கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Sep 23, 2013

மோடியின் தமிழக வருகை குறித்து தவ்ஹீத் ஜாமஅத்தின் நிலை என்ன?

மசூது, கடையநல்லூர் 
பதில் - நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான கொடூரத்தை 
நிகழ்த்தி விட்டு அதற்கு காரணமானவர் அந்தச் சூடு ஆறுவதற்குள் தமிழகம் வந்தால் கருப்புக்கொடி காட்டலாம்; 
கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். 


இந்த நேரத்தில் முஸ்லிம்கள் மட்டுமின்றி முஸ்லிமல்லாத மக்களும் இதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொள்வார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள் 
என்று இதை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு கொடூரம் நடந்து ஆண்டுகள் பல கடந்து 
விடுமானால் அப்போது மக்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்பட்டு விடும். எப்போதோ நடந்த ஒரு கொடுமைக்காக அடிக்கடி எதிர்ப்பு காட்ட வேண்டுமா? 

இப்போது இது தேவைதானா என்ற எண்ணம் முஸ்லிமல்லாத மக்கள் மத்தியில் ஏற்படும். இதன் காரணமாக கொடுமை செய்தவர்களுக்கு ஆதரவான நிலையைக் கூட அவர்கள் எடுத்து விடக் கூடும். பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத்தில் எத்தனை ஆண்டுகளானாலும் அதை மறக்காதவர்கள் சொற்ப எண்ணிக்கையில் உள்ளனர். 

ஆனால் அதிகமான முஸ்லிம்கள் அப்படி இருக்க மாட்டார்கள். ஒரு கொடுமை நடக்கும் நேரத்தில் அல்லது சூடு ஆறுவதற்குள் போராட்டத்துக்கு அழைப்பு கொடுத்தால் தன்னார்வத்துடன் மக்கள் பெருமளவுக்கு திரள்வார்கள். 

ஆனால் ஆண்டுகள் பல கடந்த பின்னர் நடத்தும் போராட்டங்களுக்கு தீவிரமான சமுதாயப்பற்றுள்ள மக்கள் மட்டுமே கலந்து கொள்வார்கள். நமது வலிமையான கடுமையான எதிர்ப்பைக் காட்ட இது போதுமானதாக இருக்காது. கொடியவர்களுக்கு இது சாதகமாக அமைந்து விடும். 

எனவே தான் எந்தப் போராட்டம் நடத்துவது என்றாலும் மக்களின் உணர்வுகளை எடை போட்டு அதற்கேற்ப போராட்டம் நடத்துகிறோம். இப்போது மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது அவரது கூட்டத்துக்கு காசு இல்லாத விளம்பரமாக அமையும் எதிரிகளுக்கு விளம்பரமாக அமையும் என்று நாம் கருதுகிறோம். இந்த விளம்பரத்தைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள். 

சங்பரிவாரம் காலூன்றவும், வளரவும் இது உதவும் என்று நாம் கருதுகிறோம். எனவே மோடியோ, அத்வானியோ தமிழகம் வரும்போது ஒரு முஸ்லிமும் கண்டு கொள்ளாமல் 
இருந்தால் அவர்கள் வந்ததும் போனதும் மக்களுக்குத் தெரியாமல் போய்விடும். 

இதுதான் அறிவுப்பூர்வமான அணுகுமுறை என்று நாம் கருதுகிறோம். அதே நேரத்தில் இது மாறுபட்ட கருத்து கொண்டவர்கள் போராட்டம் நடத்தினால் அதை நாம் குறைகூற மாட்டோம்.

நன்றி - www.onlinepj.com

No comments: