குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான மத்ஹபுச் சட்டங்கள்
அடிமைப் பெண் முன்னிலையில்...உடலுறவு அடிமைப் பெண் நேரடியாகப் பார்க்கும் விதத்தில் ஒருவன் தன் மனைவியுடன் உடலுறவு கொள்வதில் தவறில்லை. ஆனால் மனைவி நேரடியாகப் பார்க்கும் நிலையில் அடிமைப் பெண்ணிடம் உடலுறவு கொள்வது கூடாது.
நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன் பாகம் 6, பக்கம் 423
வெட்கம் ஈமானில் உள்ளது என்று சொன்ன இஸ்லாமிய மார்க்கத்தில் இப்படி ஒரு சட்டத்தை எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.
“ஓர் ஆண் மற்றொரு ஆணின் மர்ம உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு பெண் மற்றொரு பெண்ணின் மர்ம உறுப்பைப் பார்க்க வேண்டாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.
அறிவிப்பவர்: ஸஅத் பின் மாக் (ரலி) , நூல்: முஸ்லிம் 512
பால்ய விவாகம் வயதுக்கு வராத சிறுவர், சிறுமியை தகப்பன் அல்லது பாட்டன் திருமணம் முடித்து வைத்து விட்டால் வயதுக்கு வந்ததும் அவ்விருவருக்கும் சுய விருப்பம் கிடையாது. (அதாவது அந்தத் திருமண உறவை முறிக்க முடியாது)
நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 198
சிறுவர், சிறுமியின் பால்ய விவாகம் கூடும்.
நூல்: ஹிதாயா, பாகம் 1, பக்கம் 198
பால்ய விவாகம் கூடும் என்று மத்ஹபு கூறுகின்றது. ஆனால் இஸ்லாத்தில் பால்ய விவாகத்திற்கு அனுமதி இல்லை. உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (அல்குர்ஆன் 4:21) இந்த வசனத்தில் திருணமத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது. அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும். ஆனால் மத்ஹபோ சிறுவர், சிறுமியிடம் அதுவும் அவர்கள் அறியாத நிலையிலேயே அந்த ஒப்பந்தத்தைத் திணிக்கலாம் என்று கூறுகின்றது. பருவ வயதை அடைந்த பெண்ணாக இருந்தாலும், அவளது விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்தால் செல்லாது என்று மார்க்கம் வயுறுத்துகின்றது.
''கன்னிப் பெண்ணிடம் அனுமதி கோரப்படாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கக் கூடாது. கன்னி கழிந்த பெண்ணிடம் உத்தரவு பெறாத வரை அவளுக்கு மணமுடித்து வைக்கக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர) நூல்: புகாரி 6968
ஆனால் அறியாத பருவத்தில், அவர்களது விருப்பம் என்ன என்பதே தெரியாத நிலையில் திருமணம் முடித்து வைக்கலாம் என்று மத்ஹபு கூறுகின்றது.
மிரட்டல் திருமணம்
திருமணம், விவாகரத்து, விவாகரத்தைத் திரும்பப் பெறுதல், மனைவியுடன் உறவு கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்தல், போர் இன்றியே எதிரிகளிடமிருந்து கிடைக்கும் வெற்றிப் பொருளை எடுத்துக் கொள்ளுதல், ஹார் (மனைவியைத் தாய்க்கு ஒப்பாக்குதல்), அடிமையை விடுதலை செய்தல், பழிக்குப் பழி வாங்காது மன்னித்தல், சத்தியம், நேர்ச்சை ஆகிய பத்து காரியங்களையும் நிர்ப்பந்தப்படுத்தி செய்யலாம்.
நூல்: ஷரஹ் பத்ஹுல் கதீர் பாகம் 3, பக்கம் 489
திருமணம், விவாகரத்து உள்ளிட்ட காரியங்களை நிர்ப்பந்தப்படுத்தி செய்தால் அது செல்லும் என்று மத்ஹபு கூறுகின்றது. அதாவது ஒரு பெண்ணின் தந்தையைக் கத்தியைக் காட்டி மிரட்டி, உனது மகளை எனக்குத் திருமணம் செய்து வைக்கா விட்டால் கொன்று விடுவேன் என்று கூறி, அவளைத் திருமணம் செய்தால் அந்தப் பெண் அவனுக்கு மனைவியாகி விடுவாள் என்று இந்தச் சட்டம் கூறுகின்றது. அதே போல் கணவன், மனைவி ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் போது, யாரேனும் ஒருவர் வந்து, கத்தியைக் காட்டி மிரட்டி, நீ தலாக் விடு என்று கூறுகின்றான் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அந்தக் கணவன் தன் மனைவியைத் தலாக் விட்டால் அந்தத் தலாக் செல்லுபடியாகும், அதன் பிறகு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று இந்தச் சட்டம் கூறுகின்றது. ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டத்தின் படி யாரும், யாருடைய மனைவியையும் அல்லது எந்தப் பெண்ணையும் நிர்பந்தப்படுத்தி திருமணம் செய்து கொள்ளலாம். இந்தச் சட்டம் சரியானது என்று வைத்துக் கொண்டால் ஊரில் எந்தப் பெண்ணும் நிம்மதியாக நடமாட முடியாது என்ற நிலை ஏற்பட்டு விடும். ஹனபி மத்ஹபை நியாயப்படுத்தும் ஆம் ஒருவரை யாரேனும் மிரட்டி அவரது மனைவியை தலாக் விடச் சொன்னால் அவர் மனைவியை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து விடுவாரா? அல்லது நிர்ப்பந்தத்தில் தலாக் என்று கூறினாலும் அது தலாக் ஆகாது என்று கூறுவாரா? மத்ஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என்று மக்களிடம் சொல்க் கொண்டு, தங்களுக்கு ஒரு ஆபத்து என்று வந்தால் அந்த மத்ஹபைத் தூக்கி எறிந்து விடுவது தான் இந்த மத்ஹபு ஆலிம்களின் நிலைபாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முகலாய மன்னர்கள் தாங்கள் விரும்பிய பெண்களை எல்லாம் நிர்ப்பந்தப்படுத்தி திருமணம் செய்தல், அடுத்தவன் மனைவியை நிர்ப்பந்தமாக தலாக் விடச் சொல் திருமணம் செய்தல் போன்ற காரியங்களைச் செய்து வந்தனர். அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக எழுதப்பட்டவை தான் மத்ஹபுச் சட்டங்கள் என்பதற்கு ஹனபி மத்ஹபின் இந்த ஒரு சட்டமே போதுமான சான்றாக உள்ளது.
இஸ்லாத்தைப் பொறுத்த வரை நிர்ப்பந்தத்திற்கு அனுமதி உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நிர்ப்பந்தத்தில் செய்யப்படும் ஒரு காரியம் நிரந்தரமாகாது என்பது தான் திருக்குர்ஆன் வழங்கும் தீர்ப்பாகும். உதாரணமாக நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தனது மனைவியைத் தலாக் கூறி விட்டார் என்றால், அது வெறும் வாயளவில் சொன்னதாகத் தான் ஆகுமே தவிர உண்மையில் தலாக் ஆகாது.
அல்லாஹ்வை நம்பிய பின் அவனை மறுப்போர் மீதும், மறுப்பிற்கு உள்ளத்தில் தாராளமாக இடமளிப்போர் மீதும் அல்லாஹ்வின் கோபமும், கடும் வேதனையும் உண்டு. உள்ளத்தில் நம்பிக்கை வலுப் பெற்ற நிலையில் நிர்பந்திக்கப்பட்டவர் தவிர.
(அல்குர்ஆன் 16:106)
நிர்ப்பந்தத்தின் காரணமாக அல்லாஹ்வை மறுத்து, குஃப்ரான வார்த்தைகளைச் சொல் விட்டால் கூட அதனால் அவர் காஃபிராகி விட மாட்டார் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது. எனவே திருமணம், தலாக் என்று சொல் விடுவதால் மட்டுமே தலாக்காகவோ, திருமணம் முடித்ததாகவோ ஆகி விடாது என்பதை இந்த வசனத்திருந்து அறியலாம்.
இன்ஷா அல்லாஹ் வளரும்.....
No comments:
Post a Comment