கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Dec 13, 2014

ரியாத் ஆலோசனைக் கூட்ட நிகழ்ச்சி!

      ரியாத் வாழ் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ) சகோதர்களின் மாதந்திர ஆலோசனை கூட்டம் 31-10-14 அன்று மாலை ரியாத்தில் தவ்ஹீத் 

செயலகத்தில் வைத்து சகோ. சேயன் செய்யது அலி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிளைகளில் நடைபெற்ற செயல்பாடுகள் மற்றும் கிளைகளில் இருந்து பெறப்பட்ட கடிதங்கள் பற்றி விளக்கப்பட்டு ஆலோசனைகள் செய்யப்பட்டது.


     டவுண் கிளையின் மதரஸா ஆண்டு விழா, மக்கா நகர் கிளை இடம் வகைக்கு மற்றும் பேட்டை கிளை சார்பில் வாங்க இருக்கும் ஆம்புலன்ஸ் வகைகளுக்கும் பொருளதாரம் வசுல் செய்து வழங்குவது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யபட்டது.

    இறுதியில் துவா உடன் கூட்டம் நிறைவு பெற்றது.  





No comments: