கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Oct 20, 2009

அன்றாட நடைமுறைகளும், ஓதவேண்டிய துஆக்களும்

தூங்கும் ஒழுக்கங்கள்

( 1.) ஓதவேண்டிய குர்ஆன் வசனங்கள்


1. நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு உறங்கச் சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து அதில் குல் ஹீவல்லாஹீ அஹது குல் அவூது பிரப்பில் ஃபலக் குல் அவூது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உட­ல் இயன்ற அளவில் தடவிக் கொள்வார்கள்.பிறகு தமது உட­ன் முன் பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள்.இவ்வாறு மூன்று முறை செய்வார்கள் .

அறிவிப்பவர் ஆயிஷா (ர­லி) நூல் புகாரி (5017)



2 . நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். (அவ்வாறு ஓதினால் ) உங்களுடன் பாதுகாவலர் ( வானவர் ) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார் . காலை நேரம் வரும் வரை ஷைத்தான் உங்களை நெருங்கவே மாட்டான் .

அறிவிப்பவர் அபூஹீரைரா (ரலி­) நூல் புகாரி ( 3275 )



3 . நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

' அல்பகரா அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை யார் இரவு நேரத்தில் ஓதுகின்றாரோ அந்த இரண்டும் அவருக்கு ( மனிதன் மற்றும் ஜின் இனத்தாரின் தீங்குகளி­ருந்து பாதுகாக்கப் ) போதுமானதாக ஆகிவிடும் ,

அறிவிப்பவர் அபூ மஸ்வூத் ( ரலி­ ) நூல் புகாரி ( 4008 )

( 2 ) தஸ்பீஹ் செய்தல்

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்

நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது அல்லாஹீ அக்பர் அல்லாஹீ மிகப் பெரியவன் என்று முப்பத்து நான்கு முறையும் அல்ஹமது ­ல்லாஹ் புகழனைத்தும் அல்லாஹ்விற்கே என்று முப்பத்து மூன்று முறையும் சுப்ஹானல்லாஹ் அல்லாஹ் மிகத் தூய்மையானவன் என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள் ,

அறிவிப்பவர்: அ­ லி (ரலி) நூல் புகாரி ( 3113 )

( 3 ) வலது புறமாக கன்னத்தில் கை வைத்துப் படுத்து பின் வரும் சூராக்களை ஓத வேண்டும்

1 . நபி ( ஸல் ) அவர்கள் இரவில் படுக்கைக்குச் செல்லும் போது தன்னுடைய கையை தன்னுடைய கன்னத்திற்குக் கீழே வைத்து அல்லாஹீம்ம பிஸ்மிக அமூத்து வ அஹ்யா என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் ஹீதைஃபா ( ர­ லி)  நூல் திர்மிதி ( 6314 )

பொருள் :

அல்லாஹ்வே உன்னுடைய பெயரைக் கொண்டே நான் மரணிக்கச் செய்கிறேன் உயிர் பெறவும் செய்கிறேன் .



2 . பர்ரா பின் ஆஸிப் ( ர­ ) அறிவிக்கிறார்கள்

நபி ( ஸல் ) அவர்கள் எனக்குக் கூறினார்கள் நீ உன்னுடைய படுக்கைக்குச் செல்லும் போது தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்து கொள் . பின்னர் உனது வலது கைப் பக்கமாகச் சாய்ந்து படுத்துக் கொள் .

பின்னர்

அல்லாஹீம்ம அஸ்லம்து வஜ்ஹீ இலைக் . வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக் . வ அல்ஜஃது லஹ்ரீ இலைக் . ரக்பதன்வ் வ ரஹ்பதன் இலைக் . லா மல்ஜஅ வலா மன்ஜஅ மின்க இல்லா இலைக் . அல்லாஹீம்ம ஆமன்து பிகிதாபிகல்லதீ அன்ஸல்த்த வபிநபிய்யிகல்லதீ அர்ஸல்த்த

என்ற துஆவை ஓதிக் கொள் . ( இவ்வாறு நீ சொல்­விட்டு உறங்கினால் ) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ தூய்மையானவனாய் ஆகிவிடுகிறாய் . இந்தப் பிரார்த்தனையை உனது இரவின் கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள் . நூல் புகாரி ( 247 )

பொரு‎ள் யா அல்லாஹ் நான் எனது முகத்தை உன்னிடத்தில் ஒப்படைத்துவிட்டேன் . எனது காரியங்களை உன்னிடத்தில் விட்டு விட்டேன் . உன்னிடத்தில் ஆதரவு வைத்தவனாகவும் உன்னைப் பயந்தவனாகவும் இதைச் செய்கிறேன் . உன்னை விட்டுத் தப்பிச் செல்லவும் உன்னை விட்டு ஒதுங்கி விடவும் உன் பக்கமே தவிர வேறிடமில்லை . யா அல்லாஹ் நீ இறக்கிய வேதத்தை நம்பினேன் . நீ அனுப்பிய உனது நபியையும் நான் நம்பினேன் .


இன்ஷா அல்லாஹ் தொடரும்...........

No comments: