தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடையநல்லூர் மக்கா நகர் கிளையின் சார்பாக 01-11-13 அன்று மாலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணியளவில் மக்கா நகர் பகுதியில் உள்ள திடலில் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
நடைபெற்றது. இதில் கிளை தலைவர் சகோ ஜாகிர் உசேன் அவர்கள் தலைமை தாங்கினார், மாவட்ட துணை செயலாளர் அச்சன்புதூர் சுலைமான் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தின் தீர்மானங்களை பேட்டை கிளை தலைவர் சகோ அப்பாஸ் அவர்கள் வாசித்தார்கள். இதில் மாநில மேலாண்மை குழு உறுப்பினர் சகோ எம்.எஸ்.சுலைமான் அவர்கள் "இளைஞ்சர் சமுதாயம் எங்கே செல்கிறது" என்ற தலைப்பிலும் மாநில பொது செயலாளர் சகோ கோவை ரஹ்மத்துல்லா இன்னும் ஏன் உறக்கம்? என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நன்றி உரை கிளை துணை தலைவர் செய்யது அலி வழங்கினார்.
அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்! வழக்கமாக நகரின் மையப்பகுதியான காயிதே மில்லத் திடலுக்கு பதிலாக கடையநல்லூர்ரில் முதல் முறையாக நகரின் வெளிப்பகுதியில்(கிருஷ்ணாபுரம் மேற்கு) நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என நூற்றுகணக்கானோர் திரளாக மக்கள் கலந்து கொண்டனர். மற்ற கிளை நிர்வாகிகள், தொண்டர் அணியினர் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்ச்சி இணைய தளம் வழியாக ஒளிபரப்பு செய்வதில் சில தடங்கல்கள் மழையின் காரணமாக ஏற்பட்ட தடங்கல்கலால் சில மணி நேரம் மட்டுமே சிறப்பாக ஒளிபரப்ப செய்யப்பட்டது. இதன் மூலமாகவும் வெளிநாடு வாழ் சகோதர்கள் பார்த்து பயன் பெற்றார்கள்.
கூடுதல் புகைப்படம் இன்ஷா அல்லாஹ் ...,

No comments:
Post a Comment