கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

May 6, 2013

4-5-13 அன்று நடைபெற்ற பொதுக்கூட்ட தீர்மானங்கள் !

                                         தீர்மானங்கள் !

1.   இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அனைவரும் திருக்குர்ஆனையும், ஆதாரப்பூர்வமான நபிமொழியையும் மட்டும் பின்பற்றுவதுடன் சமாதி வழிபாடு, மௌலீது, வட்டி, வரதட்சணை, போதைக்கு அடிமையாகுதல் உள்ளிட்ட அனைத்து பாவங்களிலிருந்தும் விலகி உண்மையான முஸ்லிம்களாக வாழ இந்த பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.


2.   மத்திய அரசும், மாநில அரசும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அரிக்கையை கவனத்தில் கொண்டு முஸ்லீம்களுக்கு மத்தியில் 10% இடஒதுக்கீடும், முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பொதுக்கூட்டத்தில் வாக்களித்த்து போல் திமுக ஆட்சியில் முஸ்லீம்களுக்கு வழங்கிய 3.5% ஐ அதிகப்படுத்தி 7% இட ஒதுக்கீட்டை தமிழகத்திலும் தரவேண்டும் என இப் பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

3.   திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக மக்கட் தொகை கொண்ட கிராமப்புரங்களுடன் அதிக தொடர்புள்ள கடையநல்லூரை தனி தாலுகாவாக அறிவிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிகமுறை வலியுறுத்தியும் கடந்த கால அரசுகள் மெத்தனமாக விட்டு விட்டனர். இப்போதுள்ள அதிமுக அரசு இதைக்கவனத்தில் கொண்டு கடையநல்லூரை தனி தாலுகாவாக்க அறிவிக்கும் படி தமிழக அரசை இந்த பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

4.   கடையநல்லூரில் மகளிர் பிரச்சினை அதிகமாக வருவதால் மகளிர் காவல் நிலையத்தை ஏற்படுத்தி இந்த பிரச்சனைகளை  தீர்ப்பதற்கு ஆவன செய்யுமாறு தமிழக அரசை இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

5.   கடையநல்லூர் இரயில் நிலையம் ஊரை விட்டு ஒதுக்குப்புரத்தில் உள்ளதால் இரயிலில் பயணம் செய்பவர்கள் பலவித சிரமத்திற்குள்ளாகின்றனர். கடையநல்லூர் மின்சார வாரியத்திரியத்திற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையுடன் தொடர்பு படுத்தி அந்த ரயில் நிலையத்தை மாற்றியமைத்தால் பொதுமக்களும், வியாபாரிகளும் பயன் பெறுவதோடு அரசுக்கு அதிக வருமானமும் ஏற்படும். சம்பந்தப்பட்ட ரயில்வே துறை இதனை கவனித்தில் கொண்டு ரயில் நிலையத்தை மாற்றியமைக்க இந்த பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

6.   முஸ்லிம்கள் நடத்தும் நர்ஸரி பிரைமரி மற்றும் உயர் கல்வி நிறுனங்களில் இஸ்லாத்திற்கு எதிரான ஆடல்பாடல் நிகழ்ச்சி (Recorder Dance) கலை என்ற பெயரில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு ஆடை அலங்காரத்திற்கு மட்டுமே ரூ.5000, 6000 என்று வீண்செலவு செய்கிறார்கள். மார்க்கத்திற்கு முரணான இதுபோல் உள்ள செயல்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக உடனே நிறுத்த வேண்டும். இதையும் மீறிச்செய்யும் கல்வி நிறுவனங்களை பெற்றோர்களும் மற்றும் கல்வி ஆர்வலர்களும் இதுபோன்ற கல்வி நிறுவனங்களை கண்டிப்பாக புறக்கணிக்கணிப்பார்கள் என்று இந்த பொதுக்கூட்டத்தில் வாயிலாக எச்சரிக்கிறோம்.

7.   மது மற்றும் போதைப்பொருட்களினால் மொத்த சமுதாயமே குடும்பத்தில் சண்டை, சமூகத்தில் சண்டை, சாலை விபத்து என பாதிப்புக்குள்ளாக்கிறது. போதைப்பொருட்களினால் கிடைக்கும் வருமானத்தை அரசு கவனத்தில் கொள்ளாமல் மக்கள் நலனில் அக்கரை கொண்டு தமிழகம் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் போதைப்பொருட்களை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.  

8.   கடையநல்லூரிலிருந்து தொடங்கிய மர்மகாய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டைய மாநிலங்களுக்கும் பரவி பல உயிர்களைக் கொன்றொழித்தது மீண்டும் அக்காய்ச்சல்கள் நம் மாவட்டத்தில் குறிப்பாக நம் கடையநல்லூரில் பரவும் நிலை உள்ளது. கடையநல்லூர் நகராட்சி சுகாதாரத்துறை இதனை கவனித்து முற்றிலும் இந்த விஷக்காய்ச்சல்களை தடுத்து நிறுத்திட அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள இந்த பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

9.   பிளானிங் அப்ரூவலுக்கு ஒரு தொகை, பிறப்பு சான்றுக்கு ஒரு தொகை, இறப்புச் சான்றுக்கு ஒரு தொகை, வீட்டுத்தீர்வை நிர்ணயத்திற்கு ஒரு தொகை, சாக்கடையிலிருந்து முதல் நல்ல தண்ணீர் குழாய் பதிப்பது வரை டெண்டர் விடுவதில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கணக்கில் என ஏலமிட்டு லஞ்சம் வாங்கும் கடையநல்லூர் நகராட்சி நிர்வாகத்தை இப்பொதுக்கூட்டம் வன்மையாக கண்டிப்பதுடன் ஆட்சியாளர்கள் கடையநல்லூர் நகராட்சி அலுவலர்களை சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என இப்பொதுக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

பொதுக்கூட்ட செய்தியை படிக்க
http://www.kadayanallurtntj.blogspot.ae/2013/05/blog-post_5.html

No comments: