தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டல கடையநல்லூர் கூட்டமைப்பின் மாதந்திர கூட்டம்(30-05-14)அன்று அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையினால் இனிதே
நடைபெற்றது. இதில் மண்டல தாயி சகோ. முனீப் அவர்கள் "இன்றைய முஸ்லிம் சமுதாயமும் மார்கப்பணிகளும்" என்கிற தலைப்பில் ஆன் லைன் மூலம் மார்க்க உரையாற்றினார். அதன் பின்பு கிளைகளின் நடைபெற்ற நிகழ்வுகள் பற்றி ஆலோசனை செய்து கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. மக்கா நகர் கிளை மர்கஸிற்க்கு ஒரு மாற்று இடம் தேவைப்படுவதால் அதை சகோதரர்களுக்கு மத்தியில் எடுத்துரைக்கப்பட்டு மர்கஸ் பனிகள் அல்லாஹ்வுடைய கிருபையை கொண்டு சிரமமில்லாமல் அந்த பகுதியில் இன்னும் வீரியத்தோடு செயல்பட தகுந்த ஏற்பாடுகள் செய்ய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 2. டவுண் கிளைக்கு இடம் வாங்குவதற்கு மாநில தலைமையிடம் முறையாக பரிந்துரை கடிதம் பெற்று விரைவில் அனுப்பித்தர ஆலோசானை வழங்கப்பட்டது. 3. நமதூரில் பெண்கள் ஆண் துணை இல்லாமல் சர்வ சாதரணமாக குற்றாலம், தென்காசி போன்ற வெளியூர்களுக்கு ஆட்டோக்களிலும், பஸ்களிலும் பயணம் செய்கிறார்கள். இது மார்க்க அடிப்படையில் எந்தளவு விபரீதமானது என்பதை நமதூர் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு விழிப்புணர்வு போஸ்டர்கள், நோடீஸ்கள் பிரச்சாரங்கள் மற்றும் ஜூம்மா பயான் மூலம் தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த அனைத்து கிளைகளும் முயற்ச்சிகள் மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இறுதியில் கூட்டம் இனிதே துவாவுடன் நிறைவு பெற்றது..,
No comments:
Post a Comment