வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் வருமானத்திற்கு(NRI INCOME) இந்தியாவில் வருமான வரி செலுத்துவதில்லை என்பது அறிந்த ஓன்று, அப்படி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அனுப்பும் பணம் முக்கிய பங்குவகிக்கிறது என்றால் மிகையாகாது, அதாவது 2010 ஆம் ஆண்டின் கணக்கு படி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் மூலம் வந்துள்ள இந்த வரவு சீனாவை விட அதிகமாக உள்ளது அதாவது சுமார் 55 பில்லியன் டாலர் வருவாய் பெற்றுள்ளது இந்திய அரசாங்கம். இந்த கணக்கீடு வங்கிகள் மூலம் அனுப்பபட்ட தொகையினை மட்டும் வைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருமானத்தை தகர்க்கும் முகமாக தற்போது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் இந்த வகையில் வரும் பணத்திற்கு வரி விதிக்கும் முயற்ச்சியில் உள்ளதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. இது இன்னும் இறுதியாகவில்லை என்று இந்திய பிரதமர் மறுத்தாலும், இதனால் அதிகம் பாதிக்கப்படும் மலையாள மொழி பேசும் கேரளா மக்களின் அரசியல்வாதிகள் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள், அதோடு மட்டும் அல்லாமல் வெளிநாடு வாழ் இந்தியர்களின் அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துவருகிறார்கள்.
இதுபற்றி துபாயில் உள்ள பணம் அனுப்பும் நிறுவனத்தில் வேலை செய்யும் மூத்த அதிகாரி கூறுகையில்,
தற்போது வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தாயகத்திற்கு ஒவ்வொரு முறை பணம் அனுப்பும் போது சேவை கட்டணமாக(SERVICE CHARGE) அமீரகத்தில் 15 திர்கம் வசூலிக்கபடுகிறது, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த சேவை கட்டணம் 10 திர்கமாக இருந்து வந்தது. புதியதாக நடைமுறைக்கு வரவுள்ள இத்தகைய வரிவிதிப்பு நடைமுறைக்கு வந்தால் 12.36% வரி அந்த சேவை கட்டணத்துடன் சேர்த்து அதாவது 2 திர்கம் கூடுதலாக வசூலிக்கபடலாம், இதனால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பாதிக்கபடுவர்கள்,
மேலும் இத்தகைய வரிவிதிப்பு முறையால் தற்போது அதிகம் காணப்படும் அதாவது இலகுவான மற்றும் மிகவிரைவாக எந்த ஒரு சேவை கட்டணமும் இல்லாமல் வங்கிகளின் பணமதிப்பை விட குறைவான மதிப்பில் அனுப்பபடும் ஹவாலா என்ற வழிமுறையை தேர்தெடுக்கும் நிலைக்கு இந்தியர்கள் தள்ளபடுவார்கள், இதனால் இந்திய அரசிற்கு கிடைக்கும் வருமானமும் பாதிக்கபடும் ஹவாலா என்ற உக்தியும் பெருகும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்று கூறுகிறார்.


வளைகுடாவில் அதிகம் அதாவது சுமார் 600 கிளைகளை கொண்ட UAE EXCHANGE என்ற நிறுவனத்தின் அதிகாரி பிரமோத் கூறுகையில்,
இந்த மாதிரியான முயற்சி எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று சட்டம் கொண்டு வந்த போது அந்த வரியை பணம் அனுப்பும் நிறுவனம் கொடுத்து வந்ததாகவும், பின்பு இத்திட்டத்தை இந்திய நிதி அமைச்சகம் நிறுத்திவிட்டதாகவும் கூறி உள்ளார்
அமீரகத்தில் உள்ள இந்திய பிரியதர்சனி என்ற வெளிநாடு வாழ் அமைப்பின் தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில்,
இத்தகைய திட்டம் வெளிநாட்டில் வாழும் குறைந்த வருவாய் ஈட்டும் தொழிலாளிகளை பாதிக்கும் என்றும், இதனை ஆரம்பகட்டதிலே எதிர்ப்போம் என்றும் கூறிஉள்ளார்.
எது எப்படியோ இந்தியாவிலும் வேலை இல்லாமல், சொந்த பந்தங்களை விட்டும் அடிமை போன்று குறைந்த சம்பளத்தில் கூலி தொழிலாளியாக, அதிகமாக வாழும் இந்திய முஸ்லிம்களின் வயிற்றில் அடிக்கும் திட்டத்தை நிறைவேற்ற இந்திய ஆட்சியாளர்கள் தயாராகி வருகிறார்கள் என்பது வேதனையான விசயம் தான்.
“ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் எந்த அறப்போர் சிறந்தது? என்று கேட்டார். அதற்க்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அக்கிரமம் புரியும் அரசனிடம் சத்தியத்தை எடுத்துரைப்பது என பதிலளித்தார்கள்.
நூல் முஸ்லிம் 4138, அறிவிப்பாளர் தாரிக் பின் ஷிகாப்(ரலி)
No comments:
Post a Comment