TNTJ ஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் தர்பியா !
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜி்த்தாவாழ் கடையநல்லூர் சகோதரர்கள் கூட்டமைப்பின் பொதுக்குழு மற்றும் தர்பியா வகுப்பு 20.08.2012 அன்று காலை 10:30m to 4pm வரை மண்டல நிர்வாகிகள் தலைமையில் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடை பெற்றது.
சகோ.அல் அமீன் வரவேற்புரை நிகழ்ச்சி நிரல்பற்றி விளக்கினார். தொடர்ந்து மண்டல பேச்சாளர் சகோ.சையது முஸ்தபா ஏகத்துவமும் இணைவைப்பும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.மதிய உணவுக்குப் பிறகு தாயகத்திலிருந்து TNTJ- யின் மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ அப்துல் நாசர் அவர்கள் ஆன்லைனில் "சத்தியமும் நித்தியமும்" என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்தினார். அதன் பின்னர் திடல் தொழுகை மற்றும் இன்னபிற நிகழ்வுகள் பற்றி சகோதர்களுக்கு விளக்கம் அளித்தார்.
அடுத்ததாக பொறுப்பாளர்கள் சகோ.அப்துல் ஹலீம் சித்திக் மற்றும் அப்துல் பாசித் Power point மூலம் கடையநல்லூர் கிளைகள் மற்றும் வளைகுடா கிளைகள் செய்து கொண்டிருக்கிற மாக்க மற்றும் சமுதாய பணிகள் பற்றி விளக்கினார்கள். தொடர்ந்து மார்க்கம் சம்பந்தமான கேள்வி கேட்டு பதில் அளித்தவர்களுக்கு சிறந்த பரிசும் வழங்கப்பட்டது. இதில் சகோதரர்கள் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். துவா உடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment