தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளையின் மர்க்கஸை திறக்க விட மாட்டோம் என பேட்டை சுன்னத் வல் ஜமாஅத் மிரட்டல்!
அல்லாஹ்வின் மாபெரும் கருணையால்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை ஆரம்பிக்கப்பட்டு கடந்த ஒரு வருடத்துக்கும்
மேலாக பல்வேறு மார்க்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வருகின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு
பேட்டை மக்களிடம்
ஏகத்துவ கொள்கையை அதன் தூய முறையில் சேர்பித்து வருகின்றது. பல்வேறு
மாரக்க மற்றும் சமுதாய பணிகளை செய்து வந்தாலும் பணிகளை செவ்வன செய்து வர நிரந்தர மர்கஸ்
இல்லாத குறையை அறிந்த நிர்வாகிகள் பேட்டை கிளைக்காக ஒரு மர்கஸ் கன்டிப்பாக தேவை அத்துடன்
பெண்கள் மதரஸாவும் இன்ன பிற மார்க்க பணிகளும் அந்த மர்கஸ்ஸில் நடைபெற்று மக்கள் பயன்
பெற வேண்டும் என்ற அடிப்படையில் பேட்டை கிளையின் பொதுக்குழுவில் கலந்து ஆலோசிக்கப்பட்டு
அதற்காக முறையான மாவட்ட மற்றும் மாநில அனுமதியுடன் கடிதம் பெறப்பட்டு அதற்கான
இடத்தை தேர்வு செய்யும் முயற்சியில் நிர்வாகிகள் பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.
இடம் தேர்வு :
முதலில் பேட்டைக்கு மேற்கு
பகுதியில் உள்ள வயல்காட்டில் இடங்களை பார்வையிட்டு அதில் ஒரு இடத்தை தேர்வு செய்து
அட்வான்ஸ் கொடுக்கும் நேரத்தில் பேட்டையின் கடைசி எல்லை பகுதியான தற்போது நாம் வாங்கி
உள்ள இந்த இடம் விற்பனைக்கு வந்தது. உடனடியாக மீண்டும் பொதுக்குழு கூட்டப்பட்டு மக்களிடம்
கருத்து கேட்கப்பட்டபோது மற்ற எல்லா இடங்களையும் விட தற்போது பார்த்து உள்ள இடம் விலை
குறைவாகவும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக இருப்பதாலும் அனைவருடைய ஏகமித்த
கருத்தின் அடிப்படையில் இந்த இடத்தை வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இதில் பெண்கள் அதிகம் பயன்பெறும் வகையில் பெண்கள்
மதரஸா மற்றும் மாணவர்கள் பயன் பெறும்
பொருட்டு கல்வி வழி காட்டி மையம் என்பன போன்ற அனைத்து நல்ல காரியங்களுக்கும் இந்த இடத்தை
பயன்படுத்த வேண்டும், இதன் மூலம் மார்க்கபற்றுள்ள பெண்பிள்ளைகளையும், மாணவர்களையும் உருவாக்க முடியும் என்ற எதிர்கால சிந்தனை நோக்கில் இந்த மையம் ஏற்பட வேண்டும் என்றும் அதற்கான
முயற்சியில் இந்த இடத்தை வாங்க வேண்டும் என்று த த ஜமாஅத் பேட்டை கிளை களம் இறங்கியது,
நிதி திரட்டல்:
இதற்காக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சகோதரர்களிடம்
நன்கொடையை எதிர்பார்த்து அதற்கான வசூல் பொதுமக்கள் மற்றும் கொள்கை சகொதர்களிடம் திரட்டப்பட்டது. இதற்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக வாரி வழங்கினார்கள். ஊரில் உள்ள நிர்வாகிகளும் உறுப்பினர்களும்
உள்ளூர் வசூல் செய்வது என்று முடிவு செய்து பேட்டையில் உள்ள ஒரு வீடு கூட விடாமல் நாம்
எங்கு இடம் வாங்க போகிறோம், எதற்காக இடம் வாங்குகிறோம் என்று பகிரங்கமாக அறிவித்து எல்லோருக்கும்
தெரியும் விதமாக பொதுமக்களிடம் வசூல் செய்தது. இதற்கு பொதுமக்களில் ஒருவர் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பேட்டை ஜமாத் தலைவர்
வீடு முதல் அனைத்து வீடுகளிலும் அவர்களின் பங்களிப்பை வழங்கினார்கள் (பேட்டை தலைவர்
மட்டும் நன்கொடை தரவில்லை) அதுவரை நம்மை யாரும் எதுவும் கேட்கவில்லை மர்க்கஸ் கட்ட விடமாட்டோம்
என்றும் கூறவில்லை மாறாக மக்கள்
வாரி வழங்கினார்கள்.
கடைசியில் இடம் அட்வான்ஸ் கொடுக்கப்பட்டு இடம் த த ஜமாத் பேட்டை கிளைக்கு கிடைத்து விடும் என்ற நிலை வந்தவுடன் அக்ஸாவை சார்ந்தவர்கள், தமுமுக மற்றும் SDPI அமைப்பை சார்ந்தவர்கள் தங்களுடைய சதி வேலையில் ஈடுபட தொடங்கினார்கள் இந்த
மூன்று வகையினரும் எதிரிக்கு
எதிரி நண்பன் என்ற அடிப்படையில் கைகோர்த்து கொண்டு பேட்டை ஜமாத்தார்களுக்கு நெருக்கடி
கொடுக்க ஆரம்பித்தார்கள்.
பிரச்சனையை உருவாக்கியவர்கள்:
பொதுமக்கள் சொத்தை
தங்களுடைய பெயரில் மாற்றி இன்று எங்கள் நாலு நபருக்கு தான் அக்ஸா பள்ளி சொந்தம் என்று
சொந்தம் கொண்டாடி இன்று அந்த நாலு பேரை தவிர பொது மக்கள்ளின் நம்பிக்கையை இழந்து அனாதைகளாகி
விட்ட அந்த நாலு பேர்களின் ஒருவர்(ஹாஜா மைதீன்)MC பதவிக்காக வேறு ஒரு இயக்கத்தில் சேர்ந்து வாணவோடிக்கை முதல்
ஒரு பழுத்த அரசியல்வாதி செய்யக்கூடிய அனைத்து நல்ல காரியங்களையும் செய்து MC ஆனவர். பேட்டை ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து நம்முடைய பேட்டை ஜமாஅத்
ஒரே ஜமாத்தாக இருக்கின்றது இதில் இவர்கள் குழப்பம் விளைவித்து விடுவார்கள் எனவே இவர்கள்
இடம் வாங்குவதையும், கட்டுவதையும் அனுமதிக்காதீர்கள்
அப்படி நீங்கள் அனுமதித்தால் நான் என் வீட்டு மாடியில் கூரை போட்டு தொழுவோன் என்று
மிரட்டி உள்ளார்.
அடுத்த கட்ட நடவடிக்கையாக அந்த நான்கு நபர்கள் மற்றும் TMMK, SDPI அரசியல் கட்சிகாரர்களும் மாற்று சமுகத்தை சார்ந்தவர்கள் கூட செய்ய துணியாத மார்க்க காரியங்கள் நடக்கக்கூடிய ஒரு இடத்தை தடுத்து நிறுத்த
வேண்டும் என்று காழ்புணர்ச்சியுடன் பேட்டை ஜமாஅத் நிர்வாகிகளை மிரட்டி உள்ளார்கள்.
பேட்டை ஜமாத் நிர்வாகிகளின் சூழ்ச்சி:
அதன் பிறகுதான் பேட்டை ஜமாத் நிர்வாகிகள் நாம்
அந்த இடத்தை வாங்கி விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு முதலில் அந்த இடத்துக்கு
சொந்தகாரரை இடத்தை கொடுக்கக் கூடாது என்று மிரட்டினார்கள், அவர்கள் தந்த பணத்தை விட
அதிக பணத்துக்கு நாங்கள் அந்த இடத்தை விற்று தருகின்றோம் என்று ஆசை வார்தை கூறினார்கள் ஆனால் அல்லாஹ்வின் கிருபையால் அவர்கள் துணிவுடன் நாங்கள் புரோக்கர்க்குதான் விற்றுள்ளோம் எனவே நீங்கள் அவரிடம் பேசிக்
கொள்ளுங்கள் என்றவுடன் அவர்கள் புரோக்கர் வீடு தேடி சென்று அந்த இடத்தை அவர்களுக்கு
கொடுக்க கூடாது அவ்வாறு கொடுத்தால் பல விபரீதங்கள் ஏற்படும் என்று எச்சரித்து உள்ளார்கள், அங்கேயும் வல்ல அல்லாஹ் அவனுடைய மார்கத்துக்கு உதவி செய்தான் அந்த
புரோக்கரரும் இவர்களுடைய மிரட்டல்க்கு பயப்படாமல் நான் வியபாரி நான் யாருக்கும் என்னுடைய
இடத்தை கொடுப்பேன் வாங்குவேன் அதை நீங்கள் கேட்க முடியாது என்று கூறவும் இவர்களுடைய
கடைசி சூழ்சியையும் வல்ல அல்லாஹ்
தகடு பொடியாக்கி விட்டான்.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு:
ஏக இறைவனின் மாபெரும் கிருபையால் அந்த இடத்தை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேட்டை கிளைக்காக வாங்கி பத்திரம் முடிக்கப்பட்டு அடுத்த
கட்ட நடவடிக்கையாக சில பழுது பார்க்கும் வேலைகள் செய்து விரைவில் பெண்கள் மதரஸா மற்றும் மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி
வகுப்புகள் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் கடந்த திங்கள்கிழமை பேட்டை ஜமாத் தலைவர் நம்முடைய
பேட்டை கிளை தலைவரை தொடர்ப்பு கொண்டு நாங்கள் உங்களிடம் பேச வேண்டி இருப்பதால்
நீங்கள் உங்கள் நிர்வாகிகளுடன் என்னுடைய வீட்டுக்கு இன்று வாருங்கள் என்று
கூறினார்.
இதற்க்கு நிர்வாகிகளிடம் கலந்து
அலோசித்து விட்டு பின்பு பதில் கூறுகிறோம் என்று நிர்வாகிகள் கூறினர். பின்பு கிளை நிர்வாகிகளிடம்மும், மற்ற கிளை நிர்வாகிகளிடமும் கலந்து அலோசித்து விட்டு 29.03.2013 வெள்ளிக்கிழமை அஸர்
தொழுகைக்கு பிறகு வருவதாக கூறி அதன்படி பேட்டை ஜமாஅத் தலைவர் வீட்டுக்கு சென்ற போது அவர்
பள்ளிக்கு வாருங்கள் அங்கு நாங்கள் மூன்று பேர் மட்டும்தான் உள்ளோம் என்று கூறவும்
நிர்வாகிகள் ஏற்கனவே அலோசனை செய்த அடிப்படையில் இவர்கள் எப்படியும் தந்திரமாக நம்மை
பள்ளிக்குதான் அழைப்பார்கள் அப்படி அழைத்தாலும் நாம் செல்வோம் என்ற மசோராவின் அடிப்படையில் பேட்டை பள்ளிக்கு சென்ற போது பேட்டை தலைவரின் கூற்றுக்கு மாற்றமாக பலர் அங்கு
திரண்டு இருந்தனர். TNTJ நிர்வாகிகள் அங்கு சென்ற பிறகும் அவர்கள் போன் மூலமாக பல நாட்டமைகளை அங்கு வரவழைத்தார்கள் ஆக எல்லா விதத்திலும்
அவர்கள் விதிமுறைகளை மீறி இருந்தாலும் நம்முடைய நிர்வாகிகள் பொறுமையுடன் அவர்களுடைய
அழைத்த நோக்கம் கேட்க காத்து இருந்தார்கள்.
பிறகு
நீங்கள் பள்ளி கட்ட இடம் வாங்கி உள்ளதாக அறிகிறோம், கடந்த 300 வருட பேட்டை வரலாற்றில்
ஒரு பள்ளிதான் உள்ளது அதில் இன்னும் ஒரு பள்ளி வருவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவே
நீங்கள் உடனடியாக இடத்தை காலி செய்யவேண்டும் அல்லது உங்களுக்காக நாங்கள் வேறு இடம்
பார்த்து தருவோம் அங்கு சென்று விட வேண்டும் இந்த இடத்தை எங்களிடம் தந்து விட வேண்டும்
என்று ஊர் செயலாளர் நம்மிடம் ஒரு புரோக்கர் போல் கட்ட பஞ்சாயத்து செய்தார். மற்ற நாட்டாமைகளும்
அவரவர் பங்கிற்க்கு நமக்கு உபசேதம் செய்தார்கள்.
பிரிவினைவாத சூழ்ச்சி:
நாம் எல்லோரும் சொந்த பந்தங்கள்
நமக்குள் பிரச்சனை வேண்டாம் தெருவில் உள்ள ஷாபிகாரர்கள்தான் பல கட்சிகளாகவும் கோஷ்டிகளாகவும் பிரிந்து கிடக்கின்றார்கள் நாம் அது போல் பிரிந்து
போக கூடாது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று தங்களுடைய நயவஞ்சக தனத்தை வெளிப்படுத்தினார்கள்.
கடைசியில் நமக்கு பேசும் வாய்ப்பு கிடைத்த போது பேட்டை கிளை தலைவர் சகோ அப்பாஸ் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை கடந்த ஒரு
வருடங்களுக்கும் மேலாக மார்க்க மற்றும் சமுதாய பணிகளை இந்த பேட்டை மக்களுக்காக என்னென செய்து வருகின்றது, இனி என்ன செய்ய இருக்கின்றது என்பதை எடுத்து கூறி உங்களுடைய ஒற்றுமை
கோஷம் எங்களுக்கு சரிபடாது நாங்கள் அல்லாஹ்க்கு இணைவைக்கின்ற தட்டு தாயத்து செய்து
விற்பனை செய்கின்ற ஓதி பார்த்து காசு வாங்குகின்ற உங்களுடைய பேட்டை பள்ளியின் இமாம் பின் நின்று தொழ முடியாது, நாங்கள் மீண்டும் உங்கள் பள்ளிக்கு தொழுகைக்கு வந்தால்
20 வருடங்களுக்கு முன்பு
பேட்டை பள்ளியில் எங்களுக்கும் உங்களுக்கும் ஏற்ப்பட்டது போன்ற விரும்ப தகாத சம்பவங்கள்தான் நடைபெறும் ஆகையால்தான்
நாங்கள் எங்களுடைய பேட்டை கிளையின் அலுவல் பணிகளுக்காக இந்த இடத்தை வாங்கி உள்ளோம்
இதில் எங்கள் அலுவல் பணிகளுக்கிடையில் பெண்கள் மதரஸா மற்றும் மாணவர் வழிகாட்டி மையம்
செயல்படும் என்று கிளை தலைவர் விளக்கி கூறினார்.
இதை நாங்கள்
காலி செய்யும் பேச்சிக்கு இடம் இல்லை இதை தவிர மற்ற காரியங்கள் பேச வேண்டும் என்றால்
நாம் பேசுவோம் என்று கூற அதற்கு அவர்கள் நீங்கள் உடனடியாக அந்த இடத்தை காலி செய்யாவிட்டால்
நாங்கள் வரும் வெள்ளிக்கிழமை ஊரை கூட்டி உங்கள் மேல் கடும் நடவடிக்கை எடுப்போம் என்று
கடுமையாக எச்சரிக்கை செய்யவும்
நம்முடைய நிர்வாகிகள் இந்த மாதிரியான எச்சரிக்கை பலவற்றை பார்த்து விட்டோம் எங்களை
மிரட்ட வேண்டாம் நாங்கள் எதற்கும் தயாராக இருக்கின்றோம் எங்கள் பக்கம் அல்லாஹ் இருக்கின்றான்
என்று கூறி நம்முடைய நிர்வாகிகள் வந்து விட்டார்கள்.
சத்தியத்திற்கு எதிராக ஒன்றிணைந்த கொள்கையற்றவர்கள்:
அதன் பிறகு 31.03.2013 அன்று ஞாயிற்றுக்கிழமை முதல் கட்ட ஊர் கூட்டம் போட்டு நமக்கு
எதிராக அனைத்து நாட்டமைகளும் இவர்கள் பேட்டைக்குள் வாங்கிய இடத்தை செயல்படுத்த
கூடாது இவர்கள் வந்து விட்டால் நம்முடைய வருமானம் பாதித்து விடும் ஆகையால்
அனைவரும் ஒற்றுமையாக இருந்து இவர்களை தடுக்க வேண்டும் என தீர்மானம்
நிறைவேற்றி உள்ளார்கள். இவர்களுக்கு பக்கபலமாக பேட்டையில் நான்கு MC(நகராட்சி உறுப்பினர்கள்)களையும் நமக்கு எதிராக களம் இறக்கி நகராட்சியில்
நமக்கு எதிராக புகார் கொடுக்க ஏவி உள்ளார்கள்.
மேலும் 5-4-13 அன்று வெள்ளிக்கிழமை மேலும் ஒரு கூட்டம் போட்டு TNTJ பேட்டை மர்க்கஸை தடுக்க படவேண்டும் என்று கூறி கட்டுமானத்திற்கு வரும் கொத்தனார்கள் மற்றும் இன்னும் சில வழிகளில் முயற்சிகள் செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.
மேலும் 5-4-13 அன்று வெள்ளிக்கிழமை மேலும் ஒரு கூட்டம் போட்டு TNTJ பேட்டை மர்க்கஸை தடுக்க படவேண்டும் என்று கூறி கட்டுமானத்திற்கு வரும் கொத்தனார்கள் மற்றும் இன்னும் சில வழிகளில் முயற்சிகள் செய்ய திட்டம் தீட்டி உள்ளனர்.
அல்லாஹ்வை மட்டும் வணங்கவேண்டும் என்பதற்க்காக ஏற்படுத்தி உள்ள ஒரு மர்க்கஸை தடுக்க கொள்கையற்ற அக்ஸா நிர்வாகிகள், SDPI, TMMK அமைப்பை சார்ந்தவர்கள் பேட்டை பள்ளி ஜமாத் நிர்வாகத்தை தூண்டி அதன் மூலமாக பேட்டை ஜமாத் பள்ளி நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தி அரசியல் குளிர் காய்வதற்கு திட்டம் தீட்டி உள்ளனர்.
இந்த அமைப்புகளை(SDPI,TMMK) சார்ந்தவர்கள் பல ஊர்களில் உள்ள பள்ளிகளின் நிர்வாகத்தில் தலையிட்டு ஒற்றுமையாக இருந்த நிர்வாகிகளிடம் நிர்வாக குழப்பம் செய்து நிர்வாகத்தை விட்டு நிர்வாகிளை வெளியேற்றி நிர்வாகத்தை கைபற்றி வருகிறார்கள் என்பதை அறியாமலும், இந்த சதிதிட்டம் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் பேட்டை பள்ளி ஜாமத் நிர்வாகிகள் உள்ளார்கள்.
இந்த அமைப்புகளை(SDPI,TMMK) சார்ந்தவர்கள் பல ஊர்களில் உள்ள பள்ளிகளின் நிர்வாகத்தில் தலையிட்டு ஒற்றுமையாக இருந்த நிர்வாகிகளிடம் நிர்வாக குழப்பம் செய்து நிர்வாகத்தை விட்டு நிர்வாகிளை வெளியேற்றி நிர்வாகத்தை கைபற்றி வருகிறார்கள் என்பதை அறியாமலும், இந்த சதிதிட்டம் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் பேட்டை பள்ளி ஜாமத் நிர்வாகிகள் உள்ளார்கள்.
அன்பான சகோதர! சகோதிரிகளை!!
1980 களில் பேட்டையில் ஒரு சின்ன மண் கலவையேதான் சாமி என்று நம்முடைய மாற்று மத சகோதரர்கள் வழிபாடு நடத்தி வந்தார்கள் இன்று அதை இடத்தில் மிகப்பெரிய அளவில் கோவில் எழுப்பியதுடன் நிற்காமல் இரண்டுக்கும் மேற்பட்ட இடத்தில் கோவில்கள் கட்டப்பட்ட போது பேட்டை என்ற ஊர் கட்டுப்பாடு எங்கு சென்றது அந்த கோவிலும் பேட்டைக்குள்தானே இருக்கின்றது. கோவில்லை கட்ட அனுமதித்த நீங்கள் அப்போது எங்கே சென்றிர்கள்?
1980 களில் பேட்டையில் ஒரு சின்ன மண் கலவையேதான் சாமி என்று நம்முடைய மாற்று மத சகோதரர்கள் வழிபாடு நடத்தி வந்தார்கள் இன்று அதை இடத்தில் மிகப்பெரிய அளவில் கோவில் எழுப்பியதுடன் நிற்காமல் இரண்டுக்கும் மேற்பட்ட இடத்தில் கோவில்கள் கட்டப்பட்ட போது பேட்டை என்ற ஊர் கட்டுப்பாடு எங்கு சென்றது அந்த கோவிலும் பேட்டைக்குள்தானே இருக்கின்றது. கோவில்லை கட்ட அனுமதித்த நீங்கள் அப்போது எங்கே சென்றிர்கள்?
சத்தியத்துக்கு எதிராக
அணி திரள்கின்ற ஊர் ஜமாத் மற்றும் பதவிக்காக வேடம் போடும் கொள்கையற்ற(SDPI, TMMK & ட்ரஸ்ட்டிகள்)இவர்கள் ஏன் ஊரில் நடக்கின்ற வட்டி, வரதட்சணை
போன்ற எண்ணற்ற இன்னபிற அனாச்சாரங்கள் அட்டுளியங்களுக்கு எதிராக இவர்களோ அல்லது
இந்த MC களோ திரளுவதில்லை. அதற்க்கு மாறாக இந்த அமைப்பினர் மார்க்கத்திற்கு விரோதமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வயிறு நிரம்ப உண்டு உரையாற்றி வருகிறார்கள்.
ஆனால் ஏக இறைவனின் ஓரிறைக் கொள்கையை ஆண்கள்,பெண்களுக்கு என்று வீடுகளிலும் தெருக்களிலும் பிராச்சாரம் செய்தல், வரதட்சனை மற்றும் ஆடம்பரம் இல்லாத திருமணங்கள் நடத்துதல், நிர்வாகம் பொருளாதாரத்தால் பின்தங்கி இருந்தாலும் பொதுமக்கள் கேட்கும் மருத்துவம் மற்றும் வாழ்வாதார பொருளாதார உதவிகளை வழங்குதல், இரத்ததானம் வழங்குதல், இளைஞ்சர்களுக்கு நல்லொழுக்க தர்பியா முகாம்கள், இப்படி என்ணற்ற பணிகள் செய்து வரும் த.த.ஜமாஅத் மர்க்கஸை தடைசெய்ய முயற்சிக்கின்ற இப்படிபட்டவர்களை இனம்
கண்டு சமுகத்தை விட்டு இவர்களை புறக்கணிப்போம்.
கொள்கையற்றவர்களுக்கு அல்லாஹ்வின் எச்சரிக்கை!
மேலும் இவ்வாறே ஒவ்வொரு ஊரிலும் அவ்வூரின் மிகப்பெரிய குற்றவாளிகளை சூழ்ச்சி செய்வோராக ஆக்கியுள்ளோம். அவர்கள் தமக்கெதிராகவே சூழ்ச்சி செய்கின்றனர் அவர்கள் உணர்வதில்லை .(6:123)
அவர்கள் அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு அணைத்து விட நாடுகின்றனர்; ஆனால் மறுப்போர் வெறுத்த போதிலும், அல்லாஹ் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான்.(61:8)
நம்பிக்கையாளர்களுக்கு!
ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்து அறிகிறவன்.(3:120)
No comments:
Post a Comment