கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Jun 7, 2014

அடையாளம் தெரியாத நபரின் ஜனாஸா நல்லடக்கம்!

     இரண்டு தினங்களுக்கு முன்பு பழைய பஸ் நிலையம் எதிரில் அரசு மருத்துவமனைக்கு அருகில் இறந்து கிடந்த இனம் தெரியா நபரின்  




போட்டோவை நேற்று நாம் நம்முடைய பேஸ்புக்கில் வெளியிட்டு இருந்தோம். 

    இரண்டு தினங்களாக ஆகியும் அவர் யாரென்று அறியாத நிலையில், கடையநல்லூர் காவல் துறை மற்றும் உளவு துறை அதிகாரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனைத்து கிளை நிர்வாகிகளை தொடர்பு கொண்டு அடையாளம் தெரியா நபர் முஸ்லீம்மாக இருப்பதால், அவரை உங்கள் இயக்கம் சார்பில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அனைத்து கிளை தலைவர்களின் அவசர அலோசனைக்கு பிறகு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மக்கா நகர் கிளைக்கு சொந்தமான மையவாடியில் நல்லடக்கம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது. 

   06-06-14 அன்று மாலை 5.50 மணிக்கு பிரோத பரிசோதனைக்கு பிறகு காவல் துறை அதிகாரிகள் ஜனஸாவை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர் அதன்பிறகு நம்முடைய மையவாடிக்கு ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்து சென்று முறைப்படி நபிவழியில் தொழுகை வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் அனைத்து கிளை சகோதரர்களும் கலந்து கொண்டனர்.








No comments: