அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 02.10.2011 ஞாயிற்றுக் கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் சார்பாக சந்தை நடுத்தெருவில் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ. அப்துந் நாசிர் அவர்கள் ' நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். திருமணத்தில் காணப்படும் இணைவைக்கும் காரியங்கள், ஒழுக்கக் கேடான காரியங்கள் பற்றி விரிவாக விளக்கப்பட்டது. இந்த தெருமுனைப் பிரச்சாரக் கூட்டத்தில் ஏராளமான இஸ்லாமியப் பெருமக்கள் கலந்து கொண்டனர். அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment