அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் கடந்த 16.09.2011 அன்று துபை TNTJ மர்கஸில் வைத்து அமீரக கடையநல்லூர் பொறுப்பாளர் சகோ.இபுறாஹிம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.துவக்கமாக துபை மண்டல TNTJ தலைவர் சகோ.முஹம்மது நாஸிர் ஜமாஅத் பணிகளை வீரியமாக செய்ய வேண்டியதன் அவசியத்தை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கி பேசினார்.நிதி பொறுப்பாளர் சகோ.மசூது ஃபித்ரா மற்றும் நோன்புக்கஞ்சி வசூல் மற்றும் ஊருக்கு அனுப்பிய விபரங்களையும்,உறுப்பினர்களின் சந்தா பற்றிய அறிக்கை சமர்ப்பித்தார்.அடுத்ததாக சகோ.முஹம்மது அலி அவர்கள் நமதூரில் அமைக்கப்பட இருக்கும் பைத்துல்மால் குறித்து விளக்கி பேசினார்.அது குறித்து சகோதரர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
1.பேட்டை கிளை சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகையை திடலில் நடத்துவது குறித்து அதற்கான இடம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
2.நவம்பர் மாதத்திற்குள்ளாக மாற்றுமத சகோதரர்களுக்கான கட்டுரைப் போட்டி அமீரக கடையநல்லூர் TNTJ சார்பில் நமதூரில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
3.அனைத்துக் கிளைகளிலும் மாதாந்திர ஆலோசனைக் கூட்டமும்,மூன்று மாதத்திற்கு ஒருமுறை அனைத்து கிளைகளுக்கான ஆலோசனைக் கூட்டமும் ஊரில் நடத்திட கிளை நிர்வாகங்களை கேட்டுக் கொள்வது.
4.அனைத்துக் கிளைகளிலும் நடைபெறும் மார்க்க சமூகப் பணிகளுக்கான செயல்பாட்டு அறிக்கையை அனுப்ப அனைத்துக் கிளகளையும் கேட்டுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
5.கடையநல்லூர் அனைத்து கிளைகளின் ஒருங்கினைப்பாளராக சகோ.அப்துந் நாஸிர் அவர்களை நியமிக்க மாவட்ட,மாநில நிர்வாகங்களை கேட்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
6. அமீரக கடையநல்லூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாதாந்திர ஆலோசனைக் கூட்டம் பிரதி மாதம் இரண்டாவது வெள்ளிக்கிழமை இன்ஷா அல்லாஹ் நடைபெறும்.
No comments:
Post a Comment