கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 6, 2013

பிச்சையெடுக்க பரிந்துரை செய்யும் சுன்னத் ஜமாத்தினர்(?)

     தன் கரம் பற்றி வாழ்வு தொடங்கும் மனைவியிடம் கையூட்டு பெறும் இழிசெயலான வரதட்சணைப் பேய் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகம் முழுக்க முஸ்லீம் சமூகத்தில் தலைவிரித்தாடிய போது அதற்கெதிராக களம் காண வேண்டிய சமூக ஆர்வலர்கள், சமூக அமைப்புக்கள், முஸ்லீம் ஜமாஅத்தினர் வாய்மூடி மவுன சாட்சிகளாக இருந்த நிலையில் வரதட்சனை கொடுமையின் உக்கிரமம் சற்று அதிகமானது என்றே சொல்லலாம்.

நவீனகால வரதட்சனையின் பரிணாமங்கள்:
     எவ்வாறென்றால் சில நூறு, ஆயிரங்கள் கையூட்டாக பெற்று வந்த நிலையில் மாப்பிள்ளை டாக்டர் என்றால் அதற்கு ஒரு தொகையும், இஞ்சினியர் என்றால் அதற்கு ஒரு தொகையும், வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு ஒரு தொகையும் என்று வகைப்படுத்தி வரதட்சனை வாங்கப்பட்டது, அதுவும் மாறி நவீன காலத்திற்கு ஏற்றவாறு திருமணத்திற்கு முன்பு பணமாக பெரும் கையூட்டல் கடந்து கல்யாணத்திற்கு பிறகு பண்ட பத்திரங்கள் சொகுசு கட்டில், இரண்டு அல்லது நான்கு சக்கர வாகனம், காலநிலைக்கு ஏற்ப வாஷிங் மெசின், பிரிட்ஜ், இவைகளை இயக்க நாட்டில் மின்சார தட்டுபாடு என்பதால் ஜெனரேட்டர் அல்லது இன்வெர்டர் என்று வரதட்சனை என்ற கொடுஞ்செயல் பரிணாமம் பெற்றுள்ளது.
  • மணக்கோலம் கண்டதால் பெற்ற தாயை பிரிந்துபரிவு காட்டிய தந்தையை பிரிந்துஉற்றார் உறவினரை பிரிந்துதான் உயிராய் பழகிய நட்பினை பிரிந்து புகுந்த வீடு சென்று,
  • தனக்கு வாழ்வளிக்கின்றான் என்ற காரணத்திற்காக தான் பொத்திப் பாதுகாக்கும் தனது அழகை கணவனுக்காக தொலைத்து,
  • தனது துணைவனின் சந்தோசத்திற்காக அவனது குழந்தையை ஈரைந்து மாதங்கள் கருவறையில் கஷ்டத்தோடு சுமந்து,
  • மகப்பேறுக்காக மரணவாயிலை தொட்டு பிள்ளை பெறும் பிரசவ வலியை தாங்கி,பெற்ற குழந்தையை கஷ்டம் சுமந்து பாசம் பொழிந்து பாராட்டி சீராட்டி வளர்த்து,கணவனின் குடும்பத்தினரையும்குழந்தைகளையும்சொத்துக்களையும் பாதுகாக்கும் பொறுப்பாளியாகவும்
    கடமையாற்றும் பெண்ணிடத்தில் கைக்கூலி வாங்குவது பெரும்பாவம், ஆண்மையற்ற செயல்பேடித்தனம்மனித நீதிக்கெதிரான செயல்மணங்கொள்ளும் மங்கையருக்கு மனமுவந்து மஹர் கொடுக்க வேண்டுமென்பது இறைவனின் கட்டளை என்பதை பல முனைப் பிரச்சாரங்களின் மூலம் ஏகத்துவவாதிகள் இந்த வரதட்சனை பேய்க்கு எதிராக களம் கண்ட பிறகு அதன் தாக்கம் வெகுவாக குறையத் தொடங்கியது எனலாம்.

TNTJ நடத்தும் புரட்சிகர திருமணங்கள்:

    இப்போது உருவாகியிருக்கும் புதிய தலைமுறை திருமணம் செய்ய எவ்வித பணமோ, பொருளோ, பண்ட பாத்திரமோ, கட்டில் மெத்தையோ தேவையில்லை. உடுத்திய சேலையுடன் புகுந்த வீடு வந்தால் போதும். இன்னும் சொல்லப்போனால் திருமண வலிமா விருந்தை பெண் வீட்டார் கொடுக்க மார்க்கத்தில் அனுமதியில்லை. மாப்பிள்ளை தான் விருந்தளிக்க வேண்டும். அதுவும் குறைந்த செலவில் அமைய வேண்டும் என்று புரட்சிமிகு திருமணங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த கால சூழ்நிலையில் எங்கள் ஜமாஅத்தை சார்ந்த இன்னாரது குமர் கரை சேர உதவுங்கள்என்று பள்ளிவாசல் ஜமாஅத்தினர் பரிந்துரை கடிதம் கொடுத்து தனது முஹல்லாவாசியை பிச்சையெடுக்க வைக்கும் முயற்சி இன்றும் தொடர்கிறது என்பதை அறியும் போது மனம் விம்முகிறது, வேதனைப்படுகிறது. இதோ அந்த கடிதங்களை பாருங்கள்!




    ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்ய அவள் தரப்பில் செலவு எதுவும் செய்ய வேண்டிய அவசியமில்லை, மாறாக அனைத்து செலவும் ஆண்மகனையே சாரும் என்று இஸ்லாம் போதிக்கும் நிலையில் மணம் புரிய மணமகளுக்கு வசதியில்லை அதற்காக உதவுங்கள் என்று சமூக காரியத்திற்கு வசூலிப்பது போன்று பெண்ணை பெற்றவனை ஊர் ஊராக இந்த கடிதத்தை காட்டி பிச்சையெடுக்க தூண்டும் இந்த ஜமாஅத்துக்கள் சிந்திக்க வேண்டும்.

ஜமாஅத்தினர் கவனத்திற்கு:

    வரதட்சணை எனும் புற்று நோயை சமூகத்தில் விதைக்க பரிந்துரை செய்கின்றீர்களே இதனால் பெண் குழந்தைகளை பெற்றெடுத்தவன் அவர்களை கரை சேர்க்க காலம் முழுவதும் பாலைவெயிலில் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பின் வியர்வைக்கும், இனி பெண் குழந்தை பெற்றால் இது போன்று பெரிய செலவு செய்து திருமனம் செய்து வைக்க வேண்டுமே என்று பயந்து கொண்டு கருவறையிலே சமாதியாக்கப்படும் பெண் சிசுவின் மறுமை முறையீட்டையும்  அஞ்சிக் கொள்ளுங்கள்!

என்ன பாவத்துக்காக கொல்லபட்டாள் என்று உயிருடன் புதைக்கபட்டவள் விசாரிக்கபடும் போது (அல்குர்ஆன் 81:8,9)

அந்நாளை அஞ்சிக் கொள்ளுங்கள் அவனிடமே நீங்கள் கொண்டு வரப்படுவிர்கள் உங்களுடைய ஆட்சி, அதிகாரம், பதவி, பட்டம் எல்லாம் பயனளிக்காத அந்த நாளை, பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்படாத அந்நாளை, இறைவன் முன் நிறுத்தப்படும் அந்நாளை அஞ்சிக் கொள்ளுங்கள்.




No comments: