கடையநல்லூர் பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகையின் போது சைபுல்லாஹ் ஹாஜாவும் மற்ற ததஜ
சகோதரர்களும் சஃப்பினிடையே அமர்ந்து இடையூறு செய்தது சரியான செயலா? எந்த ஒரு காரணத்திற்காகவும் இவ்விதம் தொழுகையில் இடையூறு செய்வதற்கு மார்க்கம்
அனுமதிக்கிறதா? இபாதத் விஷயத்தில் அல்லாஹ்வுக்கே அநியாயம் இழைக்கத் துணிந்த சைபுல்லாஹ் ஹாஜா மற்றும் அவருடனிருந்த ததஜ தொண்டர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இது தான் அந்த மின்னஞ்சல்.
முக்கியப் பிரமுகர்களின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு பதிலளித்து வாயடைக்கச் செய்தது போலவே அர்த்தமற்ற கேள்விகளை எழுப்பி குழப்பம் விளைவிக்கும் சில்லரைகளையும் கவனித்தால் தான் ஃபித்னா முஸீபத் ஒழியும் என்று தெரிகிறது.
சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கு பெரிய அறிவு இருக்கத் தேவை இல்லை. ஆனால் விமர்சனம் செய்பவர்களுக்கும், கேள்வி என்ற பெயரில் பொய்களைப் பரப்புவோருக்கும் அறிவு இருக்க வேண்டும். சிந்திக்கும் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். இவ்விரு தன்மைகளும் இல்லாமல் விமர்சிப்பவர்கள் கேவலத்தைத் தான் சந்திக்க வேண்டி வரும்.
கொஞ்சம் மூளையைச் செலவிட்டால் அவர்களுக்கே தங்கள் கேள்வியின் அபத்தம் புரிந்து விடும் தரத்தில் உள்ள கேள்வியை பயங்கரமான கேள்வியைப் போன்று நினைத்துக் கொண்டு இதற்கு எங்கே பதில் என்று கேட்டு தம்மைத் தாமே பாராட்டிக் கொள்கின்றனர்.
கடைநல்லூர் பள்ளியில் தொழுகை நடக்கும் போது ஸைபுல்லாஹ் ஹாஜா தொழாமல் இருந்தார். அதற்கு என்ன நடவடிக்கை என்றும் மேற்படி நபர் கேட்கிறார். இதிலும் சிந்திக்கத் தெரியாத காரணத்தால் தான் இப்படி கேட்கிறார். தொழுவது வேறு தொழுகையை தனக்கு ஆயுதமாகப் பயன்படுத்துவது வேறு என்ற அடிப்படையை இவர் விளங்கவில்லை.இதற்கும் நாம் பதில் வெளியிட்டுள்ளோம். இல்லாவிட்டால் கூட கொஞ்சம் மூளையைச் செலவிட்டால் கேள்வி கேட்டவருக்கே விடை கிடைத்து விடும்.
அது போன்ற நிலையில் தன்னை வைத்து பார்ப்பது தான் சிந்திக்கும் சரியான முறை.கேள்வி கேட்ட நபர் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்தவராக இருக்கிறார். அந்த
இயக்கத்தின் நிர்வாகத்தில் ஒரு பள்ளிவாசல் உள்ளது. அதில் நிர்வாகத்தின் சார்பில் தொழுகை நடத்தும் பொறுப்பு அவரைச் சேர்ந்தது. மற்றவர்கள் தாமதமாக தொழுகை நடத்தினால் அவர் தடுக்க மாட்டார். ஆனால் அவர் நிர்வாகத்தில் உள்ள பள்ளி எங்களுக்குத் தான் சொந்தம் என்று இன்னொரு கூட்டம் சொந்தம் கொண்டாடி பள்ளி வாசலில் வெட்டு குத்து வரை நடந்துள்ளது என்று வைத்துக் கொள்வோம்.அந்தப் பள்ளிவாசலில் இவரது நிர்வாகம் எட்டு மணிக்கு தொழுகை என்று முடிவு செய்து நடத்தி வருகிறது. இந்த நேரத்தில் அந்த எதிரிக் கும்பல் 7.55 க்கு வந்து இகாமத் சொல்லி தொழுகை நடத்த முயன்றால் கேள்வி கேட்கும் இந்த மேதை என்ன செய்வார்? தொழுகை
தானே என்று கருதி அதில் சேர்ந்து தொழுவாரா? அல்லது தொழுகையைக் கெட்ட நோக்கத்துடன் இந்தக் கும்பல் பயய்ன்படுத்தப் பார்க்கிறது. பள்ளிவாசல் தனக்கு உரிமை என்று காட்டுவதற்காக செய்யப்படும் விஷமத்தனமான் செயல் என்று கருதுவரா? அந்த ஜமாஅத் தொழுகையிலும் சேர மாட்டார். முடியுமானால் அடித்து விரட்டி இருப்பார்.கடையநல்லூரிலும் இது தான் நடந்தது.
கடையநல்லூர் பள்ளிவாசல் நம்முடைய நிர்வாகத்தில் இருக்கும் போது தங்களிடம் தான் பள்ளிவாசல் உள்ளது என்பதற்கு ஆதாரம் திரட்டும் நோக்கில் வெளியூர் ரவுடிகளை அழைத்து வந்து தொழுகையைத் தவறாக பயன்படுத்தினர். அதனால் தான் தொழுகை நடக்கும் அந்த
நேரத்தில் கோவை அய்யூப் தொழாமல் பள்ளிக்கு வெளியே நின்றார். வீடியோவில் காண்க!
அவர்களின் தலைமையில் தொழுதால் அதை வீடியோ எடுத்து பள்ளிவாசல் தங்களிடம் தான் உள்ளது என்பதற்கு ஆதாரமாகப் பயன்படுத்துவது தான் திட்டம். (அவர்களில் யாரும் இப்போது பள்ளிக்கு வந்து தொழுவதில்லை)
அல்லாஹ்வையும், தொழுகை போன்ற மார்க்க விஷயங்களையும் தங்களின் ஆதாயத்துக்குப் பயன்படுத்துவது திட்டவட்டமாகத் தெரிந்தால் அதில் ஏமாறக் கூடாது. இது தானே சிந்திக்கும் முறை.
மேற்படி நபரின் வீட்டில் மற்றவர் உரிமை கொண்டாடுகிறார். அத்து மீறி நுழைந்து ஏழைகளுக்குச் சோறு போடுகிறார். ஏழைகளுக்குச் சோறு போடுவது நல்லது என்று விட்டு விடுவாரா? தொழுகை நேரம் வந்ததும் அங்கேயே ஜமாஅத் நடத்துகிறார். அதில் இவர் கலந்து கொள்வாரா?
இப்படித் தான் அறிவுடையவர்கள் சிந்திக்க வேண்டும். சிந்தித்திருந்தால் இதெல்லாம் ஒரு கேள்வியா என்று அவருக்கே தோன்றி இருக்கும்.
தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களுக்கு நாம் ஒரு செய்தியை அறிவுறுத்த விரும்புகிறோம். குழுமங்கள் என்ற பெயரில் ஏராளமான நபர்களுக்குச் செய்திகள், பொய்கள் பரப்பப்படுகின்றன. இந்தக் குழுமங்களை நடத்துவோர் யார் என்பது சில வேளைகளில் தெரியலாம். சில வேளைகளில் தெரியாமல் முகமூடி போட்டும் நடத்தலாம்.ஆனால் அதில் கருத்துச் சொல்வோர் யார் என்பது தெரியாது. தன் பெயரை மறைத்துக் கொண்டு நடுநிலை போர்வையில் கள்ளத்தனம் செய்வோர் தான் மலிந்துள்ளனர். தாங்கள் யார் என்பதை மறைத்துக் கொண்டு நடத்தப்படும் இந்த நாடகத்தில் சகோதரர்கள் பங்கெடுக்காமல் இருந்தால் போதும். இந்த ஃபித்னாக்கள் ஒழிந்து விடும்.
No comments:
Post a Comment