கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Aug 22, 2011

திருச்சி பாலக்கரை TNTJ கிளை நீக்கம் சம்பந்தமாக!!!


திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாலக்கரை பள்ளிவாசலுக்கு இடம் வாங்கும் போதே அது ட்ரஸ்ட் பெயரில் தான் வாங்கப்பட்டது. அதன் டிரஸ்டிகளாக சில செல்வந்தர்கள் மட்டும் இருந்தனர். அப்போது ட்ரஸ்ட் பெயரில் சொத்து வாங்கக் கூடாது என்ற விதி வகுக்கப்படவில்லை.
அந்த விதி வகுக்கப்பட்ட பின்னர் அதன் ட்ரஸ்டிகள் பாலக்கரை கிளையாகச் செயல்பட சம்மதித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் பாலக்கரை பகுதியைச் சேர்ந்த அனைத்து சகோதரர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க ஒப்புக் கொண்டு அதன்படி பாலக்கரை கிளையாக செயல்பட்டு வந்தனர். மேலும் ஜும்மாவுக்கும் இன்ன பிற நிகழ்ச்சிக்கும் மாநிலத்தில் இருந்து தான் பேச்சாளர்கள் அனுப்பப்பட்டு வந்தனர்...

ஆனாலும் இந்தக் கிளைக்கும் மாவட்ட நிர்வாகிகளுக்கும் அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வந்தன. மாவட்டத்தில் உள்ள எல்லா கிளைகளும் இவர்களின் மீது அதிருப்தி கொண்டிருந்தன. இதற்குக் காரணம் ஜமாஅத்தின் பெயரைக் கெடுக்கும்  வகையில் வரதட்சணை திருமணங்களிலும் ஆடம்பர திருமணங்களிலும் இவர்கள் கலந்து கொண்டது முக்கிய காரணமாகும். தலைமைக்கும் இது குறித்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. ரமலானுக்குப் பிறகு இது குறித்து விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்கலாம் என்று தலைமை மூலம் மாவட்டத்துக் சொல்லப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தவ்ஹீத் ஜமாத் பெயரைச் சொல்லி வசூல் செய்து மோசடி செய்த சைபுல்லா ஹாஜா மூலம் ஜும்மாவுக்கு பேச்சாளரை ஏற்பாடு செய்து கொண்ட தகவல் தலைமைக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து பாலக்கரை பள்ளியின் நிர்வாகிகள் ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று பீஜே அவர்களை தலைமையகத்தில் வந்து நேரில் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து பிறகு சந்தித்தனர்.
அப்போது மாநில துணைப் பொதுச் செயலாளரான ஸையித் இபராஹீமும், மாநிலச் செயலாளர் சாதிக்கும் உடன் இருந்தனர்.
அந்தச் சந்திப்பின் போது நம்மால் நடவடிக்கை எடுத்து நீக்கப்பட்டவர்களை ஜும்மா உரை நிகழ்த்த நீங்கள் அழைத்துள்ளீர்களா?  என்று பீஜே விசாரித்த போது ஆம் என்று அதை ஒப்புக் கொண்டனர். அப்படியானால் ஒரு நேரத்தில் இரு குதிரைகளில் சவாரி செய்யும் போக்குக்கு இந்த ஜமாஅத்தில் அனுமதி இல்லை. நீங்கள் செல்வந்தர்கள் என்பதற்காகவும், அந்தச் சொத்து உங்கள் பெயரில் உள்ளது என்பதற்காகவும் துரோகத்தை அனுமதிக்க முடியாது என்று நேருக்கு நேராக பீஜே சொல்லியனுப்பினார். அதன் பின்னர்  ஜமாஅத்துக்கு எதிராக கட்டுக் கோப்பைக் குலைக்கும் விதத்தில் நடந்த அந்தப் பள்ளிக்கும் ஜமாஅத்துக்கும் எந்தச் சமபந்தமும் இல்லை என்று முறைப்படி பொதுச் செயலாளராகிய நான் அறிவித்தேன்.
திருச்சியில் பல வருடம் சைபுல்லா இமாமாக இருந்த அடிப்படையிலும் அவருக்கு சொத்து வாங்கிக் கொடுத்த வகையிலும் பணக்காரர்களுக்கு பல்லிளித்து பணக்காரர்கள் வீடுகளைத் தேடி சென்று அதிக மரியாதை கொடுக்கும் சைபுல்லாவுக்காக இவர்கள் வளையலாம். பணக்காரர்கள் என்பதற்காக இந்த ஜமாஅத் வளையாது என்று எடுத்துக்காட்டவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பீஜேவைச் சந்திக்கக் வந்தவர்களில் பீம நகர் பகுதியைச் சேர்ந்த இவர்களின் ட்ரஸ்டியின் உறவினர்களும் இருந்தனர். அவர்களும் இந்தத் துரோகத்தில் துணையாக இருந்ததால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுகப்படும் என்று கருதி தாமாக விலகி விட்டனர். கிளை உறுப்பினர்களைக் கூட்டி கிளை கலைக்கப்படவில்லை.
விலகாவிட்டால் விலக்கப்படும் நிலையில் இருந்த மூவர் மட்டும் தான் விலகியுள்ளனர்.  கிளை உறுப்பினர்கள் கட்டுக் கோப்புடன் உள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
இதன் மூலம் இந்த ஜமாஅத்துக்கு திருச்சியில் ஏற்பட்டிருந்த விமர்சனம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஜமாஅத் மேலும் தூய்மையாகி உள்ளது.
இப்படிக்கு,
ரஹ்மத்துல்லாஹ்
பொதுச்செயலாளர்

No comments: