கேள்வி : நீங்கள் உம்ரா பயணத்தை ரகசியமாகச் செய்ததன் மர்மம் என்ன என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனரே? இதற்கு உங்கள் பதில் என்ன? சவூதி அரசு தடுத்துவிடும் என்பதுதான் ரகசியமாகச் செய்ததற்குக் காரணம் எனவும் கூறுகின்றார்களே? மசூது, கடையநல்லூர்
பதில் : அறிவுப்பூர்மான கேள்விகளுக்கும் வாதங்களுக்கும் மட்டும்தான் பதில் அளிக்க வேண்டும். கிறுக்குத்தனமான உளறல்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லை. இதனால்தான் இந்த உளறலைக் கண்டுகொள்ளவில்லை. பகிரங்கப்படுத்தி வெட்டி பந்தாவுடன் ஒருவர் புனிதப்பயணம் மேற்கொண்டால், அதுபற்றித்தான் கேள்வி கேட்கவேண்டும்.
அல்லாஹ்வுக்கும் மனிதனுக்கும் இடையேயான வணக்கத்தை விளம்பரப்படுத்தாமல் செய்ய வேண்டிய முறைப்படி செய்தது குறித்து கேள்வி கேட்பவன் வடிகட்டிய மூடனாகத்தான் இருக்கவேண்டும்.
அல்லாஹ்வுக்காக செய்யும் வணக்கத்தைப் பற்றி யாரிடமும் நான் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதைப்பற்றி கேட்கும் உரிமையும் யாருக்கும் இல்லை.
சவூதி அரசாங்கம் யாருடைய ஹஜ் உம்ரா பயணத்தையும் எந்தக் காலத்திலும் தடை செய்தது இல்லை. அப்படி ஒரு கொள்கையே சவூதி அரசுக்கு இல்லை என்ற அடிப்படை விபரம்கூட இவர்களுக்குத் தெரியவில்லை.
அப்படித் தடை செய்வதுதான் சவூதியின் கொள்கை என்றால், ரகசியமாகச் சென்றாலும் நவீன காலத்தில் தெரியாமல் போய்விடுமா? கள்ளத் தோணியில் போய் இறங்கும் கற்காலத்தில் இவர்கள் வாழ்கிறார்கள் போலும். பாஸ்போர்ட் எடுத்து அதில் விசாவைப் பதிவு செய்து எந்த நாட்டுக்கு யார் பயணம் செய்தாலும் அந்த நாட்டுக்கு பயணியின் முழு விபரம் தெரிந்துவிடும்.
எதையாவது உளறிக் கொட்டி பாவத்தைச் சம்பாதித்துக் கொண்டே இருப்பது என்ற கொள்கை முடிவு எடுத்தவர்களின் உளறல்களை நீங்களும் கண்டு கொள்ளவேண்டாம்.
நன்றி : உணர்வு வார இதழ் (Mar15-21)
No comments:
Post a Comment