான் இருந்திருந்தால் அவரது கால்களைக் கழுவியிருப்பேன்என்று கூறினார்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கடிதத்தைக் கொண்டுவருமாறு ஹெராக்ளியஸ் உத்தரவிட்டார். அக்கடிதத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திஹ்யா அல்கல்பீ (ரலி) அவர்களிடம் கொடுத்துபுஸ்ரா நகர ஆட்சியர் (ஹாரிஸ் பின் அபீஷம்ர்) வாயிலாக ஹெராக்ளியஸிடம் ஒப்படைக்கும்படி கூறியிருந்தார்கள்.

ஹெராக்ளியஸ் அதை வாசிக்கச் செய்தார். அந்தக் கடிதத்தில் (பின்வருமாறு) எழுதப்பட்டிருந்தது:

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இது அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாகிய முஹம்மதிடமிருந்து ரோமா புரியின் அதிபர் ஹெராக்ளியஸுக்கு (எழுதப்படும் கடிதம்:) நேர்வழியைப் பின் பற்றியவர் மீது சாந்தி நிலவட்டும்.

இறை வாழ்த்துக்குப் பின் (விஷயம் என்னவென்றால்)இஸ்லாமை எற்குமாறு உங்களை நான் அழைக்கின்றேன். இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள். (ஏற்றுக்கொண்டால் ஈருலகிலும்) நீங்கள் பாதுகாப்புப் பெறுவீர்கள். (நீங்கள் இஸ்லாமை ஏற்றுக்கொண்டால்,)அல்லாஹ் உங்களுக்குச் சேரவேண்டிய நன்மையை இருமடங்காகத் தருவான். நீங்கள் புறக்கணித்தால், (உங்கள் நாட்டுக் குடிமக்களான) குடியானவர்களின் பாவமும் (அவர்கள் இஸ்லாமை ஏற்காமல் போவதன் குற்றமும்) உங்களையே சாரும்.

"வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள பொதுவான ஒரு விஷயத்திற்கு வாருங்கள். (அஃது யாதெனில்:) "அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நாம் வணங்கலாகாது;அவனுக்கு எதனையும்/ எவரையும் நாம் இணைவைக்கலாகாது;அல்லாஹ்வையன்றி நம்மில் யாரும் யாரையும் இரட்சகர்களாக்கிக் கொள்ளலாகாது. இதன் பிறகும் அவர்கள் ஏற்க மறுத்தால் "திண்ணமாக நாங்கள் அல்லாஹ்வுக்கு அடிபணிகின்றவர்கள் (-முஸ்லிம்கள்)தான் என்பதற்கு நீங்கள் சாட்சகளாக இருங்கள்என்று கூறிவிடுங்கள்.''

ஹெராக்ளியஸ் தாம் சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிஅந்தக் கடிதத்தை படித்து முடித்தபோது அவர் அருகில் (அவரைச் சுற்றிலுமிருந்த மதகுருமார்கள் மற்றும் ரோம பைஸாந்திய ஆட்சியாளர் களின்) கூச்சலும் இரைச்சலும் அதிகரித்தது குரல்கள் உயர்ந்தன. உடனே நாங்கள் (அந்த அவையிலிருந்து) வெளியேற்றப்பட்டோம். நாங்கள் வெளியேற்றப்பட்டபோது நான் என் நண்பர்களிடம் இப்னு அபீகப்ஷா(முஹம்மது) வின் விவகாரம் வலிமை பெற்றுவிட்டது. மஞ்சள் நிற இனத்தாரின் (ரோமரின்) மன்னரே அவருக்கு (முஹம்மதுக்கு) அஞ்சுகிறாரே!என்று சொன்னேன்.

(அன்று தொட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அம்மார்க்கம் விரைவில் வெற்றிபெறும் என்று உறுதிபூண்டவனாக நான் இருக்கலானேன். முடிவில் அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாமைப் புகுத்தினான்.

ஈலியா (பைத்துல் முகத்தஸ்) நிர்வாகியும் (மன்னர்) ஹெராக்ளியஸின் நண்பருமான இப்னு நாத்தூர் என்பார் ஷாம் நாட்டுக் கிறிஸ்தவர்களின் தலைமைக் குருவாக இருந்தவர் ஆவார். அவர் அறிவிக்கிறார்

ஹெராக்ளியஸ் ஈலியா' (பைத்துல் முகத்தஸ்) வந்தபோது மனசஞ்சலத்துடன் காணப்பட்டார். அப்போது அவருடைய அரசவைப் பிரதானிகளில் சிலர் தங்களின் (கவலை தோய்ந்த) இந்தத் தோற்றம் எங்களுக்கு கவலை அளிக்கிறது'' என்று கூறினார்கள்.

மன்னர் ஹெராக்ளியஸ் கிரகங்களைப் பார்த்து சோதிடம் சொல்வதில் கைதேர்ந்தவராயிருந்தார்.

(தங்களின் கவலைக்குக் காரணம் என்ன வென்று) அவர்கள் வினவியதற்குஇன்றிரவு நான் நட்சத்திரங்களை கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த போது,விருத்தசேதனர்களின் அரசர் தோன்றிவிட்டதைப் பார்த்தேன் என்று ஹெராக்ளியஸ் கூறிவிட்டு இந்தத் தலைமுறையினரில் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடையவர்கள் யார்? என்று கேட்டார்.

அதற்கு அவர்கள் (நாங்கள் அறிந்தவரையில்) யூதர்களைத் தவிர வேறுயாரும் விருத்தசேதனம் செய்துகொள்வதில்லை அவர்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள் உங்கள் ஆட்சிக்குட்பட்ட நகரங்களுக்கெல்லாம் எழுதி அங்குள்ள யூதர்களைக் கொன்றுவிடுமாறு கட்டளையிடுங்கள்என்றார்கள். 

இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருக்கையில்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிய தகவலைத் தெரிவிக்கும் ஒரு மனிதரை கஸ்ஸான் குலத்தின் (குறுநில) மன்னர்ஹெராக்ளியஸிடம் அனுப்பியிருந்தார் அம்மனிதர் ஹெராக்ளியஸிடம் அழைத்து வரப்பட்டார். அவரிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்ட ஹெராக்ளியஸ், "இவரை அழைத்துச் சென்று இவர் விருத்தசேதனம் செய்திருக்கிறாராஅல்லவா?என்று சோதியுங்கள்'' என்று ஆணையிட்டார். அவ்வாறே அவரைப் பார்வையிட்டனர் அவர் விருத்தசேதனம் செய்திருப்பதாக ஹெராக்ளியஸிடம் கூறினார்கள். மேலும்அந்த மனிதரிடம் ஹெராக்ளியஸ் அரபுக(ளின் பழக்க வழக்கங்க)ள் குறித்து விசாரித்தபோதுஅவர்கள் விருத்த சேதனம் செய்துகொள்ளும் வழக்கமுடையவர்கள்தான் என்று குறிப்பிட்டார். உடனே ஹெராக்ளியஸ் இதோ இந்தத் தலைமுறையினரின் அரசர் தோன்றிவிட்டார் என்று கூறினார்.

பின்னர் (இதுதொடர்பாக ரோமின் தலைநகரான) ரூமியாவில் இருந்த தம் நண்பரும் கல்வி கேள்வியில் தமக்கு நிகரான வருமான (ளஃகாத்திர் எனும்) ஒவருக்குக் கடிதம் எழுதிவிட்டு ஹெராக்ளியஸ் ஹிம்ஸ் நகருக்குச் சென்றார். அவர் ஹிம்ஸ் சென்றடைவதற்குள் நண்பரிடமிருந்து (பதில்) கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில் ஹெராக்ளியஸின் ஊகப்படியே,நபிகளாரின் வருகை பற்றியும் அவர் இறைத்தூதர்தாம் என்பது பற்றியும் கூறப்பட்டிருந்தது.

பின்னர் ஹெராக்ளியஸ் ஹிம்ஸ் நகரிலிருந்த தமது கோட்டை ஒன்றிற்கு வருமாறு ரோமா புரியின் பிரமுகர்கள் அனைவருக்கும் ஆணையிட்டார். (அவர்கள் வந்து சேர்ந்ததும்) அந்தக் கோட்டையின் கதவுகளையெல்லாம் பூட்டிவிடும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அவை பூட்டப்பட்டன.

பின்னர் ஹெராக்ளியஸ் (அந்த அவையிலிருந்தவர்கள்) முன்தோன்றி,ரோமானியரே! உங்களுக்கு வெற்றியும் நேர்வழியும் கிடைக்க வேண்டுமென்ற ஆசையும்உங்கள் ஆட்சி நீடிக்க வேண்டுமென்ற எண்ணமும் உங்களுக்கு உண்டாஇந்த இறைத் தூதரை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று பேசினார். இதைக் கேட்ட மாத்திரத்தில் காட்டுக் கழுதைகள் வெருண்டோடுவதைப் போன்று கோட்டைக் கதவுகளை நோக்கி அவர்கள் வெருண்டோடிகதவுகளை நெருங்கியதும் அவை தாளிடப்பட்டிருக்கக் கண்டனர். 

அவர்கள் வெருண்டோடுவதைப் பார்த்த ஹெராக்ளியஸ் நபி (ஸல்) அவர்கள் மீது இந்த மக்கள் விசுவாசம் கொள்ளமாட்டார்கள் என்று நிராசையான போது, "அவர்களை என்னிடம் திருப்பியனுப்புங்கள் என்று (காவலர்களை நோக்கிச்) சொன்னார். (அவர்கள் திரும்பி வந்ததும்) நீங்கள் உங்கள் மதத்தின் மீது கொண்டுள்ள பிடிப்பைச் சோதிக்கவே நான் சற்று முன்னர் அவ்வாறு பேசினேன். இப்போது (உங்கள் உறுதியை) ஐயமற அறிந்து கொண்டேன் என்று கூறினார். உடனே (ரோமர்களின் வழக்கப்படி) அனைவரும் அவருக்கு சிரம்பணிந்தனர். அவரைக் குறித்து திருப்தியும் அடைந்தனர். இதுவே (மன்னர்) ஹெராக்ளியஸின் இறுதி நிலைப்பாடாக இருந்தது.  (புகாரி : 07)

அன்பின் சகோதரர்களே !

இஸ்லாமிய வரலாற்றில் ஏகத்துவத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரலாற்று வெற்றியாக இந்த வெற்றி இன்றும் கணிக்கப்படுகிறது. வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் ஏகத்துவத்தை ஏற்று வாழ்ந்து மரணிக்கின்ற பாக்கியத்தைத் தந்தருள் புரிவானாக!
 
Courtesy: www.rasminmisc.tk 

No comments: