கடையநல்லூரில் தஃவா பணியை மேம்படுத்த உங்களின் நன்கொடைகளை வாரி வழங்குங்கள் ...தொடர்புக்கு...kdnltntj@gmail.com!

Nov 26, 2009

தீவிரவாத இந்து அமைப்பை தடை செய்ய வேண்டும்!

கோவா கிராம பஞ்சாயத்து தீர்மானம்
மார்கோவா, நவ 12-_ சனாதன் சான்ஸ்தா எனும் தீவிரவாத இந்து அமைப்பை தங்கள் கிரா-மத்தில் செயல்பட அனு-மதிக்க கூடாது என்றும் அதனை தடை செய்ய-வேண்டும் என்றும் கோவா மாநிலத்தைச் சேர்ந்த பன்டேரா கிராம பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
சனாதன் சான்ஸ்தா-வின் ஆசிரமம் அமைந்-துள்ள ராம்நத்தியையும் உள்ளடக்கிய இந்த கிரா-மப் பஞ்சாயத்து, மார்-கோவா குண்டு வெடிப்-பைத் தொடர்ந்து, சனா-தன் சான்ஸ்தாவை தடை செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 2003 ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் சனாதான் சான்ஸ்தாவின் ஆசிரமம் அமைக்கப்பட்டது.
கடந்த அக்டேபர் 16ஆம் தேதி கோவாவின் வணிகத் தலைநகரான மார்கோவாவில் நடை-பெற்ற குண்டு வெடிப்-பில் சனாதன் சான்ஸ்தா உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டனர். காவல்-துறையின் விசாரணை-யில், அந்த இருவரும் வெடிகுண்டை வாகனத்-தில் எடுத்துச் செல்லும்-போது வழியிலேயே குண்டு வெடித்துவிட்ட-தாக அறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழ-மையன்று நடைபெற்ற பன்டேரா கிராமப் பஞ்-சாயத்து கூட்டத்தில், சனாதன் சான்ஸ்தாவுக்கு எதிராக கிராம மக்கள் கடும் கோபத்துடன் பேசினர். இதனை அடுத்து சனாதன் சான்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சனாதன் சான்ஸ்-தாவை தடை செய்வது-டன், ஆசிரமத்தின் நட-வடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் தீர்-மானம் நிறைவேற்றப்-பட்டுள்ளதாக பன்டேரா கிராமப் பஞ்சாயத்தின் செயலாளர் திவாகர் சலேகர் கூறியுள்ளார்.
நன்றி : விடுதலை


No comments: