அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் கடந்த 08-07-2011 வெள்ளிக்கிழமை அன்று ஜித்தாவாழ் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டமைப்பின் தலைவர் சகோ.அப்துல்காதர் தலைமையில், மண்டல நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. தொடர்ந்து தாயகத்திலிருந்து வருகை தந்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர் சகோ.ரஹ்மத்துல்லாஹ் கடையநல்லூரில் நடந்த இரண்டு பொதுக்குழுவின் நடந்த நிகழ்வுகளை விளக்கினார்கள்.
1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடைகாட்டி, நிர்வாகியாகிய சகோ.SSU.ஸைபுல்லாஹ் ஹாஜா TNTJ-ஏற்பாட்டில், TNTJ-யின் அழைப்புப்பணிக்காக சென்ற போது முபாரக் பள்ளிக்கு பக்கத்தில் இடம் வாங்கும் வகைக்கு வசூல் செய்துள்ளார்.
2. முபாரக் பள்ளிக்கு TNTJ – செயல்பாடு அடங்கிய சுயவிபரத்தை காட்டி வசூல் செய்தது.வெளியூர் நபர்களிடமும் காட்டி வசூல் செய்துவிட்டு இன்று TNTJ-மாநில விதியின்படி TNTJ கடையநல்லூர் கிளையின் பெயரில் எழுதாமல் தனிநபரின் பெயரில் முடித்து அனைத்து கடையநல்லூர் TNTJ சகோதரர்களை ஏமாற்றி, மோசடி செய்த விபரத்தையும் விளக்கினார்கள்.
3. அவர் நிர்வாகியாக இருந்து கொண்டிருக்கும் போதே தனியாக ஒரு அமைப்பை கண்டது.
4. தேர்தலின் போது ஜமாஅத்தோடு அல்லாமல் தனியே பிரச்சாரம் செய்தது.
5. ஆம்புலன்ஸ் கணக்கை காட்டாமல் தனது கையில் வைத்திருந்தது. பி்த்அத்தான ஆடம்பர திருமணங்களை நடத்திவைத்தது. தனது மகளுக்கு சீர் கொடுத்து திருமணத்தை நடத்தியது. போன்ற பல காரணங்களால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து சகோ.SSU.ஸைபுல்லாஹ் ஹாஜா மற்றும் முன்னால் நகர நிர்வாகிகள் நீக்கப்பட்ட விபரங்களை விளக்கினார்கள்.
6. முபாரக் பள்ளியை TNTJ –க்கு எழுதிக்கேட்பதாக பரப்பப்படும் செய்தி குறித்து கேட்ட கேள்வி்க்கு அது தவறான செய்தி என்பதற்கு பொதுக்குழு வீடியோ ஆதாரங்களை பலரும் காணவேண்டி வெளியிடச் சொன்னார்.
7. இந்த கூட்டமைப்பிற்கு 4 விதிமுறையை நிர்ணயித்தார்கள்.
A. இந்த கூட்டமைப்பின் பொதுக்குழு ஜித்தா மண்டல தலைமையின் நிர்வாகிகள் முன்னிலையில் தான் கூட்டவேண்டும்.
B. 6 மாதத்திற்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டி அதில் வரவு,செலவு கண்க்குகளை காட்ட வேண்டும்.
C. ஊருக்கு அனுப்பப்படும் தொகையினை மண்டல தலைமை மூலம் அனுப்பி ரசீதை மண்டல தலைமையிடம் கேட்டு வாங்கிக் கொள்ளவேண்டும்.
D. தனியாக தாவா பணிசெய்ய வேண்டாம், மண்டல தலைமையின் தாவா பணியில் கலந்து கொள்ள வேண்டும்.
8. அமைப்புக்கு எதிராக ஆட்களை திரட்ட, MMJ என்ற புதிய அமைப்புகண்ட முகையதீன், அபுல்காசிம் இருவரையும்TNTJ- அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கிட்டதாகவும். ஜமாஅத் விஷயமாக அவர்களுடன் எந்த தொடர்பும் வைக்க வேண்டாம் என்றும் ஜித்தா மண்டல செயலாளர் சகோ.அப்துல் பாரி அறிவித்தார்கள்.
தொடர்ந்து மண்டல தலைவர் சகோ.நவ்ஷாத் நிர்வாகிகளை கைஉயர்த்தி வாக்கெடுப்பு நடத்தி தேர்வு செய்தார்கள்.
· தலைவர் – கும்மாளி அப்துல் காதர்- 055 6119908
· துணைத்தலைவர்- சாகிபுவீடு- ஹலீம் சித்தீக் - 050 9419349
· செயலாளர் – புலஞ்சகரி – முஹம்மது ஹனீஃபா – 053 5861748
· துணைச்செயலாளர் – பேட்டை- முகையதீன் – 050 7963304
· பொருளாளர் – தெங்கலெப்பை- அல் அமீன்- 054 317439
ஆகியோரை அனைவரும் ஒருமனதாக தேர்வு செய்தனர். இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. துஆவுடன் அமர்வு நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment