நல்ல அண்டை வீட்டார்
”நல்ல அண்டை வீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பது ஆகியவை ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மத் 14830
தொல்லையைப் பொறுத்துக் கொள்ளுதல்அண்டை வீட்டார் என்று வரும் போது சில பிரச்சனைகள் ஏற்படத் தான் செய்யும். அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு, வாழ்நாள் பகைவர்களாக மாறி விடாதீர்கள்.அவர்கள் தரும் சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு அவருக்குச் சரியான அறிவுரைகளைக் கூறி திருத்தினால் இறைவனின் பேரருள் கிடைக்கும்.
ஒரு மனிதனுக்குத் தொல்லை தரும் அண்டை வீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளைப் பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்குப் போதுமானவனாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: ஹாகிம் 2446)
அண்டை வீட்டாரின் உரிமைகள் தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்வமான செய்திகளைப் பார்த்தோம்.இது தவிர அண்டை வீட்டார் தொடர்பாக ஆதாரமற்ற செய்திகளும், பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. அந்தச் செய்திகளையும் அவற்றின் தரத்தையும் பார்ப்போம்.அண்டை வீட்டார் தொடர்பாக வந்துள்ள ஆதாரமற்ற செய்திகள்
உள்ளத்தின் கோபத்தைப் போக்கும்அன்பளிப்புச் செய்யுங்கள்! ஏனெனில் அன்பளிப்பு உள்ளத்தின் கோபத்தைப் போக்கி விடும். ஓர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பின் துண்டை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை இழிவாகக் கருத வேண்டாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)நூல்: திர்மிதீ 2056
இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இந்த ஹதீஸின் இறுதியில், ‘இதன் மூன்றாவது அறிவிப்பாளர் அபூமஃஷர் என்பவரை அவரின் நினைவாற்றல் தொடர்பாகப் பல அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
வீட்டுப் பொருட்களை வீதியில் எறியுங்கள்
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து தன் அண்டை வீட்டாரைப் பற்றி புகார் செய்தார். ”நீ சென்று பொறுமையாக இரு!” என்று கூறினார்கள். அந்த மனிதர் (மீண்டும்) இரண்டாம் தடவையோ அல்லது மூன்றாம் தடவையோ (புகார் கூற) வந்த போது நபி (ஸல்) அவர்களிடம் ”நீ சென்று உன் வீட்டுப் பொருட்களையெல்லாம் வீதியில் எறி! மக்கள் என்னவென்று விசாரிப்பார்கள். நீர் அவர்களிடம் விவரத்தைக் கூறு! மக்கள் அவரைச் சபிப்பார்கள்; அல்லாஹ்வும் அவ்வாறே செய்வான்” என்று கூறினார்கள். அவரும் அவ்வாறு செய்தார் (நபிகளார் சென்னபடியே நடக்கவும் செய்தது. இதன் பின்னர்) அவரின் அண்டை வீட்டுக்காரர் வந்து, ”நீர் உம் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்! (இனிமேல்) நீ வெறுக்கும் எதையும் என்னிடம் காண மாட்டீர்!” என்று கூறினார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர )நூல்: அபூதாவூத் 4486
இச்செய்தியில் இடம் பெற்றிருக்கும் மூன்றாவது அறிவிப்பாளர் முஹம்மத் பின் அஜ்லான் என்பவரின் நினைவாற்றல் தொடர்பாக ஹதீஸ்கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். ‘இவர் நல்லவர் எனினும் அபூஹுரைரா (ர ) அவர்களின் செய்தியில் இவருக்குக் குழப்பம் ஏற்பட்டுள்ளது’ என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (இந்தச் செய்தியும் அபூஹுரைரா மூலமாகத் தான் அறிவிக்கப்பட்டுள்ளது.) மேலும் இமாம் முஸ் ம் அவர்கள் இவரை ஆதாரமாகக் கொள்ளவில்லை. இவரின் செய்திகளை துணைச் சான்றாகவே குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: தஹ்தீபுத் தஹ்தீப், தக்ரீபுத் தஹ்தீப்) மேலும் இவரை பிற்காலத்தில் வந்த ஹதீஸ்கலை அறிஞர்கள் அவரின் நினைவாற்றல் தொடர்பாக விமர்சனம் செய்துள்ளனர். இவரது 13 செய்திகளை இமாம் முஸ் ம் பதிவு செய்துள்ளார்கள். இவை அனைத்தையும் துணைச் சான்றுகளாகவே கொண்டு வந்துள்ளார்கள் என்று ஹாகிம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
பிற்கால சோதனை
”என்னுடைய இந்தச் சமுதாயம் எனக்குப் பின்னர் சோதனைக்கு உட்படுத்தப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ”அல்லாஹ் வின் தூதரே! எந்த முறையில்?” என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அண்டை வீட்டுக்காரன், தன் அண்டை வீட்டுக் காரனின் உரிமையை அறிந்திருக்க மாட்டான்” என்று கூறினார்கள்.
(நூல்: ஹக்குல் ஜார், பக்கம்: 2)
இந்த செய்தியும் ஆதாரப் பூர்வமானது அல்ல! இமாம் தஹபீ அவர்கள் ‘இது (நபிகளார் பெயரில்) இட்டுக்கட்டப்பட்டது’ என்று கூறியுள்ளார்கள்.
No comments:
Post a Comment