கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 28, 2013

பேட்டை கிளை : குடும்ப தர்பியா!

    தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் பேட்டை கிளை சார்பாக குடும்ப தர்பியா (நல்லொழுக்கப் பயிற்சி ) முகாம் 27.10.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகில் உள்ள வல்லம் பகுதியில் உள்ள ஒரு இடத்தில் நடைபெற்றது.

         காலை 10.30 மணியளவில் சகோதரர் அப்துன் நாசர் அவர்கள் அறிமுக உரையுடன் 
நிகழ்ச்சி தொடங்கி அதன் பின்பு கேள்வி பதில்
நிகழ்ச்சியாக பிற்பகல் 12.30 வரை நடைபெற்றது இதில் மாரக்க சம்பந்தமான கேள்விகளுக்கு சகோதரர் அப்துன் நாசர் விரிவான விளக்கமான பதிலளித்தார்கள். 

    அதன்பிறகு 12.45 மணிமுதல் பிற்பகல் 1.45 மணிவரை கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை என்ற தலைப்பில் சகோதரர் தாஹா அவர்கள் மிகவும் பயனுள்ள உரை நிகழ்த்தினார். பிற்பகல் 1.45 மணிமுதல் 3 மணிவரை மதிய உணவு மற்றும் தொழுகைக்காக இடைவேளை விடப்பட்டது. அதன் பின்பு மதியம் 3 மணிமுதல் 3.45 மணிவரை  சகோதரர் தாஹா அவர்கள் தன்னுடைய முந்திய உரையை தொடர்ந்தார்கள். குடும்ப ஆண்களும், பெண்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சியாக இது அமைந்தது.

  இறுதியாக மாலை 3.45 மணிமுதல் 4.45 மணிவரை துபாய் மண்டல நிர்வாகி சகோதரர் முஹம்மது நாசர் அவர்கள்
மர்க்கத்தை எவ்வாறு அறிந்து அதை நடைமுறைபடுத்துவது என்ற தலைப்பில் உரையாற்றினார்

     இந்த குடும்ப தர்பியா (நல்லொழுக்க பயிற்சி) நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று கிட்டதட்ட 175 பேர் கலந்து கொண்டார்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேட்டை கிளை நிர்வாகிகள் மற்றும் தொண்டரணியினர் சிறப்பாக செய்து இருந்தனர்.

எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!!!






No comments: