கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jan 26, 2013

கல்லூரில் பர்தா அணிந்து ஆபாச நடனம்!


புளியங்குடி மனோ கல்லூரில் பர்தா அணிந்து ஆபாச நடனம் ஆடிய கல்லூரி மணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தல்.

            நெல்லை மாவட்டம் புளியங்குடியில் இயங்கி வரும் மனோ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமுத்துவ பொங்கல் என்ற பெயரில் கடந்த 13.01.2013 அன்று கல்லூரின் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் ஆபாச நடனமாடிய இரண்டு மாணவர்களின் ஒருவர் இஸ்லாமிய பெண்கள் அணிகின்ற பர்தா ஆடையே அணிந்து இஸ்லாமிய பெண் அன்னிய ஆடவர்ருடன் திரைப்பட ஆபாச பாடல்க்கு குத்தாட்டம் ஆடுவது போன்ற காட்சி அமைந்து இருந்தது இதனை



அனைத்து மாணவர்களின் செல்போன்களில் படம் ஆக்கப்பட்டு, இஸ்லாமியர்கள் அதிகம் வாழக்கூடிய புளியங்குடி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் புளூடூத் மூலம் பரப்பப்பட்டது. இதனை தெரிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகளும் மற்றும் புளியங்குடி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  கிளை நிர்வாகிகளையும் அழைத்து கொண்டு கடந்த 23.01.2013 புதன்கிழமை மதியம் இரண்டு மணி அளவில் மனோ கல்லூரியின் முதல்வரை நேரில் சந்தித்து பர்தா அணிந்து ஆபாச நடனமாடிய கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தப்பட்டது.


           அதற்க்கு கல்லூரி முதல்வர் அவர்கள் இந்த சம்பவம் நடந்து கொண்டு இருக்கும் போது என் கவனத்துக்கு வந்தவுடன் உடனடியாக நான் அந்த நிகழ்ச்சியே பாதியிலேயே நிறுத்தி விட்டேன். அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியில் நடனமாடிய இரண்டு மாணவர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு விட்டது என்று கூறி அதற்கான ஆதாரங்களையும் நமது நிர்வாகிகளிடம் காண்பித்தார். மேலும் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததோடு இனி இது போன்று சம்பவம் நடக்காது என்றும் முதல்வர் அவர்கள் உறுதியளித்தார்கள். இந்த கல்லூரியில் கடையநல்லூர் மற்றும் புளியங்குடியே சார்ந்த இஸ்லாமிய பெண்களும், ஆண்களும் அதிகஅளவில் படிப்பது குறிப்படத்தக்கது.

தகவல் 
குறிச்சி சுலைமான்
கடையநல்லூர்


No comments: