கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Feb 16, 2013

மணிக்கூண்டு அருகில் பிரச்சாரம்!

       கடையநல்லூர் த த ஜமாஅத் அனைத்து கிளைகள் சார்பில் 13-2-15 அன்று மாலை  7:00 மணியளவில், கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் வைத்து தெருமுனை பிரச்சாரம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதில்


மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ அப்துல் நாசர் அவர்கள் அப்சல் குரு தூக்கில்லிட்டது சரியா ? என்ற தலைப்பில் உரையாற்றினார்.



      இதில் பல்வேறு கருத்துகளை அவர் முன்வைத்தார், மக்களின் மனசாட்சி என்ற அடிப்படையில் வழங்கபட்ட இந்த தீர்ப்பு போன்று ஆயிரக்கணகான முஸ்லிம்களை கொன்று குவித்த நரேந்திர மோடியை ஏன் முஸ்லிம்களின் மனசாட்சி என்ற அடிப்படையில் தூக்கில்லிடவில்லை, மேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனைக்கு ஆளான விடுதலை புலிகளை ஏன் இன்னும் தூக்கில்லிடவில்லை, போன்றவற்றை விளக்கி, அரசியல், ஆட்சி அதிகாரத்தை காப்பற்றி கொள்ள முஸ்லிம்களை திட்டமிட்டு இவ்வாறு பழிவாங்கும் மத்திய காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார்.

இந்நிகழ்ச்சியில் இருநூறுக்கும் மேற்பட்ட த த ஜமாஅத் சகோதர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர்.

அப்சல் குரு தூக்கு பற்றிய கூடுதல் தகவல் கீழ் காணும் லிங்கில் காண்க
http://www.kadayanallurtntj.blogspot.com/2013/02/blog-post_6766.html

No comments: