கடையநல்லூர் ல் இன்று (2-11-2009) நகராட்சியை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் துனைத் தலைவர் ஜஃபருல்லாஹ்அவர்கள் தலைமை தாங்கினார்கள். இப்போராட்டத்தில் ஆண்கள் பெண்கள் உட்படநூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலான்கைக் குழு உறுப்பினர் அப்துந்நாசர்அவர்கள் கண்டன் கோஷங்கள் எழுப்பினார்கள். மேலும் மேலான்மைக் குழு உறுப்பினர்சைபுல்லாஹ் காஜா அவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.
தனது உரையில்:
பாம்பு கடியின் காரணமாக மரணமடைந்த சிறிமி நஜ்லாவின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகையாக ரூபாய் 2 லட்சம் தமிழக அரசு வழங்கவேண்டும் அதை நகராசட்சி உடனடியாக பெற்று தர ஏற்பாடு செய்ய வேண்டும்.
நகராட்சியில் புதிதாக குடிநீர் இணைப்பு பெறும்போது அதிகாரிகள் லஞ்சமாக ரூ 1500 கேட்கின்றனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
No comments:
Post a Comment